Thursday, September 18, 2008

66. இனம் மாறலாம் குணம் ஒன்றுதான்..

ரோஜா - பல பேருக்கு வாழ்வு கொடுத்த படம். அர்விந்த் ஸ்வாமி, மதுபாலா, ரஹ்மான், உன்னி மேனன், சுஜாதான்னு பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். எல்லா புகழும் மணிரத்னம் ஒருவருக்கே!

சரி, இந்த படத்துல என்ன ஸ்பெஷல்? நிறைய சொல்லலாம். மத்தம் இன்னொரு நாளுக்கு வச்சிக்கலாம்.

இப்போ இங்கே இந்த காட்சி பாருங்க:


நம்ம ஹீரோ இந்தப்படத்துல பிணை கைதியா இருக்காரு. அப்போ தேசியக்கொடி எரியிறதை பார்த்ததும் அவருக்குள்ளே இருக்கிற தேசப்பற்று கொதிக்குது. கைகள் கட்டப்பட்டும் அடைத்தும் வைத்திருப்பதையும் கண்டுக்காமல் நம்ம ஹீரோ ஓடுறாரு. அவரோட ஒரே எண்ணம் எப்படியாவது அந்த கொடியை காப்பாத்தனும்.. தீப்பற்றி எறியும் அந்த நெருப்பை அணைக்கணும். எப்படி அணைப்பாரு? கைதான் கட்டி போட்டிருக்காங்களே? உருண்டு பிரண்டு எப்படியாவது அணைக்கிறாரு. அந்த நேரம் ஒரு தீவிரவாதி அதை தடுக்கிறான். அதையும் கண்டுக்காமல் எப்படியாவது தேசியக்கொடியை காப்பாற்றுராரு பாருங்க நம்ம ஹீரோ. அவர் நிஜமாலுமே அந்த காட்சியில ஹீரோதான். அதை சித்தரித்த இயக்குனரும் ஒரு ஹீரோதான். அதை அழகாய் படமாக்கிய ஒளிப்பதிவாளரும் ஒரு ஹீரோதான். தேசியக்கொடிக்கு யாரு உயிர் இல்லைன்னு சொல்வாங்க? உயிர் இருக்கு! அதுக்கு இந்த காட்சி ஒரு சான்று.

பல உலக தர போட்டிகளில் விளையாட்டாளர்கள் வெற்றிப்பெற்று பதக்கம் வாங்குவாங்க. அந்த காட்சி பார்த்திருக்கீங்களா? இதுக்கு முன்னாடி எத்தனையோ பதக்கங்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் தன்னுடைய தேசியக்கொடி மேலே ஏறும்போதும், தன்னுடைய தேசியக்கீதம் அரங்கில் ஒலிக்கும்போதும் கண்டிப்பா அவர்களை அறியாமலேயே கண்கள் கலங்கும். இதுவும் ஒரு சான்று.