Saturday, June 21, 2008

28. மைக்கேல் மதன காமராஜன்

கமலஹாசனின் படங்கள் என்றாலே வித்தியாசம்தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைத்து அதை முயற்சிப்பவர். அவருடைய படங்களிலேயே மிகவும் கவர்ந்த படம் மைக்கல் மதன காராஜன். நாலு கமல். திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு.

படம் முழுக்க கிரேஸி மோகனின் வசனங்களில் சிரிப்பொலிகள். வசனங்களில் மட்டுமல்ல. காட்சிகளிலும் சிரிப்பொலிகள்தான்.

இங்கே நம்ம காமேஷ்வரனும் திருப்புர சுந்தரியும் பண்ற காமேடியை பாருங்க:



"என்னதிது?"

"எது"

"கட்டிண்டிருக்கோம்"


இது ஐயராத்து காமேஷ்வரனின் மீன் காமேடி:



"ஐயய்யோ.. மீன்? அபச்சாரம்"

"அச்சச்சோ! சாம்பாரில் போட்டுட்டாய்"

"என்னடா காணலை.."

"தோ வந்துடுத்து.. போயிடுத்து.. நீந்துறுது??.."

"இப்போ அதுவா முக்கியம். எப்படிறா எடுக்க போறாய்?"

"மீன் பிடிக்கிறவங்க யாராவது கூப்பிடலாமா?"

"ஓய்.. கரண்டி எடுறா"

"த்த்த்த்.. மீன் பிடிக்கீற கரண்டி ஏதாவ்..."

"ஷூ. சம்பந்தி காதுல விழுந்துட போகுது"

"சாம்பார்ல விழுந்துட்டுது. காதுல விழுந்தால் என்ன?"


மதன் ராஜூ ஆள்மாறாட்டம்:



"என்னை மாதிரி உட்காருய்யா"

"நீ நிக்குறீயே?"


காமேஷ்வரன் மதனாய் மாறும் காட்சி:



"பீம் பாய் பீம் பாய்.. அந்த லாக்கர்ல இருந்து ஆறு லட்சத்தை எடுத்து இந்த அவினாஷி நாயி மூஞ்சுல விட்டெறி"

இப்படி படம் முழுக்க நாலு கமல்களும் அவர்கள் ஜோடிகளும், கூடவே வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் கலக்கியிருப்பாங்க. படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி ஒரு மலை உட்சியில் உள்ள பங்களாவில் நடக்கும். அங்கேதான் 4 கமலும், அப்பா, அம்மாவும் சேறும் காட்சி. அப்போது நடக்கும் சம்பவங்களும் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பிக்கும்போதும் சிரிப்பு சரவெடிதான். :-))))) கடைசி சிடி அடிக்கடி போட்டு பார்த்து தேய்ச்சு எடுத்தாச்சுல்ல. :-))))

4 Comments:

said...

ஹா..ஹா..ஹா... சிரிப்புடன் மீ த ஃபர்ஸ்ட்டு :))

said...

ஆமாங்க, எனக்கும் இந்த படம் ரொம்பவும் புடிக்கும். எத்தனை தரம் பாத்தாலும் அலுக்கவே அலுக்காது. கமல் மட்டுமில்லாம எல்லா கதாபாத்திரங்களுமே தத்ரூபமா காமட்டி பண்ணுவாங்க. பீம்பாய் சேர்த்து.

said...

"அவிநாசி" கேரக்டர்ல கமலை, குரு பிரிச்சு மேஞ்சிருப்பாரு... :).

said...

எல்லாம் கரெக்ட் , ஆனா கிளைமாக்ஸ் அந்த மலையுச்சி வீடு மட்டும் சார்லி சாப்ளின் தி கோல்ட் ரஷ் படத்ல இருந்து சுட்டது ,

எப்புடி

பிசாசு 2008