Monday, June 2, 2008

9. நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு

அப்பா கரடியை பற்றி பேசிட்டு மகனை பற்றி பேசலைன்னா ஒரு சிலர் கொதிச்சு எழுந்திடுவாங்கன்னு யாரோ சொன்னாங்க. அதனால் இன்னைக்கு மகன் என்ன பண்றார்ன்னு பார்ப்போம்.

நேற்று அப்பா ரைமிங் வகுப்பு நடத்திட்டு போயிட்டார். அதுவே மகனும் பேசினால் எப்படி இருக்கும்?

"Afterall சின்ன பையன் முருகன்
அப்பனுக்கே செஞ்சான் பாடம்
இந்த சின்ன பையன்
அப்பனுக்காக செய்ய கூடாதா வாதம்"

"நான் பேசலை
பேசுறது நான் பேச வைக்கிறது அவரு
நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு
நிக்கிறது நன் நிக்க வைக்கிறது அவரு
நடை போடுறது நான் நடக்க வைக்கிறது அவரு
அவருன்னா நீங்க கேட்கலாம் அவர் யாருன்னு
சொல்லாமலேயே தெரியும் அவர் டி. ஆருன்னு.."

அட..ரைமிங்-ஆ பேசினால் கூட பரவாயில்லைங்க. பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங் இருக்கே! யப்பா!!!! ச்சும்மா ச்சும்மா தங்கச்சி பாசம்ன்னு கண்ணு கலங்கிறது என்ன? தலை ஆட்டி ஆட்டி முடியை கோதி விடுறது என்ன? பேசுற டயலோக்குக்கும் செய்யுற பாவனைக்கும் சம்பந்தமே இல்லாதது என்ன? இதுக்கும் மேலே சிரிப்பை வரவைக்கும் ரைமிங்தனமான டயலோக்ஸ் என்னன்னு வருசையா எழுதிட்டே போகலாம். அதெல்லாம் சொல்லி முடிக்க நேரமாகும். அதனால நீங்க நேரா ஒரு வசந்த கீதம் படத்துல சின்ன சிம்புவோட ஓவர் ஆக்டிங்கை பாருங்க. :-)

14 Comments:

said...

அழுகையிடன் மீ த ஃபர்ஸ்ட்டு :))

said...

//அப்பா கரடியை பற்றி பேசிட்டு //

கண்டனங்களுடன்.... மீ த செகண்டு

said...

//நான் பேசலை
பேசுறது நான் பேச வைக்கிறது அவரு
நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு
நிக்கிறது நன் நிக்க வைக்கிறது அவரு
நடை போடுறது நான் நடக்க வைக்கிறது அவரு
அவருன்னா நீங்க கேட்கலாம் அவர் யாருன்னு
சொல்லாமலேயே தெரியும் அவர் டி. ஆருன்னு.."//


செம கலக்கலான வசனம் இல்ல?

:)))))

Anonymous said...

:'( பாவம் பொழைச்சு போகட்டும்

said...

திருந்த மாட்டாங்கய்யா திருந்தவே மாட்டானுங்க... பின்னூட்டம் போடுறது நான், போட வைக்கிறது அவரு... வர்ட்டா...

said...

அது பழசுங்க. இது தான் புதுசு:
நடிக்கறது நான், அதுக்கு சம்பளம் பேசுறது அவரு,
லவ்வரது நான், என்ன லவ்வ வைக்கிறது அவரு,
லவ்வரோட சண்டையிடுவது நான், அதுக்கு தூது போறது அவரு,
அடி வாங்கிட்டு வரது நான், போயி சவுண்டு விட்டு வரது அவரு!

said...

/
"நான் பேசலை
பேசுறது நான் பேச வைக்கிறது அவரு
நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு
நிக்கிறது நன் நிக்க வைக்கிறது அவரு
நடை போடுறது நான் நடக்க வைக்கிறது அவரு
/


நல்ல வேளை கல்யாணம் பண்றது நான்.........

















































































பண்ணி வைக்கிறது அவருன்னு ஒரு டயலாக் போடாம விட்டீங்க!!!

said...

hahahahahahahhahahahhahahahahahahahhahahahahahahhahahahahahahahahahahahahaahahhahahahahahahahahahahahhahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahahaha....!!!!!

said...

//ஒரு புது வசந்தம் படத்துல சின்ன சிம்புவோட ஓவர் ஆக்டிங்கை பாருங்க. :-)//

அப்ஜெக்க்ஷன் யுவர் ஆனர்!!!!! அந்தப் படம் ஒரு வசந்த கீதம். இயக்குனர் விக்ரமன் மைபிரண்ட்டுக்கு எதிரா கேஸ் பைல் பண்ணீட்டார்.

said...

(கவுண்டர் பாணியில்)
அடீங் கொக்க மக்கா

அவரு அப்பாவா, அவரு அப்பாவா, அவரு அப்பாவானு மூச்சுக்கு முன்னூறு தடவை காதுச் சவ்வுவை கிழிச்சிட்டிட்டியே வடுவாப் பயலே

said...

எம் மயிலை மண்ணின் மைந்தர்களை கண்டினியூவாக கலாய்க்கும் மைஃப்ரெண்டுக்கு பயங்கரமான கண்டனங்கள் :(

said...

சிம்பு அப்போதிருந்தே இப்படித்தானா :)

said...

:-)))))))

said...

வசனம் வேணா அப்படி இருக்கலாம். ஆனா இந்த வயசுல உங்கள்ல யாராவது இப்படி நடிக்க முடியுமா? மைக்க பார்த்தாவே வெட்கப்பட்டுக்கிட்ட கும்பல்தானே நாம

இளா :(