Sunday, June 22, 2008

29. சூர்யாவின் நெத்தியடி

SJ சூர்யா முதன் முதலில் திரையில் வந்த படம் எது என்று கேட்டால் நியூ படத்தில் கதாநாயகனாக என்று சிலர் சொல்வார்கள். அட.. அந்த படம் இல்லைங்க. ஏற்கனவே அவர் இயக்கிய குஷி படத்துல கதையில் டர்னிங் பாய்ண்ட் காட்சியில், விஜய் விபத்துக்குள்ளாகும் காட்சியில் வருவார். அதுதான் அவர் தோன்றிய முதல் படம்ன்னு மற்ற சிலர் சொல்வார்கள்.

ஆனால், அதுவும் இல்லைங்க. Sj சூர்யா பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும்போது பாண்டியராஜனின் நெத்தியடி படத்தில் அவர் ஏற்கனவே நடித்திருப்பார். இதோ பாருங்க:

26 Comments:

said...

மை ப்ரண்ட்டோட நெத்தியடி யா இருக்கே இந்த பதிவு.. ம்.. இப்படியே பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்துல ஒரு சின்ன கேரக்டரில் ரமேஷ் வந்துருப்பாரு அது இருந்தா போடு பாப்பம்

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
மை ப்ரண்ட்டோட நெத்தியடி யா இருக்கே இந்த பதிவு.. ம்.. இப்படியே பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்துல ஒரு சின்ன கேரக்டரில் ரமேஷ் வந்துருப்பாரு அது இருந்தா போடு பாப்பம்
//

அக்கா... நீங்க மைபிரண்ட பத்தி தெரியாம சொல்லிட்டீங்க. கரெக்டா ரமேஷ் கண்ணா ஆண்பாவத்துல கல்யாண தரகரா நடிச்ச ரெண்டு சீனையும் எடுத்து போடும் பாருங்க..

சரி.. அப்புறம் பாண்டியராஜன் மொதல்ல‌ ஒரு சீன்ல வந்தது, லிவிங்ஸ்டன் ஒரு சீன்ல நடிச்ச படம் டார்லிங்..டார்லிங். கரெக்ட் தானே :))

said...

S.J சூர்யா ஆசை படத்துலயும ஆட்டோ ஓட்டுறவரா வந்திருப்பாரு பாத்திருக்கிங்களா...

said...

//சரி.. அப்புறம் பாண்டியராஜன் மொதல்ல‌ ஒரு சீன்ல வந்தது, லிவிங்ஸ்டன் ஒரு சீன்ல நடிச்ச படம் டார்லிங்..டார்லிங். கரெக்ட் தானே :))///

ஆமா நானும் பாத்திருக்கேன் ஆனா அதுதான் முதல் படம்னுலாம் தெரியாது...

said...

//சென்ஷி said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
மை ப்ரண்ட்டோட நெத்தியடி யா இருக்கே இந்த பதிவு.. ம்.. இப்படியே பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்துல ஒரு சின்ன கேரக்டரில் ரமேஷ் வந்துருப்பாரு அது இருந்தா போடு பாப்பம்
//

அக்கா... நீங்க மைபிரண்ட பத்தி தெரியாம சொல்லிட்டீங்க. கரெக்டா ரமேஷ் கண்ணா ஆண்பாவத்துல கல்யாண தரகரா நடிச்ச ரெண்டு சீனையும் எடுத்து போடும் பாருங்க..//

வேணாம்ய்யா அந்த சீன் கொஞ்சம் சோகமா இருக்கும் :(

said...

நான் கொஞ்சம் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுத்திக்கிறேனே! இந்தக் காட்சியும், வேறு சில காட்சிகளும் எடுக்கப்பட்டது எனது வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணையில். வருடம் அநேகமா 1988 கடைசி அல்லது 1989 துவக்கம். பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் க்ளாஸ கட் அடிச்சுட்டு மாலை நேரத்தில் படப்பிடிப்பு பார்க்கச் சென்று பாண்டியராஜனிடமும், அமலாவிடமும் ஆட்டோக்ராஃப் வாங்கினேன். ஆட்டோக்ராஃப் வாங்கிய நோட்டைத் தொலைத்துவிட்டேன். ஆனால் நினைவுகளை மட்டும் தொலைக்கவில்லை.

said...

பெத்தராயுடு மாதிரி நானும் ஒரு கொசுவர்த்தி இந்தப் படம் பற்றி சொல்றேனே.

இந்தப் படம் பாண்டியராஜன் தன் மாமனார் பணத்தை முதலீடு செய்து எடுத்தது. படத்தின் இசை கூட பாண்டியராஜன் தான் (என்ன கொடும மைபிரண்டு). ஆனா படம் ஊத்திக்கிச்சு. பாண்டியராஜனுக்கு பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த ஏறுமுகம் இந்த நெத்தியடியோடு நெத்தியில் அடி போட்டது.

said...

இந்த பதிவு மை ப்ரண்ட்டோட நெத்தியடிthan

said...

நெத்திஅடி ஒரு சூடான பதிவு.. மை ப்ரண்டின் நெத்திஅடி இந்த பதிவு என்று தான் தோன்றுகிறது..

said...

அப்படியே திரிஷா ஷாம் நடித்த முதல் காட்சிகளையும் சொல்லுங்கள் ? திரிஷா ஜோடி படம், ஷாம் குஷி. இயக்குனர் துரையும் முகவரி படத்தில் ஒரு காட்சியில் தோற்றம் அளிப்பார்.

said...

சூடான இடுகைகளில் இந்த பதிவுதாங்கோ இன்னிக்கு ஃபர்ஸ்ட்டு :)

said...

//தமிழன்... said...
S.J சூர்யா ஆசை படத்துலயும ஆட்டோ ஓட்டுறவரா வந்திருப்பாரு பாத்திருக்கிங்களா...
//

ஆமாங்க. ஜூப்பரா ஜூவலஷ்மிய பார்த்து ஜொள்ளு ஜூடுவாரு :))

said...

//பெத்த ராயுடு said...
நான் கொஞ்சம் டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுத்திக்கிறேனே! இந்தக் காட்சியும், வேறு சில காட்சிகளும் எடுக்கப்பட்டது எனது வீட்டுக்கு அருகில் உள்ள பண்ணையில். வருடம் அநேகமா 1988 கடைசி அல்லது 1989 துவக்கம். பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் க்ளாஸ கட் அடிச்சுட்டு மாலை நேரத்தில் படப்பிடிப்பு பார்க்கச் சென்று பாண்டியராஜனிடமும், அமலாவிடமும் ஆட்டோக்ராஃப் வாங்கினேன். ஆட்டோக்ராஃப் வாங்கிய நோட்டைத் தொலைத்துவிட்டேன். ஆனால் நினைவுகளை மட்டும் தொலைக்கவில்லை.
//

நீங்க உண்மையிலேயே பெத்த ராயுடுதான் :))

said...

//கானா பிரபா said...
பெத்தராயுடு மாதிரி நானும் ஒரு கொசுவர்த்தி இந்தப் படம் பற்றி சொல்றேனே.

இந்தப் படம் பாண்டியராஜன் தன் மாமனார் பணத்தை முதலீடு செய்து எடுத்தது. படத்தின் இசை கூட பாண்டியராஜன் தான் (என்ன கொடும மைபிரண்டு). ஆனா படம் ஊத்திக்கிச்சு. பாண்டியராஜனுக்கு பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த ஏறுமுகம் இந்த நெத்தியடியோடு நெத்தியில் அடி போட்டது.
//

ஆமாம். இதுக்கப்புறம் வந்த எல்லாப்படமுமே பாண்டியராஜனுக்கு நெத்தியில நாமத்த போட்டுடுச்சு :(

ஜாடிக்கேத்த மூடி, ஏட்டிக்கு போட்டி சில உதாரணங்கள் :)

said...

//சினிமா நிருபர் said...
இந்த பதிவு மை ப்ரண்ட்டோட நெத்தியடிthan
//

ரிப்பீட்டு :))

said...

//வந்தியத்தேவன் said...
அப்படியே திரிஷா ஷாம் நடித்த முதல் காட்சிகளையும் சொல்லுங்கள் ? திரிஷா ஜோடி படம், ஷாம் குஷி. இயக்குனர் துரையும் முகவரி படத்தில் ஒரு காட்சியில் தோற்றம் அளிப்பார்.
//

ஹை.. இந்த ஆட்டம் நல்லா இருக்கே..

சரி... கவுண்டமணி முதல்ல நடிச்ச(!) படம்.. காரோட்டிய கண்ணன். (னு நினைக்கிறேன்). டிரைவரா ஒரு சீன்ல வருவாரு.

said...

பாக்யராஜ் 16 வயதினிலேயில கிராமத்து மருத்துவரா கமல்கிட்ட உடம்பு சரியில்லாத ஸ்ரீதேவிக்கு மருந்து கொடுப்ப்பாரு :)

said...

ராமராஜன், பட்டம் பறக்குது படத்துல காலேஜ் ஸ்டூடண்டா வருவாரு.

உடம்பு பூரா சுண்ணாம்புல எழுதிகிட்டு சுத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கும் :(

said...

ராஜ்கிரண், வில்லுப்பாட்டுக்காரன் படத்துல கங்கை அமரன் கூட ஒரு சீன்ல வருவாரு :)

said...

சந்திரசேகரோட ஒரு தலை ராகத்த யாரும் ஞாபகம் வச்சிருக்கீங்களா... :))

அதுவும் அவரோட "இலவு காத்த கிளி" எனக்கு ரொம்ப பிடிச்ச சீன்... :)

said...

எனக்கும் 1ம் சொல்ல சேதியில்லையே நான் இன்னா பண்ண்உவேன்??? :(

said...

//ஆயில்யன் said...
எனக்கும் 1ம் சொல்ல சேதியில்லையே நான் இன்னா பண்ண்உவேன்??? :(
//

எதையாச்சும் யோசிச்சு தேத்துங்கண்ணா :)

said...

ஆங்...!

நானும் ஒருத்தர கண்டுபிடிச்சிட்டேன்!

இவரு எல்லா படங்களிலும் டான்ஸ் ஆடியிருக்காரு கமல் தசாவதாரத்தில கூட கடைசி பாட்டுக்குஆடுனாரு பேரு ரவின்னு நல்ல நடிகரு!

நாள்:- 25.05.2012

said...

சென்ஷியண்ணே இப்படித்தான் தோணுது :((

said...

ராகம் தாளம் பல்லவியில டி.ராஜேந்தர் கொஞ்சம் தாடி காட்டியிருப்பாரு :)

said...

மன்சூர் அலிகான், வேலை கிடைச்சுடுச்சுல அடியாளா வருவாரு :)