Saturday, October 4, 2008

67. சரோஜாவும் வில்லனுங்களும் ஸ்கூல் பையனுங்களும்

சரோஜா படம் வந்ததும்தான் வந்துச்சு.. வில்லனுங்க எல்லாம் இப்போ ஹீரோ லெவெலுக்கு கெட்-அப் அணிஞ்சுட்டு சுத்துறாங்க. கோடான கோடி பாடல் கண்டிப்பா எல்லாரும் பார்த்திருப்பீங்க.. பார்க்காதவங்க இதோ இதை பாருங்க:



பார்த்துட்டீங்களா? பார்த்துட்டீங்களா?
இப்போ இந்த பாடல் நம்ம பசங்க க்ரூப்ல எவ்ளோ எஃபெக்ட் ஆகியிருக்குன்னு இதுல பாருங்க.. பள்ளிக்கு போய் படிங்கடான்னு அனுப்புனா இவங்க பண்ற கூத்தை பாருங்க. :-)



எப்போதுமே ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற பசங்கதான் ரொம்ப எஞ்சாய் பண்ணுவாங்க. அவங்க அடிக்கிற லூட்டி:


Thursday, September 18, 2008

66. இனம் மாறலாம் குணம் ஒன்றுதான்..

ரோஜா - பல பேருக்கு வாழ்வு கொடுத்த படம். அர்விந்த் ஸ்வாமி, மதுபாலா, ரஹ்மான், உன்னி மேனன், சுஜாதான்னு பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். எல்லா புகழும் மணிரத்னம் ஒருவருக்கே!

சரி, இந்த படத்துல என்ன ஸ்பெஷல்? நிறைய சொல்லலாம். மத்தம் இன்னொரு நாளுக்கு வச்சிக்கலாம்.

இப்போ இங்கே இந்த காட்சி பாருங்க:


நம்ம ஹீரோ இந்தப்படத்துல பிணை கைதியா இருக்காரு. அப்போ தேசியக்கொடி எரியிறதை பார்த்ததும் அவருக்குள்ளே இருக்கிற தேசப்பற்று கொதிக்குது. கைகள் கட்டப்பட்டும் அடைத்தும் வைத்திருப்பதையும் கண்டுக்காமல் நம்ம ஹீரோ ஓடுறாரு. அவரோட ஒரே எண்ணம் எப்படியாவது அந்த கொடியை காப்பாத்தனும்.. தீப்பற்றி எறியும் அந்த நெருப்பை அணைக்கணும். எப்படி அணைப்பாரு? கைதான் கட்டி போட்டிருக்காங்களே? உருண்டு பிரண்டு எப்படியாவது அணைக்கிறாரு. அந்த நேரம் ஒரு தீவிரவாதி அதை தடுக்கிறான். அதையும் கண்டுக்காமல் எப்படியாவது தேசியக்கொடியை காப்பாற்றுராரு பாருங்க நம்ம ஹீரோ. அவர் நிஜமாலுமே அந்த காட்சியில ஹீரோதான். அதை சித்தரித்த இயக்குனரும் ஒரு ஹீரோதான். அதை அழகாய் படமாக்கிய ஒளிப்பதிவாளரும் ஒரு ஹீரோதான். தேசியக்கொடிக்கு யாரு உயிர் இல்லைன்னு சொல்வாங்க? உயிர் இருக்கு! அதுக்கு இந்த காட்சி ஒரு சான்று.

பல உலக தர போட்டிகளில் விளையாட்டாளர்கள் வெற்றிப்பெற்று பதக்கம் வாங்குவாங்க. அந்த காட்சி பார்த்திருக்கீங்களா? இதுக்கு முன்னாடி எத்தனையோ பதக்கங்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் தன்னுடைய தேசியக்கொடி மேலே ஏறும்போதும், தன்னுடைய தேசியக்கீதம் அரங்கில் ஒலிக்கும்போதும் கண்டிப்பா அவர்களை அறியாமலேயே கண்கள் கலங்கும். இதுவும் ஒரு சான்று.

Monday, July 28, 2008

65. பொய் சொல்ல போறோம்

பொய் சொல்ல போறோம் என்ற படம் வெளியாவதற்கு முன்னரே பரப்பரப்பாய் பேசப்படுகின்றது. இதில் ப்ரியதர்ஷன் - பி. வாசு சண்டை இன்னும் மசாலா சேர்த்து சூடா ஆகியிருக்கிறது. இந்த நேரத்துல படத்தில் ஒரு பாடல் "பொய் சொல்ல போறோம்" ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பாருங்களேன்..

Sunday, July 27, 2008

64. தளபதி எங்கள் தளபதி

சூப்பர் படங்கள் லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய படம் தளபதி.

தளபதியில் முக்கியமாக பேசப்பட்டது நட்பின் ஆளம். சூர்யா - தேவா நட்பு

ஒரு கட்டத்தில் கலேக்டருக்கும் தேவா கோஷ்டிக்கும் table talk நடக்கும். அமைதியா ஆரம்பிச்சு, ரெண்டு ரெண்டு வார்த்தையா பேச ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிச்சு, ரைமிங்கா பேசி, அப்படியே அணல் பறக்குற அளவுக்கு வளரும்.. கொஞ்சம் கொஞ்சமா அந்த சூடு ஏறும் பாருங்க. அது ஒரு அருமையான கட்டம். கடைசி வரை அரவிந்த்சாமி கூலா பேசுவாரு பாருங்க. அப்படித்தான் அவரு நிறைய பேர் மனசுல இடம் பிடிச்சாரு.

"நிறுத்தனும்.. எல்லாத்தையும் நிறுத்தனும்" --> இது இப்போ வரைக்கும் பேர் போட்ட வசனங்களில் ஒன்று

இதுக்கு மம்முட்டி ஒத்த வார்த்தையில் பதில் சொல்வார் பாருங்க --> "முடியாது"



தளபதியில ஒரு காட்சி.. ரஜினி ஒரு படிக்கட்டுல உட்கார்ந்திருப்பாரு. ஷோபனா அவரை தேடி அந்த இடத்துக்கு வருவாங்க. அந்த இடத்துல காமேரா ஏங்கல் சூப்பரா இருக்கும். ஷோபனா வந்து "எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க"ன்னுவாங்க. அதுக்கு ரஜினி சைலண்டா இருப்பார். திரும்ப ஷோபனா பேசுவாங்க. "யாருன்னு கேட்க மாட்டீங்களா?"

ரஜினி திரும்பி "யாரு?"ன்னு கேட்பாரு.

அதுக்கு அவங்க "கலேக்டர்"ன்னும்பாங்க.

உடனே ரஜின் எழுந்திருச்சி "உங்களுக்கெல்லாம் வெள்ளை தோளு, நுனி நாக்குல நாலு இங்கிலீஷ் வார்த்தை.. இதெல்லாம் வேணும்" (டயலோக் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்) அப்படி ஆவேசமா ஷோபனாவை பார்த்து கேட்பாரு. அந்த கட்டத்துல ரஜினியோட கோபம், விரக்தி, எல்லாவற்றையும் தாண்டி ஷோபனா மேலே வச்சிருக்கிற காதலும் அந்த வலியும் காட்டுவார் பாருங்க.. வரேவா.. இந்த வீடீயோ க்ளீப் கிடைக்கல. பரவால்ல.. படத்தையே பார்த்துடுங்க. :-)

Saturday, July 26, 2008

63. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ!

இந்த வீடீயோல ரீமிக்ஸ் பண்றாங்க பாருங்க. அதை நான் ரொம்ப ரசிப்பேன். இப்போ இன்னைக்கு ரொம்ப ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறது இதுதான்.

என்னை பொறுத்த வரை ஆடியோ வீடீயோ சிங்க் (sync) பெர்ஃபெக்ட்டா இருக்கு. :-) அஜித் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு ஆடுறதும் அதை விஜய் ஒளிஞ்சிருந்து பார்க்கிறதும்.. சூப்பரோ சூப்பர். படத்தில் வர்ற பாடல்தான் ஒரு கதை அல்லது தீம்க்கு ஏற்றாற்போல் இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. என்னை பொறூத்த வரை இப்படி ரீமிக்ஸ் பண்ணும்போதும் ஏதாவது ஒரு தீம் மனசுல நினைச்சிக்கிட்டு அது பண்ணும்போதும் நொம்ப அருமையாக வரும். பாடல் முழுதுமே ரசித்தேன். கண்டிப்பாக நீங்க 2:26 முதல் 2: 32 வரை பார்க்க வேண்டும்.

Friday, July 25, 2008

62. குசேலனின் டிரேயிலர்

ச்சும்மா அதிருதுல்ல.. 31 ஜூலை உலகமெங்கும் எல்லா டியேட்டர்களும் ச்சும்மா அதிரப்போகுதுல்ல. :-))



Thursday, July 24, 2008

61. வருத்தப்படாத நாயகனின் நாட்டாமை அவதாரம்

கைப்புள்ளன்னாலே காமேடி, கலக்கல், நகைச்சுவை, சிரிப்பு..

ஆனால், வடிவேலு ஒரு குணச்சித்திர வேடமேற்று நடித்தால் எப்படி இருக்கும்? அதுவும் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் சின்ன கவுண்டரா நடித்தால் எப்படி இருக்கும்.. வருத்தப்படாத நாயகன் என்றும் இவனே! :-)

Wednesday, July 23, 2008

60. தூம் 5 டிரேயிலர்

Kollywood ஹிர்திக் ரோஷன்.. வளர்ந்து வரும் ஹாலிவூட் ஸ்டார். இவர் படம் மட்டும் ஹாலிநூட்ல ரிலீஸ் ஆச்சுன்னா டாம் க்ரூஸ் எல்லாம் மூட்டை முடிச்சு கட்டிட்டு ஊரு பக்கம் பொக வேண்டியதுதான்..

இந்த பிரமாண்ட ஹீரோ தூம் 1,2 கலக்கி தூம் 3-இல் வித்தியாச கெட்டப்ல வரப்போற அபிஷேக் பச்சனையே ஓரங்கட்டிட்டார். தூம் 4 கதை ரெடியாகிவிட்டதால், தூம் 5-இல் இந்த பிரமாண்ட ஹீரோ நடிக்கவிருக்கிறார். டிரேயிலர் வெளியாக்கிட்டாங்க. பார்த்து ரசிங்க மக்களே.. (படம் தமிழில் டப் பண்ணியாவது வெளியாக்கிடலாம் :-P)

Tuesday, July 22, 2008

59. ஊறுகாயாக சுந்தர் .சி

விஜயகாந்த் விஜயகாந்த் விஜயகாந்த் (ச்சும்மா ஒரு எக்கோ..) எப்பேர் பட்டவரு. மீசையை வளைச்சா கெட்டவங்க பறந்து போய் விழுவாங்க. கண்ணாடி மேலே தூக்கி போட்டு அந்து திரும்ப அவர் கண்ணுல வந்து அமர்வதுக்குள்ள 10 பேரை துவம்சம் செய்திடுவாரு. One மேன் ஆர்மியா இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றிய / காப்பாற்றிக்கொண்டிருக்கிற நல்லவர்(!!)..

இவருக்கோ வயசாகிட்டு போகுது. (இப்படி சொன்னா விஜயகாந்த் தீவிர ரசிகர் நிஜமா நல்லவன் தலைமையில ஆட்டோ என் வீட்டை தேடி வரும்ன்னு தெரிஞ்சும் நான் இந்த உண்மையை உளறிட்டேன்).. :-P இவருக்கு ஒரு ரிப்ளேஸ்மெண்டா.. இல்ல இல்ல ஒரு வாரிசா யாராவது வேணாமா? உருவாகிவிட்டது.. இந்த வீடீயோ க்ளிப்பை பார்த்தால் கண்டிப்பாக விஜயகாந்த் சுந்தர் சிக்கிட்ட தோற்றுவிட்டார் என்றே சொல்லலாம்..



சொல்ல மறந்துட்டேனே.. இன்னைக்கு நமக்கு ஊறுகாய் சுந்தர் .சி தான்.. அதான் இன்றைய தலைப்பு. :-P

Monday, July 21, 2008

58. சுஜாதா unplugged

இந்த வாரம் தேன்கிண்ணத்தில் சுஜாதா வாரம். மிஸ் பண்ணிடாதீங்க. இப்போ சுஜாதா, SP பாலசுப்ரமணியம், ஹரிஹரன் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ரஹ்மானின் பியானோ இசையில் பாடும் பாடலை கேளுங்க. இது ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது. சூப்பரா இருக்கும். :-)

Sunday, July 20, 2008

57. கஜினி + தைத்தன் = அமீர்

ஹிந்தி கஜினி படத்துக்காக அமீரின் உழைப்பு எவ்வளவு கடினமாய் இருக்குன்னு எல்லாரும் அறிந்ததே. படம் இப்போது ரெடியாகிடுச்சு. கஜினி லூக்குடன் தைத்தன் கைக்கடிகாரத்தின் விளம்பரத்தில் அமீரை பாருங்க. :-)

Saturday, July 19, 2008

56. கருப்பு மாணிக்கத்துக்கு90 வயது

நேற்று தன் 90-ஆவது வயது நிறைவை கொண்டாடிய நெல்சன் மண்டேலாவுக்கு முதலில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு அவரின் ஆரம்ப கால வாழ்க்கையும், தன் நாட்டு சுதந்திரத்துக்காக அவர் போராடிய டக்குமெண்டரியையும் பாருங்க. சந்தேகமே இல்லாமல் இவர் ஒரு கருப்பு மாணிக்கம்; ஒரு சகாப்தம்..

Friday, July 18, 2008

55. புகைப்பிடிப்பது உடலுக்கு கெடுதி

தலைப்புல சொல்லியிருப்பது போல எல்லா நாடுகளிலும் அரசாங்கம் சொல்லிட்டேதான் இருக்கு. சிகரட் பாக்கேட்ஸ்களிலேயே "புகைப்பிடிப்பது உடலுக்கு கெடுதி" என்று பெரிதாக எழுதப்பட்டிருக்கும். ஆனாலும், சிகரட் அமோக விற்பனையாகும். புகைப்பிடிப்பவர்கள் பிடித்துக்கொண்டேதான் இருப்பாங்க. இந்த மாதிரி ஒரு இடத்துல இவர் இருந்தாரென்றால் இப்படிதான் நடக்குமா? ;-)

Thursday, July 17, 2008

54. ஜோர்ஜ் புஷ்

இவரை ஒருசர்வாதிக்காரி; ஜனாதிபதி என்றெல்லாம் சொல்கிறார்கள். மறுப்பக்கம் இவரைப் போல் ஒரு முட்டாளும் இல்லைன்னு சொல்றாங்க. சில நேரம் காமெடியும் பண்ணுவார். இவரின் முட்டாள்தனத்தையும் சில காமெடி காட்சிகளையும் பாருங்க.

Wednesday, July 16, 2008

53. டாலேர் மெண்டியின் குசேலன்

குசேலம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இப்போ பட்டித்தொட்டிகளிலும் பிரபலமாக பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது (பாடல்கள் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம்.). ஓ ஜாரே பாடலை டாலேர் மெணடி (Dahler Mehndi)-ஐ பாட வைத்திருக்கிறார் GV பிரகாஷ். அவர் ஸ்டூடியோவில் இந்த பாடலை பாடும்போது...

Tuesday, July 15, 2008

52. கால்பந்து விளையாட்டில் காமெடி

கால்பந்து ரசிகரா நீங்கள்? அப்படின்னா கடந்த இரண்டு வாரத்துக்கு முன் முடிவடைந்த UEFA championship பார்த்திருப்பீங்க. ஷாக்கான நிகழ்வுகள் நிறைய நடந்தன. ம்ம்.. அதை விடுங்க. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸா கால்பந்து விளையாட்டில் நடந்த நில நகைச்சுவை சம்பவங்களை பாருங்க..

Monday, July 14, 2008

51. லொடுக்கு பாண்டி ஸ்பெஷல்

பாலா படங்கள் சீரியஸாகவும், மனதை கனக்க செய்யும் கதைகளாக இருந்தாலும், அவருடைய படங்களில் வரும் நகைச்சுவை துணுக்குகள் மிகவும் ரசிக்கவே வைக்கின்றன.

நந்தாவில் பாப் இசை பாடகர் கருணாஸுக்கு நகைச்சுவை நடிகராக இண்ரோ கிடைத்தது. அவரும் தன் பங்குக்கு நன்றாகவே செய்திர்ந்தார். இப்போது பல படங்கள் நடித்திருந்தாலும் அவரே நந்தா படமளவு எந்த படமும் திருப்தீ அளிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த காட்சியை பாருங்க:

Sunday, July 13, 2008

50. நம்மளை வச்சு காமேடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கையா...

ஒரு ஸ்டேஜ் ஷோல வடிவேலு பண்ற காமெடியை பாருங்க. நன்றாக சிரிக்கும்படியா இருக்கு. அட.. ரஜினி கூட எப்படி எஞ்சாய் பண்றாருன்னு பாருங்க.



Saturday, July 12, 2008

49. பாடகி சுனிதா சாரதி தேடுகிறார்

பல பாடகர்கள் சினிமா மட்டும் அல்லாமல் அதையும் தாண்டி classical, ஆன்மீகம் போன்ற பாடல்களும் பாடுகிறார்கள். பாடகி சுனிதா சாரதி நேசிப்பாயா எனும் christian ஆல்பத்தில் பாடியிருக்கார். மெலோடியான பாடல். பாடல் காட்சியில்.. அடடே! அவரேதான்..



பி.கு: சுனிதா சாரதியின் கத்தார் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யனுக்கு இந்த பதிவு பரிசாக.. ;-)

Friday, July 11, 2008

48. சக்கரக்கட்டி இனிக்குமா? கசக்குமா?

சக்கரக்கட்டி.. படம் எடுக்க ஆரம்பித்து 2 வருடத்துக்கு மேலே ஆகிவிட்டது. இதோ இன்று சக்கரக்கட்டி ஆடியோ ரிலீஸ். ஆனால், ஒரு மாதத்துக்கு முன்னவே இந்த படத்தின் பாடல், ஹரீஷ் ராகவேந்திரா குரலில் கூட் மார்னிங் தமிழ்நாடே பாடல் இணையம் முழுதும் சுற்றிவிட்டது. பாடல் நன்றாக இருக்கிறது. ரஹ்மான் இசையென்றால் சும்மாவா! இதுதான் ரஹ்மான் இசையில் ஹரீஷ் பாடும் முதல் பாடல். அவருக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. பாடல்கள் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பது என் கருத்து. படமும் இதேப்போல் வெற்றியை காணுமா? படம் வந்ததும்தான் கணிக்க முடியும் போல இருக்கிறதே. :-)

Thursday, July 10, 2008

47. அவதாரம் - A Salute To The Legend

தசவதாரம் பதிவுகள் தமிழ்மணத்தில் ஓய்ந்த நிலையில் யூடியூப்பில் படு சூடாக பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டது தசவதாரம்.

அவதாரம் - A Salute To The Legend என்ற தலைப்பில் கமலுக்காக சொந்தமாக வரிகள் எழுதி இசையமைத்து பாடி வீடியோ க்ளிப்பையும் உருவாக்கியிருக்காங்க. எடிட்டிங் மிகவும் அழகாக இருக்கின்றது. இவ்வேளையில் இந்த இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Wednesday, July 9, 2008

46. கேப்டனும் சண்டை காட்சியும். அஸ்கு புஸ்கு!

கேப்டன் சண்டை காட்சின்னாலே கலந்து கட்டி அடிப்பாரு.. ச்சும்மா பறந்து பறந்து சண்டை போட்டு இந்தியாவை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்துவார். ஹை.. நீங்க நினைப்பது தவறு. இன்றைய காட்சியில் கேப்டன் இல்லை. கேப்டனை போலவே "சூப்பரா" சண்டை போடும் தெலுங்கு நடிகர், ஜூனியர் NTR!!!! படம் பெயர் கூட ஏற்கனவே கேப்டன் நடிச்ச படம் பெயருடன் ஒத்து போகுது.. படம் பெயர் நரசிம்மா.. இந்த படத்தை ஹிந்தியில் வேற டப் பண்ணியிருக்காங்க. என்ன கொடுமை ஆயில்ஸ் இது!!!

Tuesday, July 8, 2008

45. சிக்ஸ் பேக்ஸ் சூர்யா

நேற்று வாரணம் ஆயிரத்தை பற்றி சொன்னதும், எல்லா இதழ்களிலும், இணையத்தளங்களிலும் சூர்யா & சிக்ஸ் பேக்ஸ்ன்னு போட்டோவுடன் வருது. அது எந்த அளவு உண்மைன்னு கொஞ்சம் சொல்லுங்க மை ஃபிரண்ட்-ன்னு கேட்குறாங்க. இந்த அளவு உண்மைங்க.. நீங்களே பாருங்க.

Monday, July 7, 2008

44. வாரணம் ஆயிரம்

சூர்யாவின் கட்டுக்கோப்பான உடலை பார்த்ததுமே பலர் கண்டிப்பா வாரணம் ஆயிரம் பார்க்கணும். அப்படி என்ன ஸ்பெஷல்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு ஆர்வமா இருக்காங்க. அதுவும் கௌதம் மேனனின் படமாச்சே. அதுவும் ஆர்வத்தை தூண்டுது. ஒரு இளைஞன் முதல் 60 வயது கிழவன் வரை பல கெட்டப்களில் வருகிறார் சூர்யா என்பது கொசுறு தகவல். ஆகஸ்ட் 15-இல் வாரணம் ஆயிரம் வெள்ளித்திரையில் பாருங்க. இப்போ making of வாரணம் ஆயிரம் பாருங்க.

Sunday, July 6, 2008

43. ஆட்ரா ராமா

"ஆட்ரா ராமா ஆட்ரா ராமா"

"விஜி.. விஜி.. சீனு. விஜி நான்...."

இந்தா ரெண்டு டயலோக் மட்டும்தான். ஆனா காட்சி???? பல விருதுகளை குவித்த காட்சி..

படம் முழுக்க ஸ்ரீதேவி மனநலம் சரியில்லாமல் நடித்திருந்தாலும் அந்த கடைசி 5 நிமிட காட்சியில் எல்லார் திறமையையும் மிஞ்சீவிடுவார் கமல்.


Saturday, July 5, 2008

42. விநாயகரின் பிறப்பு வரலாறு

நேற்று என் ஆபிஸ்ல வேலை செய்யுற என் நண்பர் ( ஜெர்மன்காரர்) கேட்டார், "ஏன் உன் கடவுள்களில் ஒருத்தருக்கு யானை முகம் இருக்கு?"ன்னு. அவர் கேள்விக்கு பதில் சொல்லிட்டு யூடியுப்ல அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது விநாயகரின் பிறப்பை பற்றி ஒரு அனிமே பார்த்தேன் அவருக்கு இதை காட்டிவிட்டு உங்களுக்காகவும் வலையேற்றுகிறேன்.

Friday, July 4, 2008

41. நிழல் நிஜமாகிறது

எப்போதும் நம் நிழல் நம்மை தொடர்ந்துக்கொண்டே இருக்குமாம். அது உண்மைதான். ஆனால், நிழலுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதுக்கு மேலே அதனால் ஒன்றும் செய்ய இயலாதுதானே? ஆனால், இது மட்டும் எப்படி சாத்தியம்? ;-)

Thursday, July 3, 2008

40. சுஜாதா, ஷ்வேதா மற்றும் அண்ணன் கோபிநாத்

சங்கீதத்தில் ஒரு அபூர்வ காட்சி. ஒரு நட்சத்திரமும் அதனின் குட்டி நட்சத்திரமும் சேர்ந்து முதன் முதலில் மின்னும் காட்சி. பார்த்திருக்கீங்களா? சுஜாதாவும் அவர் மகள் ஷ்வேதாவும் சூர்யா அவார்ட்ஸில் பழைய பாடல்களிலிருந்து புதிய பாடல்கள் வரை பாடுகிறார்கள். ஒரே குரலில் இரண்டு பேர் பாடினால் எப்படி இருக்கும். ஏற்கனவே அம்மாவின் குரல் தித்திக்கும் தேன் போல இனிக்கும். இதில் மகளுடன் சேர்ந்து பாடும் டூயட் எப்போதும் காதில் இனிக்கும் கீதம்தானே..



இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோபி அண்ணனுக்கு இந்த இசைப்பதிவு பரிசளிக்கிறேன். :-)

Wednesday, July 2, 2008

39. கண்ணா நீயும் நானுமா?

இந்த ரீமிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

"நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா" பாடலுக்கு மைக்கேல் ஜாக்ஸன் எப்படி ஆடியிருக்கார் பாருங்க.

Tuesday, July 1, 2008

38. வடிவேலுவும் சந்திரமுகியும்

இதுவரை சந்திரமுகின்னா.. அதுவும் ரா ரா பாடல்ன்னா.. ஜோதிகா.. அடுத்து ரஜினி.. அடுத்து என்ன கொடுமை சரவணன் இது.. ச்சீச்சீ.. பிரபு.. இப்படிதான் சொல்லுவாங்க. ஆனால் இந்த வீடியோ க்ளிப் பார்த்தால் சந்திரமுகின்னா வடிவேலுவும் ஜோதிகாவும்ன்னு சொல்லுவீங்க பாருங்க. ;-)

கும்பிட போன தெய்வம் மற்றும் பாட்ஷா பாரு பாடல்கள் அருமையா பொருந்துது.

Monday, June 30, 2008

37. Crazy Dog vs சிம்பு

Crazy Dog பாடல் கேட்டிருக்கீங்களா? அந்த காட்சியை பார்த்திருக்கீங்களா?
எல்லாரும் ஒரு காலத்துல ரசிச்சு கேட்ட பாடல் அது.

இதையும் நம்ம பசங்க விட்டு வைக்கலை. நல்லா ரீமிக்ஸ் எல்லாம் பண்றாங்க. சிம்பு Crazy Dog-ஆ மாறியிருந்தால் எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை. :-)

Sunday, June 29, 2008

36. அக்கா மக அக்கா மக

90-களில் வெளியானது தி கீய்ஸ் (The Keys)-இன் அக்கா மக ஆல்பம். இதுவே மற்ற மண்ணின் மைந்தர்களுக்கு ரேப், ரோக் பாடல்களில் ஆர்வம் காட்டுமளவு பிள்ளையார் சுழியாக இருந்தது என சொல்லலாம். இந்த பாடலுக்கு மைக்கேல் ஜாக்ஸன் ஆடியிருந்தால் எப்படி இருக்கும்?



இந்த பதிவு துர்காவுக்கு பரிசளிக்கிறேன்.

Saturday, June 28, 2008

35. செயின் எங்கே? மோதிரம் எங்கே?

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்; நல்ல நடிகன்; இப்படி பலர் பலவற்றை சொல்லலாம். ஆனால், என்னிடம் கேட்டால், ரஜினி என்றால் ஒரு நல்ல காமேடியன் என்று சொல்லுவேன். அட.. நான் தப்பா ஏதோ பேசுறேன்னு சண்டைக்கு வராதீங்கப்பா. நான் சொல்வது என்னவென்றால் ரஜினிகாந்த் காமேடி பண்றதில் கில்லாடி; மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நிகராக.. இல்லை இல்லை ஒரு சில நகைச்சுவை நடிகர்களை விட இன்னும் சூப்பரா நகைச்சுவை பண்ணுவார்.

அந்த நகைச்சுவை நடிப்பைப் பார்க்கவே பல தடவை ஒவ்வொரு படங்களையும் பார்க்கலாம். குரு சிஷ்யனாகட்டும், மன்னன் ஆகட்டும், படையப்பா ஆகட்டும், மாப்பிள்ளை ஆகட்டும். எல்லா படங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்க நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அவைகளில் மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் வேலக்கு கட் அடிச்சுட்டு சினிமா போவாங்க. முதல் இரண்டு டிக்கேட்களை வாங்கினால் தங்க சங்கிலியும் மோதிரமும் கிடைக்குமாம். அங்கே அவர்களுடைய முதலாலி விஜயசாந்திதான் சங்கிலியையும் மோதிரத்தையும் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ரெண்டு பேரும் தப்பிக்க நினைப்பாங்க. அங்கே இருக்கிற மக்கள் அவங்க இரண்டு பேரையும் பிடிச்சு மேடையில் ஏற்றி விட்டுடுவாங்க. அந்த காட்சி முழுவதுமே நன்றாக சிரிக்க வைக்கும். ரஜினி மற்றும் கவுண்டமணியின் முகப்பாவைகளும் அருமையா இருக்கும்..

"மூஞ்சியை சிரிச்ச மாதிரியே வச்சிட்டு சொல்லுங்க"ன்னு கவுண்ட்மணி செய்யுற முகப்பாவையும் சூப்பரா இருக்கும். பாருங்க இந்த காட்சியை.

Friday, June 27, 2008

34. மைக்கேல் ஜாக்ஸனாக மாறிய விஜய டி. ராஜேந்தர்

விருவிருப்பான நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்ஸன்தான். பிரபு தேவாவையே இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்றுதான் சொல்லுகிறோம். ஆனால், விஜய டி ராஜேந்தர் மைக்கேள் ஜாக்ஸனாகவே மாறிட்டாரே!!! அந்த கொடுமையை பாருங்க.. இதுவும் நல்லாத்தான் இருக்கு. :-)

Thursday, June 26, 2008

33. நன்றாக இருக்கிறது இந்த விளம்பரம்

இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உங்களுக்கு?

Wednesday, June 25, 2008

32. பொல்லாதவனா இந்த பொல்லாதவன்?

வர வர எதைத்தான் காப்பி யடிக்கிறதுன்னு தெரியல. தனுஷ் என்னமோ "பொல்லாதவன் படம் வேற படமே இருக்க முடியாது. வெற்றிமாரனுடைய வெற்றியே இப்படி ஒரு படம் கொடுத்ததுதான்"ன்னு டயலோக்கெல்லாம் விட்டுட்டு திரிஞ்சாரு. அதுவும் அந்த கடைசி க்ளைமெக்ஸ் காட்சிக்காக ஆறு மாதமா கஷ்டப்பட்டு பாடி பில்ட் பண்ணேன்னு எல்லாம் சொன்னாரு. இப்பத்தானே தெரியுது எதுக்கு பாடி பில்ட் பண்ணியிருக்காருன்னு...



Apocalypto படத்துல வந்த சண்டை காட்சியை அப்படியே எடுக்கணும்ங்கிறதுக்காக அந்த ஹீரோவை போலவே இருக்கணும்ன்னு நெனச்சிருக்கார் போல. ;-) சண்டை காட்சி மட்டும்தான் காப்பின்னு நெனச்சீங்களா? படத்தோட கருவே 1985-இல் வெளியான Bicycle Thief என்ற படத்தோட கதைதான் இது.

காப்பி காப்பின்னு பேசிட்டு விஜயை பற்றி சொல்லாமல் விடுவோமா நாம.. போக்கிரி படமே தெலுங்கு படத்தோட தழுவல்தான். அந்த க்ளைமேக்ஸ் சண்டை காட்சி இருக்கே, அது Banlieu 13 என்ற படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே.. அது உண்மையா? :-))

Tuesday, June 24, 2008

31. இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கும் நடிகர் தருணுக்கும் சண்டை

விஷயம் தெரியாதா உங்களுக்கு? ரெண்டு பேரும் சண்டை போட்டு ரோட்டுல உருண்டு பிரண்டாங்களே. முதல்ல அந்த சண்டை காட்சியை பாருங்க:



பார்த்தீங்களா?

அந்த குட்டி பையந்தான் தருண். தமிழில் புன்னகை தேசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவனுடன் சண்டை போடுறவந்தான் அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்று பில்லா வரை எடுத்திருக்கிறார். விஷ்ணுவர்தன். "அடிங்கண்ணா"ன்னு அண்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறாரே அவர்தான் ஸ்ருதி. தித்திக்குதே, ஸ்ரீன்னு சில படங்கள் நடிச்சு காணாமல் போயிட்டாங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி. அப்புறம் சொல்லவே தேவையில்ல நம்ம அஞ்சலி. பேபி ஷாமிலி.
இதை தவிர இன்னொருத்தரும் நடிச்சிருக்காரு. டான்ஸ் மாஸ்டரா இருந்து கதாநாயகனாக மாறி இப்போ இயக்குனராக இருக்கும் பிரபு தேவா. அஞ்சலி படத்துல வரும் பாடல்களில் ஒருத்தர் extraordinary-ஆ ஆடுவார் வாருங்க. அதுதான் சின்னப் பையன் பிரபு தேவா. ஒரு பெரிய பட்டாளமே நடிச்ச படமிது. இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

Monday, June 23, 2008

30. யுவனாக மாறிய இளையராஜா

மகன் அப்பாவைப் போல் மாறலாம். அப்பா மகனைப்போல் மாற முடியுமா?
யுவன் ஷங்கர் ராஜா அப்பா இளையராஜாதான் குரு. அவர் இசைதான் இவருக்கு பாடம். அதை வைத்துதானே இசை கற்றுக்கொண்டார். அதனால், அப்பாவை போல் இசையமைக்க யாராவது கேட்டால், ஏதாவது ஒரு டியூனை சுட்டு போட்றலாம்.

ஆனால், அப்பா மகன் ஸ்டைலில் இசையமைத்தால் எப்படி இருக்கும்? இளையராஜா is a Great Genius. இதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்? :-)

Sunday, June 22, 2008

29. சூர்யாவின் நெத்தியடி

SJ சூர்யா முதன் முதலில் திரையில் வந்த படம் எது என்று கேட்டால் நியூ படத்தில் கதாநாயகனாக என்று சிலர் சொல்வார்கள். அட.. அந்த படம் இல்லைங்க. ஏற்கனவே அவர் இயக்கிய குஷி படத்துல கதையில் டர்னிங் பாய்ண்ட் காட்சியில், விஜய் விபத்துக்குள்ளாகும் காட்சியில் வருவார். அதுதான் அவர் தோன்றிய முதல் படம்ன்னு மற்ற சிலர் சொல்வார்கள்.

ஆனால், அதுவும் இல்லைங்க. Sj சூர்யா பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும்போது பாண்டியராஜனின் நெத்தியடி படத்தில் அவர் ஏற்கனவே நடித்திருப்பார். இதோ பாருங்க:

Saturday, June 21, 2008

28. மைக்கேல் மதன காமராஜன்

கமலஹாசனின் படங்கள் என்றாலே வித்தியாசம்தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைத்து அதை முயற்சிப்பவர். அவருடைய படங்களிலேயே மிகவும் கவர்ந்த படம் மைக்கல் மதன காராஜன். நாலு கமல். திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு.

படம் முழுக்க கிரேஸி மோகனின் வசனங்களில் சிரிப்பொலிகள். வசனங்களில் மட்டுமல்ல. காட்சிகளிலும் சிரிப்பொலிகள்தான்.

இங்கே நம்ம காமேஷ்வரனும் திருப்புர சுந்தரியும் பண்ற காமேடியை பாருங்க:



"என்னதிது?"

"எது"

"கட்டிண்டிருக்கோம்"


இது ஐயராத்து காமேஷ்வரனின் மீன் காமேடி:



"ஐயய்யோ.. மீன்? அபச்சாரம்"

"அச்சச்சோ! சாம்பாரில் போட்டுட்டாய்"

"என்னடா காணலை.."

"தோ வந்துடுத்து.. போயிடுத்து.. நீந்துறுது??.."

"இப்போ அதுவா முக்கியம். எப்படிறா எடுக்க போறாய்?"

"மீன் பிடிக்கிறவங்க யாராவது கூப்பிடலாமா?"

"ஓய்.. கரண்டி எடுறா"

"த்த்த்த்.. மீன் பிடிக்கீற கரண்டி ஏதாவ்..."

"ஷூ. சம்பந்தி காதுல விழுந்துட போகுது"

"சாம்பார்ல விழுந்துட்டுது. காதுல விழுந்தால் என்ன?"


மதன் ராஜூ ஆள்மாறாட்டம்:



"என்னை மாதிரி உட்காருய்யா"

"நீ நிக்குறீயே?"


காமேஷ்வரன் மதனாய் மாறும் காட்சி:



"பீம் பாய் பீம் பாய்.. அந்த லாக்கர்ல இருந்து ஆறு லட்சத்தை எடுத்து இந்த அவினாஷி நாயி மூஞ்சுல விட்டெறி"

இப்படி படம் முழுக்க நாலு கமல்களும் அவர்கள் ஜோடிகளும், கூடவே வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் கலக்கியிருப்பாங்க. படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி ஒரு மலை உட்சியில் உள்ள பங்களாவில் நடக்கும். அங்கேதான் 4 கமலும், அப்பா, அம்மாவும் சேறும் காட்சி. அப்போது நடக்கும் சம்பவங்களும் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பிக்கும்போதும் சிரிப்பு சரவெடிதான். :-))))) கடைசி சிடி அடிக்கடி போட்டு பார்த்து தேய்ச்சு எடுத்தாச்சுல்ல. :-))))

Friday, June 20, 2008

27. யாரடி நீ மோகினியில் நடந்த தவறுகள்

யாரடி நீ மோகினி ஒரு தெலுங்கு படம் ரீமேக்ன்னு யாவரும் அறிந்ததே. தெலுங்கு படத்துல வெங்கடேஷ் கதாநாயகனா நடிச்சிருப்பார். அவர் ரோலை பக்காவா செய்திருப்பார். தனுஷ் என்னடான்னா ரஜினி மாதிரி காப்பி பண்ண பார்த்து எரிச்சல்தான் மூட்டினார்.

சரி, அதை விடுங்க. இப்போ நாம் பார்க்க போறது ஒரே காட்சியில் வருகிற இரண்டு தவறுகள். இயக்குனர் கவனிக்காமல் விட்டாலும் நம்மாளுங்க விடுவாங்களா??



கண்டுபிடிச்சீங்களா?

1- தனுஷ் நயந்தாரா வருவதை வேறு ஒரு ஆங்கிலில் பார்க்கிறார். ஆனால், நயந்தாராவோ அவருக்கு பின்னால் இருந்துல்ல வருகிறார்?

2- இது நல்லாவே தெரியுது. விமானம் மேலே பறந்து பிறகுதான் தனுஷ் சீட் பெல்டே போடுறார். ஹய்யோ ஹய்யோ!!!!!

Thursday, June 19, 2008

26. டைரக்டர் ஷங்கரோட சுட்ட பழம்

பிரமாண்டம்ன்னா அது ஷங்கர். ஷங்கர்ன்னா அது பிரமாண்டம்ன்னு எல்லாரும் சொல்லும் காலம் இது. ஆனால், ஷங்கர் சுட்ட தோசை பார்த்திருக்கீங்களா? இதை பாருங்க



அடப்பாவி மக்கா.. ஷங்கர்! யூ டூ?
பாய்ஸ் படத்துலேயே இந்த காட்சிதான் பார்க்க கொஞ்சம் உருப்படியா இருந்துச்சு. அதுவும் சுட்ட பழம் சுடாதா பழம்தானா? :-))))

Wednesday, June 18, 2008

25. ஜெயம் கொண்டான்

உன்னாலே உன்னாலே வெற்றிப் படமாய் அமைந்து வினய் நடிக்கும் அடுத்தப் படம் ஜெயம் கொண்டான். மணிரத்னத்திடம் 7 வருடமாக இணை இயக்குனாராக இருந்து இயக்குனாராக ஆகும் கண்ணனின் முதல் படம். ஆடியோ ரிலீஸுக்கே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வந்து வாழ்த்தி "படம் நல்லா வந்திருக்கு. கண்டிப்பாக ஹிட் ஆகும்"ன்னு சொல்றாங்க.. எல்லா நிகழ்ச்சியிலும் இதே டயலோக்தானே சொல்றாங்கன்னு கேட்குறீங்களா? அப்படின்னா நாம் வெயிட் பண்ணி படத்தை பார்த்துட்டு ஆமாவா இல்லையான்னு சொல்வோம். இப்போ படத்தின் டிரேயிலர் பாருங்க.

Tuesday, June 17, 2008

24. நல்லா ஓட்டுறாருப்பா விமானத்தை

போயிங்-747 (Boeing-747) விமானம் ஹாங்காங்கில் தரையிறங்கும் காட்சியை பாருங்க. விமானி ரொம்ப கைத்தேர்ந்தவர் போல. வளைவெல்லாம் சூப்பரா போடுறார்.



கோரியன்-747 (Korean-747) தரைக்கு பக்கத்துல வந்தும் சூப்பரா வளைச்சு வளைச்சு இறக்குறாரு இந்த விமானி.



இந்த மாதிரி விமானிதான் நாம் ஏறப்போகும் விமானம் ஓட்டுவார்ன்னு தெரிஞ்சால் கண்டிப்பாக ஏறிடாதீங்க.



இதை பாருங்க.. இன்னும் கொஞ்சம்தான் ஆக்ஸ்டிடண்ட் ஆக.

Monday, June 16, 2008

23. உலக நாயகனே..

கமலின் தசவதார 10 ரோலையும் பார்க்கணுமா? உலக நாயகனே பாடல் இதோ உங்கள் பார்வைக்கு:

Sunday, June 15, 2008

22. வா வா அன்பே வா

தனியார் வானோலியில் ஆர்.ஜே. பிறகு சிங்கப்பூரில் டீஜே. அப்படியே தமிழ்நாட்டுக்கு சென்று சன் மியூஸிக்கில் ப்ளேட் நம்பர் 1 நிகழ்ச்சியில் வீ.ஜே. அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் (தீபாவளி, தலைநகரம்) துக்கடா கதாப்பாத்திரங்கள். திரும்ப நாடு திரும்பி சொந்தமாக இசையமைத்து வரி எழுதி பாடல் பாடி வெளியிட்ட ஆல்பம் The Journey Begins. Funky ஷங்கர் என அழைக்கப்படும் இந்த இளைஞர் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல துறைகளில் புகுந்து, அதில் ஓரளவு வெற்றிப்பெற்று இப்போது இசைத்துறையிலும் நுழைந்தாகிவிட்டது. நீங்களும் பாருங்களேன்.

Saturday, June 14, 2008

21. ஜேக்கி சான் vs ப்ரூஸ் லீ

சைனீஸ் குங்ஃப்பூ பிரியர்களா நீங்கள்? அப்படின்னா உங்களுக்கு மிக பரிட்சயமான பெயர்கள் ஜேக்கி சான், ப்ரூஸ் லீ.

ப்ரூஸ் லீ வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு லெஜெண்டாக வாழ்ந்தவர். பலருக்கு தற்க்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்ப்பட்டதே இவரின் திறமையை பார்த்துதான். ப்ரூஸ் லீ படங்கள் சக்கை போடு போட்டுட்டிருந்த காலத்தில்தான் ஜேக்கி சான் சினிமா உலகில் நுழைந்தார்.

அப்போது சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள்; விலல்ன் க்ரூப்பில் ஒரு துக்கடா கேரக்டர்ன்னு பண்ணிக்கிட்டு இருந்தார். யார் பெஸ்ட்டுன்னு இங்கே கேட்கப்படாது. ஏனென்றால் ப்ரூஸ் லீயின் வழி தனி வழி. ஜேக்கி சான் பின்னாளில் அவருக்கென்று தனி வழி தேடிக்கொண்டதால்தான் ஹாலிவூட்டுலேயும் இவருக்கு பலத்த வரவேற்பு.

நீங்க இந்த வீடியோவ பாருங்க.

Friday, June 13, 2008

20. இளைய சமூதாயத்தினரின் வாழ்க்கை நடைமுறை

இப்போதுள்ள இளையதலைமுறையினரில் எத்தனை பேர் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை பெருமையாக நினைக்கின்றனர்? கண்டிப்பாக இருக்கின்றனர். ஆனால், பலர் தன்னை US ரிட்டர்ன் மாதிரி பந்தா பண்ணிக்கிட்டு திரியிறாங்க. இத்தனைக்கும் பக்கத்து ஊருக்கு கூட போயிருக்க மாட்டாங்க. பேரை கூட மாத்தி வச்சிக்கிறாங்க.. கந்தசாமி இப்போ Ken... மாடசாமி இப்போ Mark.. முத்துசாமி இப்போ Sam.. ஒரு கூலிங் க்ளாஸ், ஃப்ரெஞ்சு பியர், ரெண்டு விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கி "Yo Yo"ன்னு என்னமோ புரியாத மொழியில ஆட்டிக்கிறாங்க.

இது நாம்தானா? நம் கலாச்சாரம் இதுதானா? சொந்த பெயரை கூட சொல்ல கூச்சமா?



இது 8-10 வருடத்துக்கு முன் தீபாவளி விளம்பரமாக பெட்ரோனஸ் வெளியிட்டது. ரொம்பவும் கருத்துள்ள விளம்பரங்களில் இதுவும் ஒன்று. பெரியவர்கள் மேல் மரியாதையும் பாசமும் நிறைய இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்க கூச்சப்படும் நம் இளைய சமூதாயத்தினர். தன்னுடைய ஒரிஜினாலிட்டியை மறைத்து யாரோ ஒருத்தருடைய நடைமுறை வாழ்க்கையை தன் வாழ்க்கை நடைமுறையாக மாற்ற நினைக்கும் நம் இளைஞன்.

பி.கு: நேற்று இறைவனடி சேர்ந்த என் சின்ன பாட்டி நினைவாக இதை பதிக்கிறேன்.

Thursday, June 12, 2008

19. இது நல்லா இருக்கே..

ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவாஜி, கமல் ஹாசன், ரகுவரன்னு ஒரு பெரிய பட்டாளமே ஒரே படத்துல நடித்தால் எப்படி இருக்கும்? இப்படி இருக்கும்.. :-))

Wednesday, June 11, 2008

18. நீக்கப்பட்ட அதிரவைக்கும் காட்சிகள்

சிவாஜி - தி பாஸ்.. பேரை கேட்டாலே அதிருதுல்ல..

ஆனால், அதிர வைக்காத சில காட்சிகள் இருக்கே. அதாவது படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள்.
மூன்று மணி நேரத்துக்கும் கூடுதலாக எடுக்கப்பட்ட படம். இரண்டரை மணி நேரத்துக்குள்ள சுருக்கணும்ன்னா இப்படித்தானே செய்ய முடியும்.

Tuesday, June 10, 2008

17. டெட் பாடி ( Dead Body) ரோட்டுல...

டெட் பாடி புகைப் பிடிக்குமா? டெட் பாடி பேருந்துலதான் ஏறுமா? டெட் பாடி சண்டைதான் போடுமா?

இங்கே இது எல்லாமே நடக்குதே! :-)

இப்போது உள்ள பல காமெடியன்களிடம் "உங்க ரோல் மாடல் யார்?"ன்னு கேளுங்களே. உடனே அவங்க சொல்ற பதில் நாகேஷ் நாகேஷ் நாகேஷ். உலக நாயகன் கமல் ஹாசனே நடிகர் நாகேஷின் நடிப்பில் லயித்து போனவர். நகைச்சுவை மட்டுமல்லாது, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நன்கு பெயர் போட்டவர்.

மகளிர் மட்டும் படம் ஒரு கருத்துள்ள நகைச்சுவை படம். அதில் கமல் ஹாசன் நாகேஷை கூப்பிட்டு இந்த படத்துல நீங்க கண்டிப்பாக நடித்தே ஆகணும்ன்னு அன்பு வேண்டுகோள் விடுத்தார். நாகேஷும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றினார்.

படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹினி நாசர் இறந்துட்டார்ன்னு நினைத்து அவர் பாடியை கடத்துவார்கள். வீட்டுக்கு வந்ததும்தான் தெரியும் அவங்க கொண்டு வந்தது நாசரை (படத்துல இவருக்கு இவங்க மூன்று பேரும் வைத்த பெயர் மூக்கன்) அல்ல. நாகேஷை! எப்படியாவது திரும்ப அதே மருத்துவமனையில சேர்த்துடணும்ன்னு பார்த்தால் விடிந்துவிடும். சரி, ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு போலான்னு பார்த்தால் டாக்ஸியும் கிடைக்காது. ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டி விட்டு, கையில ஒரு சிகரட்டை பற்ற வைத்து காலில் கயிறு கட்டி பொது பேருந்துல் கொண்டு போவாங்க பாருங்க.. அதுக்கு ஒரு :-))))))).. அப்புறம்ம் ரோஹினியோட கணவன் தலைவாசல் விஜய் தன்னோட மனைவி இன்னொருத்தனை பேருந்து நிலையத்துல கட்டிக்கிட்டு இருப்பதை பார்த்து நாகேஷுடன் சண்டை போடுவார் பாருங்க. அதுக்கும் ஒரு :-))))))))).



இந்த் பதிவு சென்ஷி அண்ணனுக்கு சமர்ப்பணம். :-)

Monday, June 9, 2008

16. அன்றும் இன்றும் சூர்யா

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.

அன்று


இன்று


அட.. அவர் நடனத் திறமைதாங்க. :-))

Sunday, June 8, 2008

15. பாட்டிக்கு ரொம்ப லொள்ளுதான்

ரோமானியால உள்ள இந்த பாட்டிக்கு லொள்ளு ஜாஸ்திதான். ஹீஹீஹீ..

Saturday, June 7, 2008

14. சென்னை 600028-இல் நீங்கள் பார்க்காதது

சென்னை 600 028 ஒரு ஹிட் படம். ஹிட்டா ஆக்குனது ரசிகர்கள்தான். க்ரிக்கேட் ரசிகரா இல்ல தமிழ் படம் ரசிகரான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனால், மொத்தத்துல படம் நல்ல படியா எடுத்திருந்தாங்க. அதை ஒத்துக்கொண்டுதான் ஆகணும். இப்போ இன்றைக்கு நாம் பார்க்க போறது சென்னை 600 028 படத்துல இருந்து நீக்கப்பட்ட காட்சி. டியேட்டர்லேயோ டிவிடிலேயோ பார்க்காத காட்சி.

Friday, June 6, 2008

13. உன்னாலே உன்னாலே பிட்

உன்னாலே உன்னாலே..

மியூசிக்கல் ஹிட் படம். ஜீவா ஒரு ஒளிப்பதிவராயிருந்ததால் அவருடைய படங்களின் காட்சியமைப்புகள் எப்போதும் கவிதைத்தனமாக இருக்கும். ஜீவா - ஹர்ரீஸ் கூட்டணியில் வெளியாகிய 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே.. மூன்றிலும் இசை சூப்பர் ஹிட்.

உன்னாலே உன்னாலே படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடல் பிடித்திருக்கும். ஆனால், இந்த பிட் பாடலும் சூப்பரோ சூப்பர்.

"சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன் நினைவு கொள் ஹோ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ஹேய்.
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ஹா.
என்னாச்சோ தெரியலையே.."

காட்சியமைப்பு 1:


காட்சியமைப்பு 2:

Thursday, June 5, 2008

12. சூர்யா vs. மாதவன்

மணிரத்னம். பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல. இவரோட படத்துல வசனங்கள் மிகக் குறைவா இருக்கும். வர்ற கொஞ்ச நஞ்ச வசனங்களும் மிக அழுத்தமானதா இருக்கும். ஒரு சில காட்சிகளில் வசனமே தேவை இல்லைங்க. இவர் படங்களிலேயே எனக்கு பிடிச்ச ஒரு படம், ஒரு காட்சின்னு கேட்டால், நான் சொல்றது அஞ்சலி படம். அதுல ரேவதி அஞ்சலி பாப்பா கிட்ட "நான் உன் அம்மாடா.. என் கிட்ட பேச மாட்டியா?"ன்னு கெஞ்சுவாங்க. அந்த கட்டத்துல பேபி ஷாமிலி.. இல்ல இல்ல.. அஞ்சலின்னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு தத்ரூபமா இருக்கும் அவரோட நடிப்பு. அம்மா பிள்ளை பாசத்துக்கு ஏங்குற நடிப்பை ரேவதி அசத்தி காட்டியிருப்பாங்க. ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட 2-3 வயது குழந்தை அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணும்ங்கிறதுல ஷாமிலி கலக்கியிருப்பாங்க. போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க. அந்த ஒரு காட்சி போதும் மணிரத்னத்தின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இப்போ இன்று பார்க்க போகிற காட்சி ஆயுத் எழுத்திலிருந்து. இந்த படத்துல பார்த்தீங்கன்னா 3 மலை 3 துருவங்களா நடிச்சிருப்பாங்க. சரி.. முறைக்காதீங்க. 2 மலை 1 குன்றுன்னு வச்சிக்கலாமா? சித்தார்த்துக்கு இரண்டாவது படம். மாதவன், சூர்யாவ காம்பேர் பண்ணால் சின்ன பையந்தான் சித்தார்த். படமும் முக்கால்வாசி மாதவன், சூர்யாவை சுற்றிதான் நடக்கும். இதுல ரசித்த காட்சின்னு சொல்றதுன்னா பல தொகுத்து வழங்கலாம். அதுல மாதவன் சூர்யாவை போய் பார்த்து அரசியலில் நீ தலையிடாதேன்னு சொல்லுவார் பாருங்க. ஒரு சண்டை காட்சி கூட இருக்கும். அது சூப்பரா அமைஞ்சிருக்கும்.

மாதவன் லவ்வர் பாயாக அறீமுகப்படுத்தியதே மணிரத்னம்தான். அடுத்த படத்துல அப்பா. மூன்றாவது படத்துல வில்லன். ஆனா, ஒரு வில்லனாகிற முகபாவம் மாதவனுக்கு இல்லையே. என்னத்தான் சீரியஸா லூக் வச்சிக்கிட்டாலும் ஒரே ஒரு சிரிப்பு போதும். திரும்ப லவ்வர் பாயாக மாற்றிவிடும். அதனால், மாதவன் எடுத்துக்கிட்ட முதல் படி, தலைமுடியை ஒட்ட வெட்டிட்டு வந்ததுதான். அது ஒரு வகையில் ப்ளஸாக அமைந்தது. அடியாளாக வருவார்.

சூர்யா. படத்தின் ஹீரோ. புத்திசாலி. மாணவர் தலைவன். தன்னுடைய நம்பிக்கையே தன்னுடைய பலம் என்று நம்பும் ஒரு கேரக்டர். இந்த இரண்டு பேரையும் மோத விட்டால் எப்படி இருக்கும். ஹீரோவா? வில்லனா? எவன் எவனை அடிப்பான்? எவன் வெற்றி பெறுவான்னு நம்மளி சீட் நுனிக்கு கொண்டு வரும் ஒரு காட்சி.



எப்போதும் ஹீரோ அடிச்சு வில்லன் சுருண்டு தூர விழுற மாதிரி, முகத்தில் ரத்தம்ன்னுதான் பார்த்திருப்போம். ஆனால், இதுல ரெண்டு பேருமே இப்படி அடிவாங்குறாங்களே. அதுவும் கொஞ்சம் வித்தியாசம்தான்.

Wednesday, June 4, 2008

11. தாலாட்டு பாட நீயில்லையே

"தாலாட்டு பாட நீயில்லையே
தலை சாய்த்துக் கொள்ள மடியில்லையே
மனதோடு பேச வழியில்லையே
என் கண் மூடி தூங்க துணையில்லையே"

காதலியை பிரிந்து வாடும் ஒரு காதலனின் சோகம். வானவில் பாடல் திறன் போட்டியின் finalist சித்தார்த்தனின் குரலி ஜெய்யின் இசையில் வெளியாகியது. காட்சியமைப்பு எளிமையாக மற்றும் மிதமாக இருக்கிறது. சர்குணன் அந்த பாடலுக்கு ஏற்றமாதிரியே சோகத்துடன் அருமையா நடித்திருக்கிறார்.

வரிகளை எழுதிய கவிஞரை (யாரென்று தெரியவில்லை) கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

"காதல் என்பது தெய்வமானதா
கற்றுக் கொண்டேன் இது கஷ்டமானது
தெரிந்தும் கூட வணங்குகிறேன்
உன்னை சேராமல் வாடி நான் உருகுகிறேன்"


இதுவும் ஒரு மலேசிய மண்ணின் மைந்தரின் பாடல்:

Tuesday, June 3, 2008

10. பயங்கரமான ஒரு பேய் படம்

இது 80களில் வெளியான ஒரு தெலுங்கு படம். ஹீரோ அந்த காலத்து பிரபுதேவா போல ஆடுறாரு பாருங்க. பயங்கரமா பயம் காட்டினாலும் சிரிப்பும் சேர்ந்தே வருது. அது ஏன்?



சரி.. இப்போ இதே பாடல் ஆங்கிலத்தில் வந்தால் எப்பப்டி இருக்கும்? இதை பாருங்களேன் Girlyman!!!!


இது மலாய்ல கூட இருக்கு.. இதை பாருங்கள் Gelimat!!!!

Monday, June 2, 2008

9. நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு

அப்பா கரடியை பற்றி பேசிட்டு மகனை பற்றி பேசலைன்னா ஒரு சிலர் கொதிச்சு எழுந்திடுவாங்கன்னு யாரோ சொன்னாங்க. அதனால் இன்னைக்கு மகன் என்ன பண்றார்ன்னு பார்ப்போம்.

நேற்று அப்பா ரைமிங் வகுப்பு நடத்திட்டு போயிட்டார். அதுவே மகனும் பேசினால் எப்படி இருக்கும்?

"Afterall சின்ன பையன் முருகன்
அப்பனுக்கே செஞ்சான் பாடம்
இந்த சின்ன பையன்
அப்பனுக்காக செய்ய கூடாதா வாதம்"

"நான் பேசலை
பேசுறது நான் பேச வைக்கிறது அவரு
நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு
நிக்கிறது நன் நிக்க வைக்கிறது அவரு
நடை போடுறது நான் நடக்க வைக்கிறது அவரு
அவருன்னா நீங்க கேட்கலாம் அவர் யாருன்னு
சொல்லாமலேயே தெரியும் அவர் டி. ஆருன்னு.."

அட..ரைமிங்-ஆ பேசினால் கூட பரவாயில்லைங்க. பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங் இருக்கே! யப்பா!!!! ச்சும்மா ச்சும்மா தங்கச்சி பாசம்ன்னு கண்ணு கலங்கிறது என்ன? தலை ஆட்டி ஆட்டி முடியை கோதி விடுறது என்ன? பேசுற டயலோக்குக்கும் செய்யுற பாவனைக்கும் சம்பந்தமே இல்லாதது என்ன? இதுக்கும் மேலே சிரிப்பை வரவைக்கும் ரைமிங்தனமான டயலோக்ஸ் என்னன்னு வருசையா எழுதிட்டே போகலாம். அதெல்லாம் சொல்லி முடிக்க நேரமாகும். அதனால நீங்க நேரா ஒரு வசந்த கீதம் படத்துல சின்ன சிம்புவோட ஓவர் ஆக்டிங்கை பாருங்க. :-)

Sunday, June 1, 2008

8. டி.ஆர் Nursery Rhymes

அடுக்குமொழி மன்னனை பற்றி ஒரு பதிவும் போடலைன்னா எப்படி?

இன்னைக்கு இவர்தான் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட்.. அது எப்படித்தான் இவருக்கு இந்த மாதிரி அடுக்கு மொழி அலேக்கா வருதுன்னு தெரியல. பல வருடங்கள் ஃபெயிலாகி ஃபெயிலாகி LKG-ல படிச்சிருப்பாரோ?

"வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி
உன் உடம்பை பிச்சு
போட்டுடுவேன் பஜ்ஜி"



Saturday, May 31, 2008

7. காக்க காக்க டப்பிங்

பசங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. எவ்வளவு பெருசா நாம் கதவை திறந்து கொடுக்கிறோமோ அவ்வளவு பெருசா யோசிப்பாங்க. செய்வாங்க.

இங்கே இந்த ரெண்டு பசங்களோட கிரியேட்டிவிட்டியை பாருங்க. காக்க காக்க படத்துல ரெண்டு வில்லன்கள் எவ்வளவு சீரியஸா பேசுற காட்சியை எப்படி 2 பன்னுக்காக ஏங்குற மாதிரி டப்பிங் பேசியிருக்காங்கன்னு பார்த்து ரசிங்க.

Friday, May 30, 2008

6. ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!

"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."

இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)

இப்படி உங்களுக்கு இதுக்கு முன்னே தோன்றிருக்கா? நடந்திருக்கா? எனக்கு இதுவரை தோணியது இல்ல. ஆனால், இப்படி தோன்றீனால் அதுதான் உண்மையான காதலாமே. இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)

Thursday, May 29, 2008

5. மின்னல் அழகே மின்னும் அழகே

தமிழ் காட்சிகள் மட்டும்தான் 24/7 ஃப்ரேம்ல வருமா? இல்லை இல்லை இல்லை. எல்லா மொழிகளிலும் கலக்கும் இந்த 24/7 ஃப்ரேம்ஸ்.

இன்று வருவது ஒரு மலையாள பாடல். முதல் தடவை கேட்கும்போது இது மலையாள பாடல்ன்னு நம்பவே மாட்டீங்க. இதுவரை மலையாள இசையில் இப்படிப்பட்ட பாடலை நான் கேட்டதே இல்லை. பாடலை கேட்கும்போது ஏதோ ஆல்பத்தில் வெளியாகிய தமிழ் பாடலோ என்று தோணும். அந்தளவுக்கு மலையாளி (அவங்க குழு பெயர்) கலக்கியிருக்காங்க. காட்சியமைப்பும் அழகாய் உள்ளது. கடைசியா பிருத்திவிராஜ் வேற வந்து அட்டெண்டன்ஸ் போடுறார். இந்த பாடலை உதய் எனக்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கேன்.

நீங்களும் பாருங்க. வரிகளும் நமக்கு புரியும் படியேதான் இருக்கு. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் எப்படி?

Wednesday, May 28, 2008

4. நாக்க மூக்க

விஜய் ஆண்டனி சுக்ரன்ல அறிமுகமாகும்போதே சப்போஸ் உன்னை காதலிச்சேன், உச்சி முதல் பாதம் வரைன்னு சில ஹிட்டோடத்தான் உள்ளே வந்தாரு. அடுத்து டிஷூம்ல ஆடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறவங்களையும் ஆட தூண்டுற மாதிரி டைலாமோ டைலாமோ டியூன் போட்டாரு. அதுக்கப்புறம் அவர் படத்துல ஏதாவது ஒரு பாடலாவது இந்த மாதிரி சுறுசுறுப்பா எழுந்திருச்சு ஆடுற மாதிரி ஒரு குத்து பாடல் இருக்கும்.

இப்போ காதலில் விழுந்தேன் படத்துல நாக்க மூக்க பாட்டுதான் டால்க் ஆஃப் தி டவுன். ஆண் குரலில் வரும் பாடலை இவரே பாடிட்டார். பெண் குரலில் வரும் பாடலை சின்னபொண்ணு பாடியிருக்காங்க. பாடலை கேட்கும்போதே அப்படியே நரம்பெல்லாம் முறுக்கேறி ஒரு குத்து குத்தி ஆடணும்போல இருக்கு. இந்த பாடலின் காட்சியை நேத்துதான் பார்த்தேன்.

நாகுல் (தேவையானியின் தம்பி) பாய்ஸ் படத்துல ஜூஜூவா அறிமுகமாகினார். இந்த ப்டத்துக்காக 20 கிலோ இறங்கினதும் பார்க்க சூப்பரா இருக்கார். ஏற்கனவே ஹர்ரீஸ் இசையில் சில பாடல்களை பாடிய இவர் நடிப்பில் ஹீரோவா சாதிப்பாரா? அவர் நடிப்பை படம் வெளியானதும் பார்த்துப்போம். இப்போ எலலாரும் எழுந்திருச்சி நாற்காலியை சைட்ல தள்ளி வச்சிட்டு ஆட ஆரம்பிங்க. இந்தா இந்தா அ இந்தா....



இது பருத்திவீரன் நாக்க மூக்க:



இது திருப்பாச்சி நாக்க மூக்க:

Tuesday, May 27, 2008

3. பசுமை நிறைந்த நினைவுகளே

சீரியல்ன்னாலே அழுகாச்சின்னு நாமெல்லாம் ஒதுக்கி தள்ளும் காலம் இது. ஆனாலும் பலர் பைத்தியமாய் திரியும் ஒரு சீரியல் கனா காணும் காலங்கள். அப்படியே நம் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியதுபோல இருந்தததுதான் அதற்கு காரணம். காமேடி, கடி ஜோக்ஸ், நட்புன்னு பசங்க கலக்கியிருப்பாங்க. 300 எபிசோட் வரை வந்துடுச்சு. இப்போ கொஞ்சம் சீரியல்தனமா இழுத்தடிக்கிறாங்க. நடிக்கிற பசங்க ஒரு படி முன்னேறி இப்போ வெள்ளித்திரைக்கும் வர ஆரம்பிச்சுட்டாங்க.

பட்டாளம்ன்னு ஒரு படம். லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. நதியாதான் படத்தின் ஹீரோயின். பள்ளி கரஸ்பாண்டனா வர்ராங்க. அதுல பத்து பசங்க. சுட்டி பசங்க. அதுல ஒருவனா வினித்தா நடிக்கிற இர்ஃபான் தேர்வாயிருக்கார். மீதி பசங்க யார் யாருன்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்.

சொல்ல வந்த மேட்டரை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கேன் பாருங்க. கனா காணும் காலங்கள்ல ஒரு farewell party. அதுல பல பாடல்கள் கலவையில ஒரு ரீமிக்ஸ். வினித் அண்ட் கோ பாடுற மாதிரி. நீங்களும் பாருங்களேன்.

Monday, May 26, 2008

2. என்னை கொல்லாதே பெண்ணே

"கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னை கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்து உன்னை நாடினும்
ம்ம்ம்ம்ம்ம்..."

நம்ம தமிழ் பாடல்களில் முக்கால்வாசி பாடல்கள் காதல் பாடல்கள். அதுலேயும் காதலியை தேவதை, நிலவு, பூன்னு ஓவரா வர்ணிப்பாங்க. சில நேரங்களில் எனக்கே "இது கொஞ்சம் டூ மச்சா தெரியுதே!!"ன்னு தோணும். ஒரு படத்தை பார்த்தோம்ன்னா (ஒரு சாதாரண காதல் படம்ன்னு வச்சிக்குவோமே) ஒரே கதைதான் ஓடும். அதாவது ஹீரோ ஹீரோயினை பார்ப்பாரு. கண்டதும் காதல். அதுக்கு ஒரு டூயட். அப்புறம் கொஞ்சம் மோதல். அதுக்கு பிறக்கு காதல். அதுக்கும் ஒரு டூயட். அதுக்குள்ள காதலியோட அப்பா இல்லைன்னா வேற யாராவது வில்லன். ஹீரோ எப்படியாவது கஷ்டப்பட்டு க்ளைமேக்ஸில் சண்டை போட்டு காதலியோட சேர்ந்திடுவாரு.

ஆனால், இந்த பாடல் சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் காதலை ஒரு விளையாட்டாய் பயன்படுத்தி ஒரு ஆணின் மனதை நோகடிக்கிறாள். அவனும் (முட்டாளாக) தற்கொலை முயற்சி எடுக்கிறான். அடுத்து அவள் காதலிப்பது அவனின் நண்பனை. அவனுக்கு என்ன கதி? இப்படி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இந்த பெண்ணின் கதிதான் என்ன? எல்லா பெண்ணும் இப்படியில்லை. ஆனால் இப்படிப்பட்ட பெண்களும் உண்டு என்று நமக்கெல்லாம் தெரியும். இந்த பாடல் அவர்களை மாற்றுமா?

மலேசியா உள்ளூர் கலைஞர்களின் தொகுப்பில் உருவானது இந்த பாடல். ஒரே பாடலில் ரசிக்கும் படியான காட்சியமைப்புடன் வசந்த் மற்றும் கண்ணாவின் குரலில்:

Sunday, May 25, 2008

1. ஒரு Farewell காட்சியுடன் Welcome பதிவு

எல்லாரும் முதல் பதிவுல வணக்கம் வந்தனம் என்று சொல்லி ஆரம்பிப்பாங்க. ஆனால் இந்த வலைப்பூவில் நான் ஒரு அழுகாச்சி காட்சியுடன் வணக்கம் சொல்லலாம்ன்னு இருக்கேன்..

24/7 ஃப்ரேம்ஸ் - நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ காட்சிகளை பார்க்கிறோம். அதில் சில நம் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டு இருக்கும். சில முதல் தடவையிலேயே கண்ணில் நீர் கோர்த்து விடும். சில திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்ன்னு தோண வைக்கும். இப்படிப் பட்ட காட்சிகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோணும். அப்படி எனக்கு தோன்றியதால்தான் 24/7 ஃப்ரேம்ஸ் உதயமானது. (தலைப்பு தேர்ந்தெடுத்து கொடுத்த சென்ஷி அண்ணாவுக்கு நன்றி).

சரி. இன்றைய காட்சிக்கு வருவோம். உள்ளம் கேட்குமே படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அதில் நட்பின் ஆழத்தை அழகாய் சொன்ன ஜீவாவின் ஸ்டைலுக்கு ஒரு சல்யூட். ஒரு காட்சியில் ஷாம் பேசும் வசனம் இது:

"தெரிஞ்சோ தெரியாமலோ உங்க கண்ணாடி மனசுல கல் வீசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. நம்ம காலேஜ் சில்லபஸ்ல சொல்லிக் கொடுத்தது கொஞ்சம். ரொம்ப கொஞ்சம். சில்லபஸ்க்கு வெளியில நாம கத்துக்கிட்டதுதான் அதிகம். ரொம்ப அதிகம். காலேஜுக்குள்ள நுழையும்போது விரும்பினது எல்லாம் அமையும் அதுதான் வாழ்க்கைன்னு நென்ச்சேன். இப்போ அமைஞ்சதை விரும்பு. அதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டேன். காலேஜுல சேர்ந்தபோது நம்ம மனசு எழுதாத வெள்ளை தாள் போல சுத்தமா இருந்தது. இப்போ காலம் என்கிற பேனா ஒவ்வொரு மனசுலயும் ஏதோ ஒன்னு எழுதியிருக்கு. ஒரு மனசுல காதல். ஒரு மனசுல கண்ணீர். ஒரு சில மனசுல அவமானங்கள். கனவுகளுக்கு பின்னால் போகுறதை விட, காலத்துக்கு பின்னால் போறதுதான் எதார்த்தம். வெற்றி.. வெற்றி மட்டும்தான் வாழ்க்கையா இருந்தா மனுஷன் தலை வெடிச்சு செத்தே போயிருப்பான். சின்ன சின்ன தோல்வி வேணும். தோல்வியை ரசிக்க முடியலைன்னா கூட மதிக்கனும். என்னைக்காவது ஒரு நாள் கடவுள் என் முன்னாடி வந்து உன் ஆசை என்னான்னு கேட்டால், நான் கேட்பேன். மீண்டும் அந்தா காலேஜ் லைவ் வேணும். மீண்டும் அந்த சுகம் வேணும். அந்த வலி வேணும். செத்து செத்து பொழைக்கிற அந்த ஆனந்த அவஸ்தை வேணும்.. அப்போவாவது நம்ம கனவுகள் நனவாகணும். கடைசியா கேட்கிறேன். தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. உலகம் ரொம்ப சின்னது. எங்கேயோ எப்படியோ நாம சந்திச்சுதான் ஆகணும். அப்போ வார்த்தைகள் ஊமையான இடத்துல கண்ணீர் பேச ஆரம்பிக்கும். அந்த நாளை நினைக்கும்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்ந்தால் தள்ளி நின்னு அழுது பார்ப்போம்."



வாவ்.. என்ன ஒரு அருமையான வரிகள். ஒவ்வொரு தடவை இந்த படம் பார்க்கும்போதும், முக்கியமாக இந்த காட்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்துவிடும். உருக்கமான காட்சியும் கூட. அட, நம்ம அசின், லைலா, பூஜா, ஆர்யா கண்களில் கூட கண்ணீர் (அது க்ளீசரின் வேலையா கூட இருக்கலாம்). பார்த்தீங்களா?