Tuesday, June 10, 2008

17. டெட் பாடி ( Dead Body) ரோட்டுல...

டெட் பாடி புகைப் பிடிக்குமா? டெட் பாடி பேருந்துலதான் ஏறுமா? டெட் பாடி சண்டைதான் போடுமா?

இங்கே இது எல்லாமே நடக்குதே! :-)

இப்போது உள்ள பல காமெடியன்களிடம் "உங்க ரோல் மாடல் யார்?"ன்னு கேளுங்களே. உடனே அவங்க சொல்ற பதில் நாகேஷ் நாகேஷ் நாகேஷ். உலக நாயகன் கமல் ஹாசனே நடிகர் நாகேஷின் நடிப்பில் லயித்து போனவர். நகைச்சுவை மட்டுமல்லாது, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நன்கு பெயர் போட்டவர்.

மகளிர் மட்டும் படம் ஒரு கருத்துள்ள நகைச்சுவை படம். அதில் கமல் ஹாசன் நாகேஷை கூப்பிட்டு இந்த படத்துல நீங்க கண்டிப்பாக நடித்தே ஆகணும்ன்னு அன்பு வேண்டுகோள் விடுத்தார். நாகேஷும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றினார்.

படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹினி நாசர் இறந்துட்டார்ன்னு நினைத்து அவர் பாடியை கடத்துவார்கள். வீட்டுக்கு வந்ததும்தான் தெரியும் அவங்க கொண்டு வந்தது நாசரை (படத்துல இவருக்கு இவங்க மூன்று பேரும் வைத்த பெயர் மூக்கன்) அல்ல. நாகேஷை! எப்படியாவது திரும்ப அதே மருத்துவமனையில சேர்த்துடணும்ன்னு பார்த்தால் விடிந்துவிடும். சரி, ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு போலான்னு பார்த்தால் டாக்ஸியும் கிடைக்காது. ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டி விட்டு, கையில ஒரு சிகரட்டை பற்ற வைத்து காலில் கயிறு கட்டி பொது பேருந்துல் கொண்டு போவாங்க பாருங்க.. அதுக்கு ஒரு :-))))))).. அப்புறம்ம் ரோஹினியோட கணவன் தலைவாசல் விஜய் தன்னோட மனைவி இன்னொருத்தனை பேருந்து நிலையத்துல கட்டிக்கிட்டு இருப்பதை பார்த்து நாகேஷுடன் சண்டை போடுவார் பாருங்க. அதுக்கும் ஒரு :-))))))))).



இந்த் பதிவு சென்ஷி அண்ணனுக்கு சமர்ப்பணம். :-)

4 Comments:

said...

ஹாஹா.. சூப்பர் காமெடி. நேத்திக்கு தான் படத்தை டிவிடியில பாத்தேன்.

said...

:))

குரு நடித்த‌ படங்களில் எனக்கு மிகப்பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று..

ரொம்ப தேங்க்ஸ் மைபிரண்ட் :))

அதுவும் தலைவர் சண்டை போடுற சீன கலக்கியெடுத்துருப்பாரு. சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துடும் :))

said...

//இப்போது உள்ள பல காமெடியன்களிடம் "உங்க ரோல் மாடல் யார்?"ன்னு கேளுங்களே. உடனே அவங்க சொல்ற பதில் நாகேஷ் நாகேஷ் நாகேஷ். உலக நாயகன் கமல் ஹாசனே நடிகர் நாகேஷின் நடிப்பில் லயித்து போனவர். நகைச்சுவை மட்டுமல்லாது, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நன்கு பெயர் போட்டவர்.
//

போட்றா பெருசா ஒரு ரிப்பீட்டே :)))

said...

//சென்ஷி said...
//இப்போது உள்ள பல காமெடியன்களிடம் "உங்க ரோல் மாடல் யார்?"ன்னு கேளுங்களே. உடனே அவங்க சொல்ற பதில் நாகேஷ் நாகேஷ் நாகேஷ். உலக நாயகன் கமல் ஹாசனே நடிகர் நாகேஷின் நடிப்பில் லயித்து போனவர். நகைச்சுவை மட்டுமல்லாது, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நன்கு பெயர் போட்டவர்.
//

போட்றா பெருசா ஒரு ரிப்பீட்டே :)))
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அண்ணன் சொல்லிட்டாருல :)