Wednesday, June 4, 2008

11. தாலாட்டு பாட நீயில்லையே

"தாலாட்டு பாட நீயில்லையே
தலை சாய்த்துக் கொள்ள மடியில்லையே
மனதோடு பேச வழியில்லையே
என் கண் மூடி தூங்க துணையில்லையே"

காதலியை பிரிந்து வாடும் ஒரு காதலனின் சோகம். வானவில் பாடல் திறன் போட்டியின் finalist சித்தார்த்தனின் குரலி ஜெய்யின் இசையில் வெளியாகியது. காட்சியமைப்பு எளிமையாக மற்றும் மிதமாக இருக்கிறது. சர்குணன் அந்த பாடலுக்கு ஏற்றமாதிரியே சோகத்துடன் அருமையா நடித்திருக்கிறார்.

வரிகளை எழுதிய கவிஞரை (யாரென்று தெரியவில்லை) கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

"காதல் என்பது தெய்வமானதா
கற்றுக் கொண்டேன் இது கஷ்டமானது
தெரிந்தும் கூட வணங்குகிறேன்
உன்னை சேராமல் வாடி நான் உருகுகிறேன்"


இதுவும் ஒரு மலேசிய மண்ணின் மைந்தரின் பாடல்:

10 Comments:

Anonymous said...

வாவ் ரொம்பவெ நல்லாயிருக்கு :)

Anonymous said...

உயிரையும் தொலைக்க வைக்கிறார் ஜெய் அவருடைய மென்மையான இசையில்

Anonymous said...

//சர்குணன் அந்த பாடலுக்கு ஏற்றமாதிரியே சோகத்துடன் அருமையா நடித்திருக்கிறார்.//

எங்கப்பா அவர் நடிச்சிருக்காரு... கழுத்து வழியே வந்திருக்கும் அவருக்கு... இதுக்குதான் எங்ககிட்ட வந்து டிரேய்னிங் எடுங்கப்பான்னு சொன்னா யாரு கேக்குறா :(

said...

பிரசண்ட் மேம் :)

said...

//இனியவள் புனிதா said...
உயிரையும் தொலைக்க வைக்கிறார் ஜெய் அவருடைய மென்மையான இசையில்
//

கேட்டுட்டு சொல்றேன் :)

said...

//இனியவள் புனிதா said...
//சர்குணன் அந்த பாடலுக்கு ஏற்றமாதிரியே சோகத்துடன் அருமையா நடித்திருக்கிறார்.//

எங்கப்பா அவர் நடிச்சிருக்காரு... கழுத்து வழியே வந்திருக்கும் அவருக்கு... இதுக்குதான் எங்ககிட்ட வந்து டிரேய்னிங் எடுங்கப்பான்னு சொன்னா யாரு கேக்குறா :(
//

பார்த்துட்டு சொல்றேன் :)

said...

//"தாலாட்டு பாட நீயில்லையே
தலை சாய்த்துக் கொள்ள மடியில்லையே
மனதோடு பேச வழியில்லையே
என் கண் மூடி தூங்க துணையில்லையே"//

ஏன் தாயி..

மலேசியாவுல டேக் ரெக்கார்டர், தலையணை, பைத்தியக்கார ஆஸ்பத்திரி, தூக்க மாத்திர எதுவுமே கிடையாதா.. அநியாயத்துக்கு பீலிங்க் ஆவறாங்க பார்ட்டிங்க எல்லாம். :)

said...

//காதலியை பிரிந்து வாடும் ஒரு காதலனின் சோகம்.///

:(((

இந்த வரிய படிச்சுட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க :((

ஆமா. அது அவருக்கு எத்தனையாவது காதலி?.

said...

//இதுவும் ஒரு மலேசிய மண்ணின் மைந்தரின் பாடல்://

அதனாலேயே எதயும் முழுசா என்னால சொல்ல முடியல :))

said...

நல்ல முயற்சி....

பாராட்டுக்களும், வாழ்த்துகளும்....

குறையென சொல்ல வேண்டுமானால், பாடலில் ஒரு சில வார்த்தைகளை நீக்கியிருக்கலாம்...அதாவது "உன்னை சேராமல் வாடி நான் உருகுகிறேன்", இதில் நான் என்கிற வார்த்தை தேவையில்லையென்பது என் கருத்து. அதே மாதிரி தப்புக்குற்றம் என்றால் என்ன அர்த்தமென இதை எழுதிய கவிஞர் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

மற்றபடி, இந்த பாடலுக்காய் உழைத்த அனைவரும் பாராட்டுக்குறியவர்களே....