Tuesday, June 24, 2008

31. இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கும் நடிகர் தருணுக்கும் சண்டை

விஷயம் தெரியாதா உங்களுக்கு? ரெண்டு பேரும் சண்டை போட்டு ரோட்டுல உருண்டு பிரண்டாங்களே. முதல்ல அந்த சண்டை காட்சியை பாருங்க:பார்த்தீங்களா?

அந்த குட்டி பையந்தான் தருண். தமிழில் புன்னகை தேசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவனுடன் சண்டை போடுறவந்தான் அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்று பில்லா வரை எடுத்திருக்கிறார். விஷ்ணுவர்தன். "அடிங்கண்ணா"ன்னு அண்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறாரே அவர்தான் ஸ்ருதி. தித்திக்குதே, ஸ்ரீன்னு சில படங்கள் நடிச்சு காணாமல் போயிட்டாங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி. அப்புறம் சொல்லவே தேவையில்ல நம்ம அஞ்சலி. பேபி ஷாமிலி.
இதை தவிர இன்னொருத்தரும் நடிச்சிருக்காரு. டான்ஸ் மாஸ்டரா இருந்து கதாநாயகனாக மாறி இப்போ இயக்குனராக இருக்கும் பிரபு தேவா. அஞ்சலி படத்துல வரும் பாடல்களில் ஒருத்தர் extraordinary-ஆ ஆடுவார் வாருங்க. அதுதான் சின்னப் பையன் பிரபு தேவா. ஒரு பெரிய பட்டாளமே நடிச்ச படமிது. இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

19 Comments:

said...

எப்படிக்கா... இப்படியெல்லாம்.. பேசாம உங்களுக்கு ஒலக நாயகி பட்டம் கொடுத்தா என்னன்னு யோசிக்க வேண்டியிருக்கு :)))

said...

2 சென்ஷி!

எப்படிண்ணா இப்படியெல்லாம் பேசமா உங்களுக்கு பின்னூட்ட பிதாமகன்னு பட்டம் கொடுத்தா என்னான்னு யோசிக்க வேண்டியிருக்கு :)))

said...

//இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?
//

குட்டிப்பசங்கள்ல இத்தனை பெரிய.... பெரிய‌ சினிமாக்காரங்க இருக்கறதே நீங்க சொல்லித்தானேக்கா தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு....

said...

3 செகண்டுக்குள்ள முந்திட்டீங்க சரி நாளைக்கு நான் பார்த்துக்கிறேன் :(

said...

எப்டீங்க, அட எப்டீங்க இப்படியெல்லாம்?
அழுகாச்சியா வருது, இப்படி எத்தனை பேரோட பூர்வீக வீடியோ வச்சிருக்கீங்களோ,

பி.கு: இன்னும் சில மணித்துளிகளில் இதுவும் சூடான இடுகைக்குப் போயிடும் ;-)

said...

//ஆயில்யன் said...
2 சென்ஷி!

எப்படிண்ணா இப்படியெல்லாம் பேசமா உங்களுக்கு பின்னூட்ட பிதாமகன்னு பட்டம் கொடுத்தா என்னான்னு யோசிக்க வேண்டியிருக்கு :)))
//

ஒரு மூணு செகண்டு முன்னாடி கமெண்டு போட்டது தப்பாய்யா...!?
அநியாய கொலவெறியா பின்னாடி சுத்தறே.. :))

said...

//கானா பிரபா said...
எப்டீங்க, அட எப்டீங்க இப்படியெல்லாம்?
அழுகாச்சியா வருது, இப்படி எத்தனை பேரோட பூர்வீக வீடியோ வச்சிருக்கீங்களோ,

பி.கு: இன்னும் சில மணித்துளிகளில் இதுவும் சூடான இடுகைக்குப் போயிடும் ;-)
//


ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்ப்ப்ப்பீட்ட்ட்டேஏஏஏஏஏய் :))

said...

//தித்திக்குதே, ஸ்ரீன்னு சில படங்கள் நடிச்சு காணாமல் போயிட்டாங்க. /

அல்பம்... சாரி.. ஆல்பம் என்ற சரித்திர புகழ் வாய்ந்த படத்தை இருட்டடிப்பு செய்த குற்றம் என்னவோ :(

said...

என்னன்னேன் இன்னும் பாக்கல நேரா லிங்க் இந்த பின்னூட்ட பேஜ்ஜுக்குத்தான் தந்தாங்க இருங்க பதிவ பார்த்துட்டுவரேன்.. வர வர இத படிச்சீங்களா அத படிச்சீங்களான்னு நான் தான் நாலு பேரை கேட்பேன் இப்ப தலைகீழா ஆகுதே....

said...

//அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனர் அந்தஸ்தை//

அதுக்கு முன்னமே குறும்பு படத்தைக் கொடுத்தவர்

said...

//இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?//

எனக்கும் ஒருத்தரை தெரியுமே!

அவுரு இப்ப ஆயில்யன்ங்கற பேருல சுத்திக்கிட்டிருக்காரு பட் படத்துல அவுரு அவுட் ஆப் போகஸ் !

( பாட்டுக்கு கூடவே சேர்ந்து பாடற மாதிரி நானும் அப்ப நல்லா நடிச்சேனாக்கும் !)

said...

தருணை தெரியும் விஷ்ணுவர்த்தனை தெரியாது... அப்பறம் இதே மாதிரி நான் ஒவ்வொரு பதிவுலயும் ஒரு வீடியோக்கேக்கறேன் அத போடுங்க மை ப்ரண்ட்..

காதலுக்கு மரியாதை படத்துல ஒரு சீன்ல ஷாலினிகிட்ட விஜய் ப்ரண்ட்ஸ் ஹ்லோ ஹலோன்னு சொல்லுவாங்களே அது போடுங்க பக்கதுல உக்காந்துருக்க பொண்ணு யாருன்னு யாராசும் கண்டுபிடிங்கன்னு ..

said...

தித்திக்குதே, ஸ்ரீன்னு சில படங்கள் நடிச்சு காணாமல் போயிட்டாங்க.//u hav given wrong information.ithu antha shruthi illai.check out !!!

said...

இது ஸ்ருதியா? சரி பாருங்கள்.

said...

அட.. அந்த பொண்ணு நம்ம ஸ்ருதி தானா.. !

said...

//இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?//

விஷ்ணுவர்தன் தம்பியும் இந்த படத்துல இருப்பார். அப்பரம் சன் டீவியின் டாப் டன் நிகழ்ச்சியில் வரும் ஆர்த்தி, இப்போது மானாட மயிலாட நிக்ழச்சியில் ஆடி கொண்டிருப்பவர். இவரும் இந்த படத்தில் உள்ளார். அப்பரம் சீரியல் நடிகர் போஸ் அவரின் மனைவி( ஜோடி நம்பர் ஒன் பட்டத்தை வென்ற டிங்குவின் அக்கா... பெயர் தெரியல..) ஆகியோரும் நடித்து இருப்பார்கள். :))

said...

//காதலுக்கு மரியாதை படத்துல ஒரு சீன்ல ஷாலினிகிட்ட விஜய் ப்ரண்ட்ஸ் ஹ்லோ ஹலோன்னு சொல்லுவாங்களே அது போடுங்க பக்கதுல உக்காந்துருக்க பொண்ணு யாருன்னு யாராசும் கண்டுபிடிங்கன்னு //

அந்த பொண்ணு இப்ப கோலங்கள் சீரியல வர வில்லி ரோல் 'மேனகா' கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.... சரியா??

said...
This comment has been removed by the author.
said...

போஸ் அவரின் மனைவி( ஜோடி நம்பர் ஒன் பட்டத்தை வென்ற டிங்குவின் அக்கா... பெயர் தெரியல..) ஆகியோரும் நடித்து இருப்பார்கள். :))//

sonia