Saturday, June 28, 2008

35. செயின் எங்கே? மோதிரம் எங்கே?

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்; நல்ல நடிகன்; இப்படி பலர் பலவற்றை சொல்லலாம். ஆனால், என்னிடம் கேட்டால், ரஜினி என்றால் ஒரு நல்ல காமேடியன் என்று சொல்லுவேன். அட.. நான் தப்பா ஏதோ பேசுறேன்னு சண்டைக்கு வராதீங்கப்பா. நான் சொல்வது என்னவென்றால் ரஜினிகாந்த் காமேடி பண்றதில் கில்லாடி; மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நிகராக.. இல்லை இல்லை ஒரு சில நகைச்சுவை நடிகர்களை விட இன்னும் சூப்பரா நகைச்சுவை பண்ணுவார்.

அந்த நகைச்சுவை நடிப்பைப் பார்க்கவே பல தடவை ஒவ்வொரு படங்களையும் பார்க்கலாம். குரு சிஷ்யனாகட்டும், மன்னன் ஆகட்டும், படையப்பா ஆகட்டும், மாப்பிள்ளை ஆகட்டும். எல்லா படங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்க நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அவைகளில் மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் வேலக்கு கட் அடிச்சுட்டு சினிமா போவாங்க. முதல் இரண்டு டிக்கேட்களை வாங்கினால் தங்க சங்கிலியும் மோதிரமும் கிடைக்குமாம். அங்கே அவர்களுடைய முதலாலி விஜயசாந்திதான் சங்கிலியையும் மோதிரத்தையும் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ரெண்டு பேரும் தப்பிக்க நினைப்பாங்க. அங்கே இருக்கிற மக்கள் அவங்க இரண்டு பேரையும் பிடிச்சு மேடையில் ஏற்றி விட்டுடுவாங்க. அந்த காட்சி முழுவதுமே நன்றாக சிரிக்க வைக்கும். ரஜினி மற்றும் கவுண்டமணியின் முகப்பாவைகளும் அருமையா இருக்கும்..

"மூஞ்சியை சிரிச்ச மாதிரியே வச்சிட்டு சொல்லுங்க"ன்னு கவுண்ட்மணி செய்யுற முகப்பாவையும் சூப்பரா இருக்கும். பாருங்க இந்த காட்சியை.

6 Comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்டு :))

said...

மீ த செகண்டு :))

said...

ஹய்ய்ய்ய்!

தலைவரு படத்துல இருக்கற காமெடி சீன்!

சூப்பரூ:)))

said...

:-)

தில்லுமுள்ள விட்டுட்டீங்களே:-(

said...
This comment has been removed by the author.
said...

அவரு சூப்பர் ஸ்டார் ஆனதே அவர் ஸ்டைலும் கமெடியும்தான்னு நான் நினைக்கிறேன்.
இன்றைக்கு கூட குழந்தைகள் மனசுல ஆழமா இடம் பிடிச்சு இருக்கார்.