Wednesday, May 28, 2008

4. நாக்க மூக்க

விஜய் ஆண்டனி சுக்ரன்ல அறிமுகமாகும்போதே சப்போஸ் உன்னை காதலிச்சேன், உச்சி முதல் பாதம் வரைன்னு சில ஹிட்டோடத்தான் உள்ளே வந்தாரு. அடுத்து டிஷூம்ல ஆடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறவங்களையும் ஆட தூண்டுற மாதிரி டைலாமோ டைலாமோ டியூன் போட்டாரு. அதுக்கப்புறம் அவர் படத்துல ஏதாவது ஒரு பாடலாவது இந்த மாதிரி சுறுசுறுப்பா எழுந்திருச்சு ஆடுற மாதிரி ஒரு குத்து பாடல் இருக்கும்.

இப்போ காதலில் விழுந்தேன் படத்துல நாக்க மூக்க பாட்டுதான் டால்க் ஆஃப் தி டவுன். ஆண் குரலில் வரும் பாடலை இவரே பாடிட்டார். பெண் குரலில் வரும் பாடலை சின்னபொண்ணு பாடியிருக்காங்க. பாடலை கேட்கும்போதே அப்படியே நரம்பெல்லாம் முறுக்கேறி ஒரு குத்து குத்தி ஆடணும்போல இருக்கு. இந்த பாடலின் காட்சியை நேத்துதான் பார்த்தேன்.

நாகுல் (தேவையானியின் தம்பி) பாய்ஸ் படத்துல ஜூஜூவா அறிமுகமாகினார். இந்த ப்டத்துக்காக 20 கிலோ இறங்கினதும் பார்க்க சூப்பரா இருக்கார். ஏற்கனவே ஹர்ரீஸ் இசையில் சில பாடல்களை பாடிய இவர் நடிப்பில் ஹீரோவா சாதிப்பாரா? அவர் நடிப்பை படம் வெளியானதும் பார்த்துப்போம். இப்போ எலலாரும் எழுந்திருச்சி நாற்காலியை சைட்ல தள்ளி வச்சிட்டு ஆட ஆரம்பிங்க. இந்தா இந்தா அ இந்தா....



இது பருத்திவீரன் நாக்க மூக்க:



இது திருப்பாச்சி நாக்க மூக்க:

6 Comments:

said...

என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு குரல்ல கேக்கறது தான் சும்மா பட்டையை கெளப்புது... ;)

said...

செம குத்து!! பாட்டு வெளியானதுலருந்து போரடிக்கும் போதெல்லாம் இதுதான்!!

ஏ நாக்க முக்க நாக்க முக்க!! :))

said...

thanks :)

said...

செம குத்து!! பாட்டு
கலக்கல்ஸ் :))

said...

"உச்சம் தலைமீது நீ கொடுத்த முத்தம் உயிரை உருக்கி விட்டுப்போகும்"னு அருமையான மெலடியும் இருக்கு கேட்டிங்களா.

said...

அருமையான ரசனை!
www.lathananthpakkm.blogspot.com பாருங்க. உங்க படைப்புல ஆகச் சிறந்ததைச் சொன்னீங்கன்னா அதைப் பத்தி என்ர பிளாக்குல எளுதலாம்னு இருக்கேனுங்கோவ்!