Monday, May 26, 2008

2. என்னை கொல்லாதே பெண்ணே

"கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னை கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்து உன்னை நாடினும்
ம்ம்ம்ம்ம்ம்..."

நம்ம தமிழ் பாடல்களில் முக்கால்வாசி பாடல்கள் காதல் பாடல்கள். அதுலேயும் காதலியை தேவதை, நிலவு, பூன்னு ஓவரா வர்ணிப்பாங்க. சில நேரங்களில் எனக்கே "இது கொஞ்சம் டூ மச்சா தெரியுதே!!"ன்னு தோணும். ஒரு படத்தை பார்த்தோம்ன்னா (ஒரு சாதாரண காதல் படம்ன்னு வச்சிக்குவோமே) ஒரே கதைதான் ஓடும். அதாவது ஹீரோ ஹீரோயினை பார்ப்பாரு. கண்டதும் காதல். அதுக்கு ஒரு டூயட். அப்புறம் கொஞ்சம் மோதல். அதுக்கு பிறக்கு காதல். அதுக்கும் ஒரு டூயட். அதுக்குள்ள காதலியோட அப்பா இல்லைன்னா வேற யாராவது வில்லன். ஹீரோ எப்படியாவது கஷ்டப்பட்டு க்ளைமேக்ஸில் சண்டை போட்டு காதலியோட சேர்ந்திடுவாரு.

ஆனால், இந்த பாடல் சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் காதலை ஒரு விளையாட்டாய் பயன்படுத்தி ஒரு ஆணின் மனதை நோகடிக்கிறாள். அவனும் (முட்டாளாக) தற்கொலை முயற்சி எடுக்கிறான். அடுத்து அவள் காதலிப்பது அவனின் நண்பனை. அவனுக்கு என்ன கதி? இப்படி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இந்த பெண்ணின் கதிதான் என்ன? எல்லா பெண்ணும் இப்படியில்லை. ஆனால் இப்படிப்பட்ட பெண்களும் உண்டு என்று நமக்கெல்லாம் தெரியும். இந்த பாடல் அவர்களை மாற்றுமா?

மலேசியா உள்ளூர் கலைஞர்களின் தொகுப்பில் உருவானது இந்த பாடல். ஒரே பாடலில் ரசிக்கும் படியான காட்சியமைப்புடன் வசந்த் மற்றும் கண்ணாவின் குரலில்:

12 Comments:

said...

ஹைய்யா.... மீ த ஃபர்ஸ்ட்ட்டு

said...

ஆரம்பம் சினிமா, அப்புறம் ஆல்பமா.... அடுத்தது எந்த கலக்கல் :))

said...

வீடியோக்களை மட்டும் தந்துவிட்டு போகாமல் இப்படி நாலு நல்ல வார்த்தைகளைத்தேடி பிடித்து எழுதுவதை விட்டு விடாதீர்கள் :)).

இதுவும் அழ‌காக‌ வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து. எக்ஸ்ட்ராவா ஒரு ப‌திவு ப‌டிச்ச‌ எஃபெக்டும் கெடைக்குது....

said...

இது மாதிரி நிறைய புது ஆல்பங்களையும் பாடல்களையும் எதிர்பார்த்து...

said...

தங்காச்சி.. உனுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரமா? பதிவு மேல பதிவா போட்டு கலக்கறயேடிம்மா... :)

said...

ஆஹா கலக்குறீங்களே. வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறோம்.

said...

எல்லாம் சரி.... எதுக்கு முகப்பிலே ஒரு பூச்சாண்டி ரெண்டு கையும் விரிச்சுக்கிட்டு இருக்குறமாதிரி படம்????? ;)

said...

@சென்ஷி:

ஆமா.. இன்னைக்கு நீங்கதான் ஃபர்ஸ்ட்டூ.. :-)

ஹீஹீ.. அடுத்து வரிசையா வித்தியாசமான காட்சிகள் வந்துட்டு இருக்கு. ;-)

ரொம்ப நன்றீண்ணா உங்க வாழ்த்துக்கு. :-)

said...

@கப்பி பய:

கண்டிப்பா. :-)

said...

@காயத்ரி:

யக்கா.. ரொம்ப நாள் கழிச்சு அதுவும் என் புது ப்ளாக்குக்கு வருகை தந்ததுக்கு நன்றி. :-)

48 மணி நேரமா? ஹாஹாஹா.

said...

@நிஜமா நல்லவன்:

உங்க எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ட்ரை பண்றேன். :-)

said...

@இராம்:

இப்போதான் ப்ளாக் மங்கலகரமா இருக்குண்ணே. :-)