Sunday, June 15, 2008

22. வா வா அன்பே வா

தனியார் வானோலியில் ஆர்.ஜே. பிறகு சிங்கப்பூரில் டீஜே. அப்படியே தமிழ்நாட்டுக்கு சென்று சன் மியூஸிக்கில் ப்ளேட் நம்பர் 1 நிகழ்ச்சியில் வீ.ஜே. அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் (தீபாவளி, தலைநகரம்) துக்கடா கதாப்பாத்திரங்கள். திரும்ப நாடு திரும்பி சொந்தமாக இசையமைத்து வரி எழுதி பாடல் பாடி வெளியிட்ட ஆல்பம் The Journey Begins. Funky ஷங்கர் என அழைக்கப்படும் இந்த இளைஞர் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல துறைகளில் புகுந்து, அதில் ஓரளவு வெற்றிப்பெற்று இப்போது இசைத்துறையிலும் நுழைந்தாகிவிட்டது. நீங்களும் பாருங்களேன்.

3 Comments:

Anonymous said...

என்னத்தான் முன்பெல்லாம் வானொலியில் தமிழை கொலை செய்து பேசினாலும், என் அம்மாவின் செல்ல (முன்னாள்)அறிவிப்பாளராயிற்றே :P இன்னும் கொஞ்சம் வரியில் அவர் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு ஆல்பத்தை வெளியிடுவதற்கு நிறைய பணத்தை செலவிட வேண்டியுள்ளது...அப்படியிருக்க அதன் தரத்திலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டியது நியாயம்தானே... விமர்சிப்பது சுலபம்தான்... ஆனாலும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவும் அவர் கலைஞர் என்ற முறையில் முன் வர வேண்டும்.

said...

//விமர்சிப்பது சுலபம்தான்... ஆனாலும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவும் அவர் கலைஞர் என்ற முறையில் முன் வர வேண்டும்.//

:)))

நோ கமெண்ட்ஸ்

said...

மீ த லேட்டு :((