Thursday, January 7, 2010

80. அசல் உண்மையிலேயே அசலா அல்லது போலியா?

”எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடலில் மிருகம் இங்கே”

இது படத்தில் உள்ள கதைக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது அசல் படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கும் பொருந்துமா????

எங்கே எங்கே பாடல் அசல் இல்லை.அசலை இங்கே பார்க்கவும்..


பரத்வாஜ் திருடி போட்ட போலி இதோ:

Saturday, September 5, 2009

79. ஜோதிகா ரிட்டர்ன்ஸ்

ஆரம்பத்துல எனக்கு ஜோதிகாவே பிடிக்காது..
சந்திரமுகி வந்தப்ப கூட அந்த ரோல்ல சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. (சிம்ரன் கூட என் ஃபேவரைட் லிஸ்ட்ல இல்ல.. இருந்தும் அப்போது நடிப்புல அவங்க நல்லாதான் செஞ்சிட்டு இருந்தாங்க.. அந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்துலலாம் அவங்க நடிப்பு ம்ம்.. சூப்பர்ல..)

ஜில்லுனு ஒரு காதல் படத்தை பார்த்தப்ப கூட ஜோதிகாவுக்கு சூர்யாவான்னு நொந்துக்கிட்டேன்.. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. ஆனா,

இந்த மொழி படம் வந்துச்சு பாருங்க.. அது அவங்க திருமணம் முடிஞ்சு ஒரு பத்து-இருபது நாள் இடைவெளில வந்துச்சுல.. அந்த படம் ராதா மோகன் - பிரகாஷ்ராஜ் - பிருத்விராஜ் காம்பினேஷன் என்பதால்தான் முதல் நாள் ஷோவுக்கே சென்றோம்.. அந்த இரண்டரை மணி நேரம் படம் ஜோதிகாவை பற்றீய என் எண்ணங்களை முற்றிலும் மாற்றிவிட்டது..

காக்க காக்கக்கு முன்னாடி வரை கவர்ச்சி, பப்லிமாஸ், மாஸ் படங்களாக மட்டுமே நடித்திருந்தார். காக்க காக்கல மட்டும் ஒரு நல்ல வேடம்.. அது நல்லாவே நெஞ்சிருந்தாங்க.. ஆனா, அந்த ரோல்ல அசின் செய்திருந்தா பெட்டரா இருந்திருக்கும்ன்னு தோன்றியது.. அப்புறம் அதுக்கப்புறம் சேம் ஓல்ட் ப்ளட்.. அப்புறம் சந்திரமுகி.. அதுல கண்ணுதான் அவங்களுக்கு ப்ளஸ் பாய்ண்ட்.. அதை தவிர வேறெதுவும் இல்ல.. இதுலேயும் சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நினைச்சேன்..

ஆனா, மொழில...
இவங்களை தவிர மத்தவங்க யாரும் இந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டா நடிக்க முடியாதுன்னு தோணுச்சு.. என்னமா நடிச்சிருக்காங்க.. ம்ஹூம்.. வாழ்ந்திருக்காங்க.. ஒரு வாய் பேச முடியாத காது கேளாத பெண் எப்படி ஒவ்வொன்றையும் தன் தின வாழ்க்கையில் எடுத்துக்கிறாங்க; செய்யுறாங்க; பழகறாங்க.. ம்ம்ம்.. ப்ரித்விராஜ் - பிரகாஷ்ராஜையே அலேக்கா தூக்கி முழுங்கிட்டாங்க இவங்க நடிப்பால.. இவங்களுக்குள்ள இவ்வளோ டேலண்ட் இருக்கா?

என்ன ஆச்சர்யம்!- அப்படின்னு நினைக்கிறதுக்குள்ள தன் நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டாங்க.. அவ்வ்வ்வ்....
இப்போ வருவாங்க.. அப்போ வருவாங்க.. எதாவது படத்துல நல்ல ரோல் கிடைச்சா நடிப்பாங்கன்னு நானும் காத்திருக்கேன் (எனக்கு தெரியுது.. நீங்களும் காத்திருக்கீங்கன்னு).. ஆனா, இன்னும் வரல..

இப்போ ஒரு சின்ன இண்ட்ரோவா ஒரு விளம்பரத்துல தன் கணவர் சூர்யாவோட நடிச்சிருக்காங்க.. அருமை! இன்னும் அப்படியே அழகு பொம்மையாவே இருக்காங்க.. நீங்களும் பார்த்து ரசிங்க:

Friday, September 4, 2009

78. Love without talking

காதல்...

பேசினால்தான் காதல் வருமா?
இல்லை காதல் வந்தால் பேசிதான் ஆகணுமா?

பேசாமலேயே இந்த காதல் அழகாய் இருக்கே! நீங்களும் பார்த்து ரசிங்க..

Thursday, September 3, 2009

77. இன்னுமா இந்த ஊரு இவரை நம்புது???

திருந்தவே மாட்டார்யா..
சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம்..
இவர் திருந்தவே மாட்டார்யா...

என்ன கொடுமை சார் இது!!!

(வேட்டர்க்காரனில் விஜயின் இண்ட்ரோ சீன்)

Wednesday, September 2, 2009

76. உன்னை போல் ஒருவன்

A Wednesday - ஹிந்தியில் கலக்கிய படம்.
அதை கமலே ரீமேக் பண்றார்ன்னா சும்மாவா?

இதோ வந்துட்டே இருக்குல்ல..

Tuesday, September 1, 2009

75. பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள்..
அது நம்முடையதை விட மற்றவர்களுடையதாக இருக்கும்போது நம் அதிகம் சந்தோஷமாக இருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, சர்ப்ரைஸ் பார்ட்டி நடத்துவது, கேக் வாங்கி/ செய்து தருவது, பரிசு கொடுப்பது (அதுவும் அவங்க ரொம்ப நாளா ஆசைப்படும் பொருள் என்ன என்பதை யோசித்து (இருக்கிற நாலு முடியையும் பிச்சு) அதை தேடி தேடி வாங்கி தருவது), நல்ல ஒரு கடையில் கூட்டமாக உணவருந்துவது, இதுவே பசங்கன்னா எத்தனை பாட்டில் தண்ணீ அங்கே உருளும்ன்னும் தெரியாது.. இப்படி நாள் முழுக்க அன்று நாம் தீபாவளி கொண்டாடுவோம்.

இது நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மற்றும் காதலர்கள்ன்னு எல்லாருக்கும் பொருந்தும்..

இங்கே இன்னைக்கு நாம பார்க்கப்போறது:

காதலன் தன் காதலிக்கு 12 பிறந்தநாள் பரிசுகள் கொடுத்து அப்படியே தன் காதலை தெரிவிக்கிறான். அதாவது ஒரு மாதத்துக்கு ஒன்னுன்னு அடுத்த பிறந்தநாள் வரைக்கும் சேர்த்து கொடுக்கிறார்..


க்ளைமேக்ஸில் காதலி தன் காதலனுக்கு மேலும் 12 பிறந்தநாள் பரிசுகள் தருவாள். It was really really touching.


பி.கு: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி3 அக்காவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்த பதிவும் சமர்ப்பணம். இந்த முக்கால் செஞ்சுரியும் உங்களுக்கே! :-)

Sunday, April 26, 2009

74. சித்தார்த் நடித்த முதல் படம் எது? (பாய்ஸ் இல்லை)

எல்லாரும் சொல்றாங்க சித்தார்த்துடைய முதல் பாடம் பாய்ஸ் என்று.. இல்லை.. அவர் அதுக்கு முன்னாடியே படத்தில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ் படம். அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் திரைப்படத்தில்..

என்ன படம்ன்னு தெரியணுமா? இந்த காட்சியை பாருங்க..இது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு காட்சி. பேருந்தில் மாதவன் பின்னால ஒரு அழகான பையன் பேக் மாட்டிக்கிட்டு சிரிச்சு பேசிட்டு இருக்காரே, அவர் யாருன்னு தெரியுதா?

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் சித்தார்த் நடிகனாவதற்க்கு முன் இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனரா இருந்தார். உதவி இயக்குனர்கள் தங்கள் குருவின் படங்களில் அப்பப்போ இந்த மாதிரி துக்கடா கேரக்டரில் நடித்திருப்பார்கள்.. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த் நடித்து கலக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சிதான் இது (அடிக்க வர்றீங்களா? வேணாம் விடுங்க..) :-P