Thursday, January 22, 2009

71. காதலிச்சா தலைக்கு மேலே பல்ப் எறியுமா? மணி அடிக்குமா?

தலைப்பை பார்த்ததுமே என்ன கதைன்னு தெரிஞ்சிருக்கும். அட ஆமாங்க.. சக்கை போடு போட்ட மொழி படத்துலதான் இந்த தத்துவத்தை(!!) சொன்னாங்க.. ”சரி சரி.. இப்போ என்ன.. ஒரு ஊமை பெண்ணுக்கும் இசையமைப்பாளனுக்கும் நடுவில் நடக்கும் காதல் கதையை பற்றிதானே பேசப்போற?”ன்னு சொல்றீங்களா?

இல்லைங்க.. ப்ரித்விராஜ், ஜோதிகா காதல் பற்றி படம் வெளிவந்த புதுசுல பலரும் அலசி ஆராய்ஞ்சிருப்பீங்க. அந்த காட்சிகளில் சில மனதை வருடும் காவியம்மும் இருக்கு, நல்ல கருத்தும் இருக்கு, நகைச்சுவையும் கலந்திருக்கு, வேதனைகளும் படத்தை பார்த்த நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கு.

இங்கே இன்னைக்கு ப்ரகாஷ்ராஜ், சுவர்ண்மால்யா காட்சி பார்க்கலாம். ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி கலந்திருக்கும்.. ஜுஸ்ட் ஒரு 5 நிமிடத்துலேயே நட்பு காதலாகி, வீட்டில் அனுமதி பெற்று திருமணம் வரை சென்றிருக்கும். பிரகாஷ்ராஜ் இந்த கட்டத்துல பேசுற ஒவ்வொரு வசனமும் ஷாக்கிங்காகவும், காமெடியாகவும் இருக்கும்..

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். யாரையாவது நீங்கள் தேவாலயத்திலோ கோவிலிலோ பார்க்குறீங்கன்னு வச்சுக்கோங்க..அவங்க கிட்ட இப்படி கேட்பீங்களா?

“இன்னைக்கு ரெக்கார்டிங் இல்ல; போரடிச்சது. சரி உங்களை நேருல பார்த்து நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்தேன்..”

இதை யாரிடமாவது சொல்லிப்பாருங்களேன். அவங்களுக்கு ஹர்ட் அட்டாக்கே வந்திருக்கும். ;-)

சரி, நீங்கள் காட்சியை பார்த்து ரசிங்க:

Wednesday, January 21, 2009

70. கொஞ்சம் கலாட்டா தொகுப்புகள்..

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ப்ளானெட் கலாட்டா நிகழ்ச்சியை பார்த்திருக்கீங்களா? ”நாங்க என்ன சிங்கப்பூர்லயா இருக்கோம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறதுக்கு?”ன்னு நீங்க என்னை திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள நானே சொல்லிடுறேன். இந்த நிகழ்ச்சியின் சில காமெடி தொகுப்பை நீங்கள் யூடியூப்ல பார்க்கலாம்.

டாக்ஸி ஏறியிருக்கீங்களா நீங்க? இந்த மாதிரியெல்லாம் டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிப்பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ;-)


விமானி சொல்லக்கூடாத 5 விசயங்கள் என்ன?


என்னை மிகவும் கவர்ந்தது.. ட்ராஃபிக் போலிஸ்க்கிட்ட இதெல்லாம் சொல்லிப்பார்க்கலாமா? அதுவும் இரண்டாவது சூப்பரா இருக்குல்ல. ;-)

Monday, January 19, 2009

69. நாக்க முக்க கொஞ்சம் வித்தியாசமாக

நாக்க முக்க பாடல் இப்போது பட்டி தொட்டியெல்லாம் கலக்கிட்டு இருக்கு.. ஆனா, இது கொஞ்சம் வித்தியாசமானது. ”A Day in The Life of Chennai" என்ற theme-உடன் சென்னையில் வழக்கமாக நடக்கும் சில சம்பவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். சினிமா, அரசியல் பற்றியும், நடிகர்களுக்கும் மினிஸ்டர்களுக்கும் வைக்கும் கட்-அவுட், அதுக்கு செய்யும் பாலாபிஷேகம்ன்னு வித்தியாசமாகவே இருக்கு.

இந்த காட்சியை பார்க்கும்போது அப்படியே பாடலின் வரிகளையும் கவனியுங்க. :-)

Saturday, January 17, 2009

68. ஒழுங்காதானேடா இருந்தீங்க..

"ஒழுங்காதானேடா இருந்தீங்க..
திடீர்ன்னு எப்படிடா வருது இந்த லவ்வு?

தினமும் பஸ்ஸுல ஒரு பொண்ணு பின்னாடி போனா அதுக்கு பேரு லவ்வு..
ஒரு பொண்ணு கூட பீச்சு, சினிமான்னு போயிட்டு வந்தா அதுவும் லவ்வு..
எங்கேயாவது தூரமா நின்னு ஒரு பொண்ணை பார்த்துட்டே இருந்தா அதுவும் லவ்வா??
பக்கத்துல போய் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு கூட தைரியம் கிடையாது
கேட்டா கண்ணுலேயே பேசிக்கிறாங்கலாம்..
என்னங்கடா இது..
தடுக்கி விழுவுறவளை தாங்கி பிடிச்சா லவ்வு வருதுடா..
என்ன கருமமோ!
இதெல்லாம் விட ரோட்டுல போகும்போது “எக்ஸ்கியூஸ் மீ, இந்த அட்ரஸ் எக்கே இருக்கு?”ன்னு கேட்டா, தொலைஞ்சா..
அப்புறம், அவள் அட்ரஸை தேடி இவன் அலைய ஆரம்பிச்சிடுறான்.."


இந்த சீன் அனேகமா அனைவரும் பார்த்திருப்போம்.. பிடிச்சிருக்கும். சூர்யா இந்த வசனத்தை பேசும்போது அவர்டைய பாடிலேங்குவேஜ், மேனரிஸம் காட்சிக்கு தேவையான அளவு இருக்கும்..



இதை விடுங்க.. நீ சொன்னியே இந்த மாதி நான் இல்லப்பா. நாங்க ட்ரூ லைவர்ஸ்ன்னு சொல்வங்க இந்த காட்சியிலேயே கடைசியா சூர்யா சொல்வாரே.. அது உங்களுக்கு பொருந்துதான்னு பாருங்க..

”காதல் என்பது கண்ணுல இருந்து வரக்கூடாது! மனசுல இருந்து வரணும்”

இதுதான் உங்க காதல் என்றால், வெற்றிப்பெற என் வாழ்த்துக்களையும் இவ்வேளையில் சொல்லிக்கொண்கிறேன். :-)