Sunday, May 25, 2008

1. ஒரு Farewell காட்சியுடன் Welcome பதிவு

எல்லாரும் முதல் பதிவுல வணக்கம் வந்தனம் என்று சொல்லி ஆரம்பிப்பாங்க. ஆனால் இந்த வலைப்பூவில் நான் ஒரு அழுகாச்சி காட்சியுடன் வணக்கம் சொல்லலாம்ன்னு இருக்கேன்..

24/7 ஃப்ரேம்ஸ் - நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ காட்சிகளை பார்க்கிறோம். அதில் சில நம் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டு இருக்கும். சில முதல் தடவையிலேயே கண்ணில் நீர் கோர்த்து விடும். சில திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்ன்னு தோண வைக்கும். இப்படிப் பட்ட காட்சிகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோணும். அப்படி எனக்கு தோன்றியதால்தான் 24/7 ஃப்ரேம்ஸ் உதயமானது. (தலைப்பு தேர்ந்தெடுத்து கொடுத்த சென்ஷி அண்ணாவுக்கு நன்றி).

சரி. இன்றைய காட்சிக்கு வருவோம். உள்ளம் கேட்குமே படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அதில் நட்பின் ஆழத்தை அழகாய் சொன்ன ஜீவாவின் ஸ்டைலுக்கு ஒரு சல்யூட். ஒரு காட்சியில் ஷாம் பேசும் வசனம் இது:

"தெரிஞ்சோ தெரியாமலோ உங்க கண்ணாடி மனசுல கல் வீசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. நம்ம காலேஜ் சில்லபஸ்ல சொல்லிக் கொடுத்தது கொஞ்சம். ரொம்ப கொஞ்சம். சில்லபஸ்க்கு வெளியில நாம கத்துக்கிட்டதுதான் அதிகம். ரொம்ப அதிகம். காலேஜுக்குள்ள நுழையும்போது விரும்பினது எல்லாம் அமையும் அதுதான் வாழ்க்கைன்னு நென்ச்சேன். இப்போ அமைஞ்சதை விரும்பு. அதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டேன். காலேஜுல சேர்ந்தபோது நம்ம மனசு எழுதாத வெள்ளை தாள் போல சுத்தமா இருந்தது. இப்போ காலம் என்கிற பேனா ஒவ்வொரு மனசுலயும் ஏதோ ஒன்னு எழுதியிருக்கு. ஒரு மனசுல காதல். ஒரு மனசுல கண்ணீர். ஒரு சில மனசுல அவமானங்கள். கனவுகளுக்கு பின்னால் போகுறதை விட, காலத்துக்கு பின்னால் போறதுதான் எதார்த்தம். வெற்றி.. வெற்றி மட்டும்தான் வாழ்க்கையா இருந்தா மனுஷன் தலை வெடிச்சு செத்தே போயிருப்பான். சின்ன சின்ன தோல்வி வேணும். தோல்வியை ரசிக்க முடியலைன்னா கூட மதிக்கனும். என்னைக்காவது ஒரு நாள் கடவுள் என் முன்னாடி வந்து உன் ஆசை என்னான்னு கேட்டால், நான் கேட்பேன். மீண்டும் அந்தா காலேஜ் லைவ் வேணும். மீண்டும் அந்த சுகம் வேணும். அந்த வலி வேணும். செத்து செத்து பொழைக்கிற அந்த ஆனந்த அவஸ்தை வேணும்.. அப்போவாவது நம்ம கனவுகள் நனவாகணும். கடைசியா கேட்கிறேன். தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. உலகம் ரொம்ப சின்னது. எங்கேயோ எப்படியோ நாம சந்திச்சுதான் ஆகணும். அப்போ வார்த்தைகள் ஊமையான இடத்துல கண்ணீர் பேச ஆரம்பிக்கும். அந்த நாளை நினைக்கும்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்ந்தால் தள்ளி நின்னு அழுது பார்ப்போம்."வாவ்.. என்ன ஒரு அருமையான வரிகள். ஒவ்வொரு தடவை இந்த படம் பார்க்கும்போதும், முக்கியமாக இந்த காட்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்துவிடும். உருக்கமான காட்சியும் கூட. அட, நம்ம அசின், லைலா, பூஜா, ஆர்யா கண்களில் கூட கண்ணீர் (அது க்ளீசரின் வேலையா கூட இருக்கலாம்). பார்த்தீங்களா?

23 Comments:

said...

வாழ்த்துக்கள் அழுகாச்சியுடன்!

said...

ஹையா மை பிரண்ட் பதிவுல நான் தான் பர்ஸ்ட் கமெண்ட்.

said...

//ஒவ்வொரு தடவை இந்த படம் பார்க்கும்போதும், //

Vera Velaye irukkathO? :P
N-E-WAY.. ALL THE VERY BEST....

said...

மை பிரண்ட் உனக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் ஐடியா தோணுதோ தெரியல. நல்ல முயற்சி. மீண்டும் வாழ்த்துக்கள்.

said...

@நிஜமா நல்லவன்:

நன்றி. நீங்கதான் இன்னைக்கு ஃபர்ஸ்ட்டு போனி.

அழுகாச்சியுடன் நன்றி. :-)

said...

@சஞ்சய்:

என்ன பண்றது. ஆபிஸ்ல "வேலை" பார்க்கணும்ல. அதான்.. ;-)

said...

இந்த பதிவுன் லிங் கொடுத்து கும்மி அடிங்க என்று என்னை ஒரு ”நல்லவன்” வர சொன்னார் அவரு பேரை நிஜமா நான் சொல்லமாட்டேன். ஆனா அவரு ரொம்ப நல்லவரு:))))

said...

வாழ்த்துக்கள்!! கலக்குங்க!!

மொத பதிவே இம்புட்டு ஃபீலிங்க்ஸு..அவ்வ் :))

said...

@குசும்பன்:

கும்மின்னு சொல்லிட்டு
உண்மையை கக்கிட்டு
அப்பீட்டா? ;-)

said...

@கப்பி பய:

நன்றி அறிவுஜீவி

said...

ஆரம்பிச்சாச்சா.. அது சரி நீங்க பார்த்திபனுக்கு தங்கச்சியா.. எதயும் வித்தியாசமா செய்யறீங்களே அதான் கேட்டேன்..

வாழ்த்துக்கள்..

said...

அனுக்கா யாருக்கோ இந்த பதிவு மூலமா மெசேஜ் சொல்ற மாதிரி தெரியுதே?

(நாராயன நாராயன) :P

said...

@கயல்விழி முத்துலெட்சுமி:

வாழ்த்துக்களுக்கு நன்றிக்கா.. வித்தியாசமாவா? ஆஹா.. நன்றி நன்றி.. :-)

said...

@நந்து:

அடடே.. இது கூட நல்லாத்தான் இருக்கு. நாளையில் இருந்து யார் யாருக்கு மேசேஜ் சொல்லணுமோ 24/7 ஃப்ரேம்ஸ் மூலமாவே சொல்லிட போறேன். ஓக்கேவா அண்ணே? ;-)

said...

//அருமையான வரிகள். ஒவ்வொரு தடவை இந்த படம் பார்க்கும்போதும், முக்கியமாக இந்த காட்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்துவிடும்///

எனக்கும் கூடத்தான் :(

said...

//உருக்கமான காட்சியும் கூட. அட, நம்ம அசின், லைலா//

இந்த டைம்ல எனக்கு அழுகை அதிகமாயிடுச்சு :(((((

said...

வாழ்த்துக்கள் :))

said...

ஹய்யோ... கலக்கிட்டேம்மா... நினைச்சுக்கூட பார்க்கல நீ இந்த சமயத்துல இப்படி ஒரு வசனத்த போடுவேன்னு... உண்மையிலேயே படத்துல பார்த்து அனுபவிச்சு ரசிச்சதத விட நீ எழுதியிருக்கறத படிக்கறப்ப ரொம்ப நல்லாயிருக்கு...

அதுலயும்... //கனவுகளுக்கு பின்னால் போகுறதை விட, காலத்துக்கு பின்னால் போறதுதான் எதார்த்தம். //

நச் வரிகள்...

இதுக்கப்புறம் வர்ற "ஓ மனமே" பாட்டு.. எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு.

said...

என்னம்மா... வீடியோ தெரிய மாட்டேங்குது :(

said...

@ஆயில்யன்:

நீங்க மென்மையான இதயம் படைத்தவர்ன்னு உங்க பின்னூட்டத்தில் தெரியுது.

said...

@சென்ஷி:

ஆமாம்.. அந்த வசனமும் கூட வரும் ஓ மனமே பாடலும் அப்படியே உருக வச்சிடும். எப்படியெல்லாம் இயக்குனர் யோசிச்சிருக்கார் பாருங்க.

வீடியோ தெரிய மாட்டேங்குதா? உங்க ஆபிஸ்ல யூடியூப் ப்ளாக் பண்ணிட்டாங்களா?

said...

ஹய் பேக் கிரவுண்ட் டெம்பளட் போட்டோ ஜூப்பரூ :))

said...

பதிவு சூப்பர்ர்!! வலைப்பூவில் உள்ள சித்தார்த் படம் படுசூப்பர்ர்ர்!!!! கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியா இருக்கு!!