Monday, June 30, 2008

37. Crazy Dog vs சிம்பு

Crazy Dog பாடல் கேட்டிருக்கீங்களா? அந்த காட்சியை பார்த்திருக்கீங்களா?
எல்லாரும் ஒரு காலத்துல ரசிச்சு கேட்ட பாடல் அது.

இதையும் நம்ம பசங்க விட்டு வைக்கலை. நல்லா ரீமிக்ஸ் எல்லாம் பண்றாங்க. சிம்பு Crazy Dog-ஆ மாறியிருந்தால் எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை. :-)

Sunday, June 29, 2008

36. அக்கா மக அக்கா மக

90-களில் வெளியானது தி கீய்ஸ் (The Keys)-இன் அக்கா மக ஆல்பம். இதுவே மற்ற மண்ணின் மைந்தர்களுக்கு ரேப், ரோக் பாடல்களில் ஆர்வம் காட்டுமளவு பிள்ளையார் சுழியாக இருந்தது என சொல்லலாம். இந்த பாடலுக்கு மைக்கேல் ஜாக்ஸன் ஆடியிருந்தால் எப்படி இருக்கும்?இந்த பதிவு துர்காவுக்கு பரிசளிக்கிறேன்.

Saturday, June 28, 2008

35. செயின் எங்கே? மோதிரம் எங்கே?

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்; நல்ல நடிகன்; இப்படி பலர் பலவற்றை சொல்லலாம். ஆனால், என்னிடம் கேட்டால், ரஜினி என்றால் ஒரு நல்ல காமேடியன் என்று சொல்லுவேன். அட.. நான் தப்பா ஏதோ பேசுறேன்னு சண்டைக்கு வராதீங்கப்பா. நான் சொல்வது என்னவென்றால் ரஜினிகாந்த் காமேடி பண்றதில் கில்லாடி; மற்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நிகராக.. இல்லை இல்லை ஒரு சில நகைச்சுவை நடிகர்களை விட இன்னும் சூப்பரா நகைச்சுவை பண்ணுவார்.

அந்த நகைச்சுவை நடிப்பைப் பார்க்கவே பல தடவை ஒவ்வொரு படங்களையும் பார்க்கலாம். குரு சிஷ்யனாகட்டும், மன்னன் ஆகட்டும், படையப்பா ஆகட்டும், மாப்பிள்ளை ஆகட்டும். எல்லா படங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்க நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அவைகளில் மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் வேலக்கு கட் அடிச்சுட்டு சினிமா போவாங்க. முதல் இரண்டு டிக்கேட்களை வாங்கினால் தங்க சங்கிலியும் மோதிரமும் கிடைக்குமாம். அங்கே அவர்களுடைய முதலாலி விஜயசாந்திதான் சங்கிலியையும் மோதிரத்தையும் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ரெண்டு பேரும் தப்பிக்க நினைப்பாங்க. அங்கே இருக்கிற மக்கள் அவங்க இரண்டு பேரையும் பிடிச்சு மேடையில் ஏற்றி விட்டுடுவாங்க. அந்த காட்சி முழுவதுமே நன்றாக சிரிக்க வைக்கும். ரஜினி மற்றும் கவுண்டமணியின் முகப்பாவைகளும் அருமையா இருக்கும்..

"மூஞ்சியை சிரிச்ச மாதிரியே வச்சிட்டு சொல்லுங்க"ன்னு கவுண்ட்மணி செய்யுற முகப்பாவையும் சூப்பரா இருக்கும். பாருங்க இந்த காட்சியை.

Friday, June 27, 2008

34. மைக்கேல் ஜாக்ஸனாக மாறிய விஜய டி. ராஜேந்தர்

விருவிருப்பான நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்ஸன்தான். பிரபு தேவாவையே இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்றுதான் சொல்லுகிறோம். ஆனால், விஜய டி ராஜேந்தர் மைக்கேள் ஜாக்ஸனாகவே மாறிட்டாரே!!! அந்த கொடுமையை பாருங்க.. இதுவும் நல்லாத்தான் இருக்கு. :-)

Thursday, June 26, 2008

33. நன்றாக இருக்கிறது இந்த விளம்பரம்

இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உங்களுக்கு?

Wednesday, June 25, 2008

32. பொல்லாதவனா இந்த பொல்லாதவன்?

வர வர எதைத்தான் காப்பி யடிக்கிறதுன்னு தெரியல. தனுஷ் என்னமோ "பொல்லாதவன் படம் வேற படமே இருக்க முடியாது. வெற்றிமாரனுடைய வெற்றியே இப்படி ஒரு படம் கொடுத்ததுதான்"ன்னு டயலோக்கெல்லாம் விட்டுட்டு திரிஞ்சாரு. அதுவும் அந்த கடைசி க்ளைமெக்ஸ் காட்சிக்காக ஆறு மாதமா கஷ்டப்பட்டு பாடி பில்ட் பண்ணேன்னு எல்லாம் சொன்னாரு. இப்பத்தானே தெரியுது எதுக்கு பாடி பில்ட் பண்ணியிருக்காருன்னு...Apocalypto படத்துல வந்த சண்டை காட்சியை அப்படியே எடுக்கணும்ங்கிறதுக்காக அந்த ஹீரோவை போலவே இருக்கணும்ன்னு நெனச்சிருக்கார் போல. ;-) சண்டை காட்சி மட்டும்தான் காப்பின்னு நெனச்சீங்களா? படத்தோட கருவே 1985-இல் வெளியான Bicycle Thief என்ற படத்தோட கதைதான் இது.

காப்பி காப்பின்னு பேசிட்டு விஜயை பற்றி சொல்லாமல் விடுவோமா நாம.. போக்கிரி படமே தெலுங்கு படத்தோட தழுவல்தான். அந்த க்ளைமேக்ஸ் சண்டை காட்சி இருக்கே, அது Banlieu 13 என்ற படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே.. அது உண்மையா? :-))

Tuesday, June 24, 2008

31. இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கும் நடிகர் தருணுக்கும் சண்டை

விஷயம் தெரியாதா உங்களுக்கு? ரெண்டு பேரும் சண்டை போட்டு ரோட்டுல உருண்டு பிரண்டாங்களே. முதல்ல அந்த சண்டை காட்சியை பாருங்க:பார்த்தீங்களா?

அந்த குட்டி பையந்தான் தருண். தமிழில் புன்னகை தேசம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அவனுடன் சண்டை போடுறவந்தான் அறிந்தும் அறியாமலும் படம் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்று பில்லா வரை எடுத்திருக்கிறார். விஷ்ணுவர்தன். "அடிங்கண்ணா"ன்னு அண்ணனுக்கு ஊக்கம் கொடுக்கிறாரே அவர்தான் ஸ்ருதி. தித்திக்குதே, ஸ்ரீன்னு சில படங்கள் நடிச்சு காணாமல் போயிட்டாங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் பேத்தி. அப்புறம் சொல்லவே தேவையில்ல நம்ம அஞ்சலி. பேபி ஷாமிலி.
இதை தவிர இன்னொருத்தரும் நடிச்சிருக்காரு. டான்ஸ் மாஸ்டரா இருந்து கதாநாயகனாக மாறி இப்போ இயக்குனராக இருக்கும் பிரபு தேவா. அஞ்சலி படத்துல வரும் பாடல்களில் ஒருத்தர் extraordinary-ஆ ஆடுவார் வாருங்க. அதுதான் சின்னப் பையன் பிரபு தேவா. ஒரு பெரிய பட்டாளமே நடிச்ச படமிது. இந்த குட்டி பசங்கள்ல வேற யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

Monday, June 23, 2008

30. யுவனாக மாறிய இளையராஜா

மகன் அப்பாவைப் போல் மாறலாம். அப்பா மகனைப்போல் மாற முடியுமா?
யுவன் ஷங்கர் ராஜா அப்பா இளையராஜாதான் குரு. அவர் இசைதான் இவருக்கு பாடம். அதை வைத்துதானே இசை கற்றுக்கொண்டார். அதனால், அப்பாவை போல் இசையமைக்க யாராவது கேட்டால், ஏதாவது ஒரு டியூனை சுட்டு போட்றலாம்.

ஆனால், அப்பா மகன் ஸ்டைலில் இசையமைத்தால் எப்படி இருக்கும்? இளையராஜா is a Great Genius. இதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்? :-)

Sunday, June 22, 2008

29. சூர்யாவின் நெத்தியடி

SJ சூர்யா முதன் முதலில் திரையில் வந்த படம் எது என்று கேட்டால் நியூ படத்தில் கதாநாயகனாக என்று சிலர் சொல்வார்கள். அட.. அந்த படம் இல்லைங்க. ஏற்கனவே அவர் இயக்கிய குஷி படத்துல கதையில் டர்னிங் பாய்ண்ட் காட்சியில், விஜய் விபத்துக்குள்ளாகும் காட்சியில் வருவார். அதுதான் அவர் தோன்றிய முதல் படம்ன்னு மற்ற சிலர் சொல்வார்கள்.

ஆனால், அதுவும் இல்லைங்க. Sj சூர்யா பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும்போது பாண்டியராஜனின் நெத்தியடி படத்தில் அவர் ஏற்கனவே நடித்திருப்பார். இதோ பாருங்க:

Saturday, June 21, 2008

28. மைக்கேல் மதன காமராஜன்

கமலஹாசனின் படங்கள் என்றாலே வித்தியாசம்தான். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக ஏதாவது பண்ணனும்ன்னு நினைத்து அதை முயற்சிப்பவர். அவருடைய படங்களிலேயே மிகவும் கவர்ந்த படம் மைக்கல் மதன காராஜன். நாலு கமல். திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு.

படம் முழுக்க கிரேஸி மோகனின் வசனங்களில் சிரிப்பொலிகள். வசனங்களில் மட்டுமல்ல. காட்சிகளிலும் சிரிப்பொலிகள்தான்.

இங்கே நம்ம காமேஷ்வரனும் திருப்புர சுந்தரியும் பண்ற காமேடியை பாருங்க:"என்னதிது?"

"எது"

"கட்டிண்டிருக்கோம்"


இது ஐயராத்து காமேஷ்வரனின் மீன் காமேடி:"ஐயய்யோ.. மீன்? அபச்சாரம்"

"அச்சச்சோ! சாம்பாரில் போட்டுட்டாய்"

"என்னடா காணலை.."

"தோ வந்துடுத்து.. போயிடுத்து.. நீந்துறுது??.."

"இப்போ அதுவா முக்கியம். எப்படிறா எடுக்க போறாய்?"

"மீன் பிடிக்கிறவங்க யாராவது கூப்பிடலாமா?"

"ஓய்.. கரண்டி எடுறா"

"த்த்த்த்.. மீன் பிடிக்கீற கரண்டி ஏதாவ்..."

"ஷூ. சம்பந்தி காதுல விழுந்துட போகுது"

"சாம்பார்ல விழுந்துட்டுது. காதுல விழுந்தால் என்ன?"


மதன் ராஜூ ஆள்மாறாட்டம்:"என்னை மாதிரி உட்காருய்யா"

"நீ நிக்குறீயே?"


காமேஷ்வரன் மதனாய் மாறும் காட்சி:"பீம் பாய் பீம் பாய்.. அந்த லாக்கர்ல இருந்து ஆறு லட்சத்தை எடுத்து இந்த அவினாஷி நாயி மூஞ்சுல விட்டெறி"

இப்படி படம் முழுக்க நாலு கமல்களும் அவர்கள் ஜோடிகளும், கூடவே வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் கலக்கியிருப்பாங்க. படத்தில் க்ளைமேக்ஸ் காட்சி ஒரு மலை உட்சியில் உள்ள பங்களாவில் நடக்கும். அங்கேதான் 4 கமலும், அப்பா, அம்மாவும் சேறும் காட்சி. அப்போது நடக்கும் சம்பவங்களும் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பிக்கும்போதும் சிரிப்பு சரவெடிதான். :-))))) கடைசி சிடி அடிக்கடி போட்டு பார்த்து தேய்ச்சு எடுத்தாச்சுல்ல. :-))))

Friday, June 20, 2008

27. யாரடி நீ மோகினியில் நடந்த தவறுகள்

யாரடி நீ மோகினி ஒரு தெலுங்கு படம் ரீமேக்ன்னு யாவரும் அறிந்ததே. தெலுங்கு படத்துல வெங்கடேஷ் கதாநாயகனா நடிச்சிருப்பார். அவர் ரோலை பக்காவா செய்திருப்பார். தனுஷ் என்னடான்னா ரஜினி மாதிரி காப்பி பண்ண பார்த்து எரிச்சல்தான் மூட்டினார்.

சரி, அதை விடுங்க. இப்போ நாம் பார்க்க போறது ஒரே காட்சியில் வருகிற இரண்டு தவறுகள். இயக்குனர் கவனிக்காமல் விட்டாலும் நம்மாளுங்க விடுவாங்களா??கண்டுபிடிச்சீங்களா?

1- தனுஷ் நயந்தாரா வருவதை வேறு ஒரு ஆங்கிலில் பார்க்கிறார். ஆனால், நயந்தாராவோ அவருக்கு பின்னால் இருந்துல்ல வருகிறார்?

2- இது நல்லாவே தெரியுது. விமானம் மேலே பறந்து பிறகுதான் தனுஷ் சீட் பெல்டே போடுறார். ஹய்யோ ஹய்யோ!!!!!

Thursday, June 19, 2008

26. டைரக்டர் ஷங்கரோட சுட்ட பழம்

பிரமாண்டம்ன்னா அது ஷங்கர். ஷங்கர்ன்னா அது பிரமாண்டம்ன்னு எல்லாரும் சொல்லும் காலம் இது. ஆனால், ஷங்கர் சுட்ட தோசை பார்த்திருக்கீங்களா? இதை பாருங்கஅடப்பாவி மக்கா.. ஷங்கர்! யூ டூ?
பாய்ஸ் படத்துலேயே இந்த காட்சிதான் பார்க்க கொஞ்சம் உருப்படியா இருந்துச்சு. அதுவும் சுட்ட பழம் சுடாதா பழம்தானா? :-))))

Wednesday, June 18, 2008

25. ஜெயம் கொண்டான்

உன்னாலே உன்னாலே வெற்றிப் படமாய் அமைந்து வினய் நடிக்கும் அடுத்தப் படம் ஜெயம் கொண்டான். மணிரத்னத்திடம் 7 வருடமாக இணை இயக்குனாராக இருந்து இயக்குனாராக ஆகும் கண்ணனின் முதல் படம். ஆடியோ ரிலீஸுக்கே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வந்து வாழ்த்தி "படம் நல்லா வந்திருக்கு. கண்டிப்பாக ஹிட் ஆகும்"ன்னு சொல்றாங்க.. எல்லா நிகழ்ச்சியிலும் இதே டயலோக்தானே சொல்றாங்கன்னு கேட்குறீங்களா? அப்படின்னா நாம் வெயிட் பண்ணி படத்தை பார்த்துட்டு ஆமாவா இல்லையான்னு சொல்வோம். இப்போ படத்தின் டிரேயிலர் பாருங்க.

Tuesday, June 17, 2008

24. நல்லா ஓட்டுறாருப்பா விமானத்தை

போயிங்-747 (Boeing-747) விமானம் ஹாங்காங்கில் தரையிறங்கும் காட்சியை பாருங்க. விமானி ரொம்ப கைத்தேர்ந்தவர் போல. வளைவெல்லாம் சூப்பரா போடுறார்.கோரியன்-747 (Korean-747) தரைக்கு பக்கத்துல வந்தும் சூப்பரா வளைச்சு வளைச்சு இறக்குறாரு இந்த விமானி.இந்த மாதிரி விமானிதான் நாம் ஏறப்போகும் விமானம் ஓட்டுவார்ன்னு தெரிஞ்சால் கண்டிப்பாக ஏறிடாதீங்க.இதை பாருங்க.. இன்னும் கொஞ்சம்தான் ஆக்ஸ்டிடண்ட் ஆக.

Monday, June 16, 2008

23. உலக நாயகனே..

கமலின் தசவதார 10 ரோலையும் பார்க்கணுமா? உலக நாயகனே பாடல் இதோ உங்கள் பார்வைக்கு:

Sunday, June 15, 2008

22. வா வா அன்பே வா

தனியார் வானோலியில் ஆர்.ஜே. பிறகு சிங்கப்பூரில் டீஜே. அப்படியே தமிழ்நாட்டுக்கு சென்று சன் மியூஸிக்கில் ப்ளேட் நம்பர் 1 நிகழ்ச்சியில் வீ.ஜே. அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் (தீபாவளி, தலைநகரம்) துக்கடா கதாப்பாத்திரங்கள். திரும்ப நாடு திரும்பி சொந்தமாக இசையமைத்து வரி எழுதி பாடல் பாடி வெளியிட்ட ஆல்பம் The Journey Begins. Funky ஷங்கர் என அழைக்கப்படும் இந்த இளைஞர் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல துறைகளில் புகுந்து, அதில் ஓரளவு வெற்றிப்பெற்று இப்போது இசைத்துறையிலும் நுழைந்தாகிவிட்டது. நீங்களும் பாருங்களேன்.

Saturday, June 14, 2008

21. ஜேக்கி சான் vs ப்ரூஸ் லீ

சைனீஸ் குங்ஃப்பூ பிரியர்களா நீங்கள்? அப்படின்னா உங்களுக்கு மிக பரிட்சயமான பெயர்கள் ஜேக்கி சான், ப்ரூஸ் லீ.

ப்ரூஸ் லீ வாழ்ந்த காலத்தில் அவர் ஒரு லெஜெண்டாக வாழ்ந்தவர். பலருக்கு தற்க்காப்பு கலை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்ப்பட்டதே இவரின் திறமையை பார்த்துதான். ப்ரூஸ் லீ படங்கள் சக்கை போடு போட்டுட்டிருந்த காலத்தில்தான் ஜேக்கி சான் சினிமா உலகில் நுழைந்தார்.

அப்போது சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள்; விலல்ன் க்ரூப்பில் ஒரு துக்கடா கேரக்டர்ன்னு பண்ணிக்கிட்டு இருந்தார். யார் பெஸ்ட்டுன்னு இங்கே கேட்கப்படாது. ஏனென்றால் ப்ரூஸ் லீயின் வழி தனி வழி. ஜேக்கி சான் பின்னாளில் அவருக்கென்று தனி வழி தேடிக்கொண்டதால்தான் ஹாலிவூட்டுலேயும் இவருக்கு பலத்த வரவேற்பு.

நீங்க இந்த வீடியோவ பாருங்க.

Friday, June 13, 2008

20. இளைய சமூதாயத்தினரின் வாழ்க்கை நடைமுறை

இப்போதுள்ள இளையதலைமுறையினரில் எத்தனை பேர் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை பெருமையாக நினைக்கின்றனர்? கண்டிப்பாக இருக்கின்றனர். ஆனால், பலர் தன்னை US ரிட்டர்ன் மாதிரி பந்தா பண்ணிக்கிட்டு திரியிறாங்க. இத்தனைக்கும் பக்கத்து ஊருக்கு கூட போயிருக்க மாட்டாங்க. பேரை கூட மாத்தி வச்சிக்கிறாங்க.. கந்தசாமி இப்போ Ken... மாடசாமி இப்போ Mark.. முத்துசாமி இப்போ Sam.. ஒரு கூலிங் க்ளாஸ், ஃப்ரெஞ்சு பியர், ரெண்டு விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கி "Yo Yo"ன்னு என்னமோ புரியாத மொழியில ஆட்டிக்கிறாங்க.

இது நாம்தானா? நம் கலாச்சாரம் இதுதானா? சொந்த பெயரை கூட சொல்ல கூச்சமா?இது 8-10 வருடத்துக்கு முன் தீபாவளி விளம்பரமாக பெட்ரோனஸ் வெளியிட்டது. ரொம்பவும் கருத்துள்ள விளம்பரங்களில் இதுவும் ஒன்று. பெரியவர்கள் மேல் மரியாதையும் பாசமும் நிறைய இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்க கூச்சப்படும் நம் இளைய சமூதாயத்தினர். தன்னுடைய ஒரிஜினாலிட்டியை மறைத்து யாரோ ஒருத்தருடைய நடைமுறை வாழ்க்கையை தன் வாழ்க்கை நடைமுறையாக மாற்ற நினைக்கும் நம் இளைஞன்.

பி.கு: நேற்று இறைவனடி சேர்ந்த என் சின்ன பாட்டி நினைவாக இதை பதிக்கிறேன்.

Thursday, June 12, 2008

19. இது நல்லா இருக்கே..

ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவாஜி, கமல் ஹாசன், ரகுவரன்னு ஒரு பெரிய பட்டாளமே ஒரே படத்துல நடித்தால் எப்படி இருக்கும்? இப்படி இருக்கும்.. :-))

Wednesday, June 11, 2008

18. நீக்கப்பட்ட அதிரவைக்கும் காட்சிகள்

சிவாஜி - தி பாஸ்.. பேரை கேட்டாலே அதிருதுல்ல..

ஆனால், அதிர வைக்காத சில காட்சிகள் இருக்கே. அதாவது படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள்.
மூன்று மணி நேரத்துக்கும் கூடுதலாக எடுக்கப்பட்ட படம். இரண்டரை மணி நேரத்துக்குள்ள சுருக்கணும்ன்னா இப்படித்தானே செய்ய முடியும்.

Tuesday, June 10, 2008

17. டெட் பாடி ( Dead Body) ரோட்டுல...

டெட் பாடி புகைப் பிடிக்குமா? டெட் பாடி பேருந்துலதான் ஏறுமா? டெட் பாடி சண்டைதான் போடுமா?

இங்கே இது எல்லாமே நடக்குதே! :-)

இப்போது உள்ள பல காமெடியன்களிடம் "உங்க ரோல் மாடல் யார்?"ன்னு கேளுங்களே. உடனே அவங்க சொல்ற பதில் நாகேஷ் நாகேஷ் நாகேஷ். உலக நாயகன் கமல் ஹாசனே நடிகர் நாகேஷின் நடிப்பில் லயித்து போனவர். நகைச்சுவை மட்டுமல்லாது, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களிலும் நன்கு பெயர் போட்டவர்.

மகளிர் மட்டும் படம் ஒரு கருத்துள்ள நகைச்சுவை படம். அதில் கமல் ஹாசன் நாகேஷை கூப்பிட்டு இந்த படத்துல நீங்க கண்டிப்பாக நடித்தே ஆகணும்ன்னு அன்பு வேண்டுகோள் விடுத்தார். நாகேஷும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றினார்.

படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோஹினி நாசர் இறந்துட்டார்ன்னு நினைத்து அவர் பாடியை கடத்துவார்கள். வீட்டுக்கு வந்ததும்தான் தெரியும் அவங்க கொண்டு வந்தது நாசரை (படத்துல இவருக்கு இவங்க மூன்று பேரும் வைத்த பெயர் மூக்கன்) அல்ல. நாகேஷை! எப்படியாவது திரும்ப அதே மருத்துவமனையில சேர்த்துடணும்ன்னு பார்த்தால் விடிந்துவிடும். சரி, ஒரு டாக்ஸி பிடித்து கொண்டு போலான்னு பார்த்தால் டாக்ஸியும் கிடைக்காது. ஒரு கருப்பு கண்ணாடியை மாட்டி விட்டு, கையில ஒரு சிகரட்டை பற்ற வைத்து காலில் கயிறு கட்டி பொது பேருந்துல் கொண்டு போவாங்க பாருங்க.. அதுக்கு ஒரு :-))))))).. அப்புறம்ம் ரோஹினியோட கணவன் தலைவாசல் விஜய் தன்னோட மனைவி இன்னொருத்தனை பேருந்து நிலையத்துல கட்டிக்கிட்டு இருப்பதை பார்த்து நாகேஷுடன் சண்டை போடுவார் பாருங்க. அதுக்கும் ஒரு :-))))))))).இந்த் பதிவு சென்ஷி அண்ணனுக்கு சமர்ப்பணம். :-)

Monday, June 9, 2008

16. அன்றும் இன்றும் சூர்யா

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.

அன்று


இன்று


அட.. அவர் நடனத் திறமைதாங்க. :-))

Sunday, June 8, 2008

15. பாட்டிக்கு ரொம்ப லொள்ளுதான்

ரோமானியால உள்ள இந்த பாட்டிக்கு லொள்ளு ஜாஸ்திதான். ஹீஹீஹீ..

Saturday, June 7, 2008

14. சென்னை 600028-இல் நீங்கள் பார்க்காதது

சென்னை 600 028 ஒரு ஹிட் படம். ஹிட்டா ஆக்குனது ரசிகர்கள்தான். க்ரிக்கேட் ரசிகரா இல்ல தமிழ் படம் ரசிகரான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனால், மொத்தத்துல படம் நல்ல படியா எடுத்திருந்தாங்க. அதை ஒத்துக்கொண்டுதான் ஆகணும். இப்போ இன்றைக்கு நாம் பார்க்க போறது சென்னை 600 028 படத்துல இருந்து நீக்கப்பட்ட காட்சி. டியேட்டர்லேயோ டிவிடிலேயோ பார்க்காத காட்சி.

Friday, June 6, 2008

13. உன்னாலே உன்னாலே பிட்

உன்னாலே உன்னாலே..

மியூசிக்கல் ஹிட் படம். ஜீவா ஒரு ஒளிப்பதிவராயிருந்ததால் அவருடைய படங்களின் காட்சியமைப்புகள் எப்போதும் கவிதைத்தனமாக இருக்கும். ஜீவா - ஹர்ரீஸ் கூட்டணியில் வெளியாகிய 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே.. மூன்றிலும் இசை சூப்பர் ஹிட்.

உன்னாலே உன்னாலே படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடல் பிடித்திருக்கும். ஆனால், இந்த பிட் பாடலும் சூப்பரோ சூப்பர்.

"சிறு சிறு உறவுகள் பிரிவுகள் ஏன் நினைவு கொள் ஹோ
வர வர கசக்குது கசக்குது என் இளமையும் ஹேய்.
நினைத்தது நடந்தது முடிந்தது என் கனவுக்குள் ஹா.
என்னாச்சோ தெரியலையே.."

காட்சியமைப்பு 1:


காட்சியமைப்பு 2:

Thursday, June 5, 2008

12. சூர்யா vs. மாதவன்

மணிரத்னம். பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல. இவரோட படத்துல வசனங்கள் மிகக் குறைவா இருக்கும். வர்ற கொஞ்ச நஞ்ச வசனங்களும் மிக அழுத்தமானதா இருக்கும். ஒரு சில காட்சிகளில் வசனமே தேவை இல்லைங்க. இவர் படங்களிலேயே எனக்கு பிடிச்ச ஒரு படம், ஒரு காட்சின்னு கேட்டால், நான் சொல்றது அஞ்சலி படம். அதுல ரேவதி அஞ்சலி பாப்பா கிட்ட "நான் உன் அம்மாடா.. என் கிட்ட பேச மாட்டியா?"ன்னு கெஞ்சுவாங்க. அந்த கட்டத்துல பேபி ஷாமிலி.. இல்ல இல்ல.. அஞ்சலின்னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு தத்ரூபமா இருக்கும் அவரோட நடிப்பு. அம்மா பிள்ளை பாசத்துக்கு ஏங்குற நடிப்பை ரேவதி அசத்தி காட்டியிருப்பாங்க. ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட 2-3 வயது குழந்தை அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணும்ங்கிறதுல ஷாமிலி கலக்கியிருப்பாங்க. போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க. அந்த ஒரு காட்சி போதும் மணிரத்னத்தின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இப்போ இன்று பார்க்க போகிற காட்சி ஆயுத் எழுத்திலிருந்து. இந்த படத்துல பார்த்தீங்கன்னா 3 மலை 3 துருவங்களா நடிச்சிருப்பாங்க. சரி.. முறைக்காதீங்க. 2 மலை 1 குன்றுன்னு வச்சிக்கலாமா? சித்தார்த்துக்கு இரண்டாவது படம். மாதவன், சூர்யாவ காம்பேர் பண்ணால் சின்ன பையந்தான் சித்தார்த். படமும் முக்கால்வாசி மாதவன், சூர்யாவை சுற்றிதான் நடக்கும். இதுல ரசித்த காட்சின்னு சொல்றதுன்னா பல தொகுத்து வழங்கலாம். அதுல மாதவன் சூர்யாவை போய் பார்த்து அரசியலில் நீ தலையிடாதேன்னு சொல்லுவார் பாருங்க. ஒரு சண்டை காட்சி கூட இருக்கும். அது சூப்பரா அமைஞ்சிருக்கும்.

மாதவன் லவ்வர் பாயாக அறீமுகப்படுத்தியதே மணிரத்னம்தான். அடுத்த படத்துல அப்பா. மூன்றாவது படத்துல வில்லன். ஆனா, ஒரு வில்லனாகிற முகபாவம் மாதவனுக்கு இல்லையே. என்னத்தான் சீரியஸா லூக் வச்சிக்கிட்டாலும் ஒரே ஒரு சிரிப்பு போதும். திரும்ப லவ்வர் பாயாக மாற்றிவிடும். அதனால், மாதவன் எடுத்துக்கிட்ட முதல் படி, தலைமுடியை ஒட்ட வெட்டிட்டு வந்ததுதான். அது ஒரு வகையில் ப்ளஸாக அமைந்தது. அடியாளாக வருவார்.

சூர்யா. படத்தின் ஹீரோ. புத்திசாலி. மாணவர் தலைவன். தன்னுடைய நம்பிக்கையே தன்னுடைய பலம் என்று நம்பும் ஒரு கேரக்டர். இந்த இரண்டு பேரையும் மோத விட்டால் எப்படி இருக்கும். ஹீரோவா? வில்லனா? எவன் எவனை அடிப்பான்? எவன் வெற்றி பெறுவான்னு நம்மளி சீட் நுனிக்கு கொண்டு வரும் ஒரு காட்சி.எப்போதும் ஹீரோ அடிச்சு வில்லன் சுருண்டு தூர விழுற மாதிரி, முகத்தில் ரத்தம்ன்னுதான் பார்த்திருப்போம். ஆனால், இதுல ரெண்டு பேருமே இப்படி அடிவாங்குறாங்களே. அதுவும் கொஞ்சம் வித்தியாசம்தான்.

Wednesday, June 4, 2008

11. தாலாட்டு பாட நீயில்லையே

"தாலாட்டு பாட நீயில்லையே
தலை சாய்த்துக் கொள்ள மடியில்லையே
மனதோடு பேச வழியில்லையே
என் கண் மூடி தூங்க துணையில்லையே"

காதலியை பிரிந்து வாடும் ஒரு காதலனின் சோகம். வானவில் பாடல் திறன் போட்டியின் finalist சித்தார்த்தனின் குரலி ஜெய்யின் இசையில் வெளியாகியது. காட்சியமைப்பு எளிமையாக மற்றும் மிதமாக இருக்கிறது. சர்குணன் அந்த பாடலுக்கு ஏற்றமாதிரியே சோகத்துடன் அருமையா நடித்திருக்கிறார்.

வரிகளை எழுதிய கவிஞரை (யாரென்று தெரியவில்லை) கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

"காதல் என்பது தெய்வமானதா
கற்றுக் கொண்டேன் இது கஷ்டமானது
தெரிந்தும் கூட வணங்குகிறேன்
உன்னை சேராமல் வாடி நான் உருகுகிறேன்"


இதுவும் ஒரு மலேசிய மண்ணின் மைந்தரின் பாடல்:

Tuesday, June 3, 2008

10. பயங்கரமான ஒரு பேய் படம்

இது 80களில் வெளியான ஒரு தெலுங்கு படம். ஹீரோ அந்த காலத்து பிரபுதேவா போல ஆடுறாரு பாருங்க. பயங்கரமா பயம் காட்டினாலும் சிரிப்பும் சேர்ந்தே வருது. அது ஏன்?சரி.. இப்போ இதே பாடல் ஆங்கிலத்தில் வந்தால் எப்பப்டி இருக்கும்? இதை பாருங்களேன் Girlyman!!!!


இது மலாய்ல கூட இருக்கு.. இதை பாருங்கள் Gelimat!!!!

Monday, June 2, 2008

9. நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு

அப்பா கரடியை பற்றி பேசிட்டு மகனை பற்றி பேசலைன்னா ஒரு சிலர் கொதிச்சு எழுந்திடுவாங்கன்னு யாரோ சொன்னாங்க. அதனால் இன்னைக்கு மகன் என்ன பண்றார்ன்னு பார்ப்போம்.

நேற்று அப்பா ரைமிங் வகுப்பு நடத்திட்டு போயிட்டார். அதுவே மகனும் பேசினால் எப்படி இருக்கும்?

"Afterall சின்ன பையன் முருகன்
அப்பனுக்கே செஞ்சான் பாடம்
இந்த சின்ன பையன்
அப்பனுக்காக செய்ய கூடாதா வாதம்"

"நான் பேசலை
பேசுறது நான் பேச வைக்கிறது அவரு
நடிக்கிறது நான் நடிக்க வைக்கிறது அவரு
நிக்கிறது நன் நிக்க வைக்கிறது அவரு
நடை போடுறது நான் நடக்க வைக்கிறது அவரு
அவருன்னா நீங்க கேட்கலாம் அவர் யாருன்னு
சொல்லாமலேயே தெரியும் அவர் டி. ஆருன்னு.."

அட..ரைமிங்-ஆ பேசினால் கூட பரவாயில்லைங்க. பல காட்சிகளில் ஓவர் ஆக்டிங் இருக்கே! யப்பா!!!! ச்சும்மா ச்சும்மா தங்கச்சி பாசம்ன்னு கண்ணு கலங்கிறது என்ன? தலை ஆட்டி ஆட்டி முடியை கோதி விடுறது என்ன? பேசுற டயலோக்குக்கும் செய்யுற பாவனைக்கும் சம்பந்தமே இல்லாதது என்ன? இதுக்கும் மேலே சிரிப்பை வரவைக்கும் ரைமிங்தனமான டயலோக்ஸ் என்னன்னு வருசையா எழுதிட்டே போகலாம். அதெல்லாம் சொல்லி முடிக்க நேரமாகும். அதனால நீங்க நேரா ஒரு வசந்த கீதம் படத்துல சின்ன சிம்புவோட ஓவர் ஆக்டிங்கை பாருங்க. :-)

Sunday, June 1, 2008

8. டி.ஆர் Nursery Rhymes

அடுக்குமொழி மன்னனை பற்றி ஒரு பதிவும் போடலைன்னா எப்படி?

இன்னைக்கு இவர்தான் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட்.. அது எப்படித்தான் இவருக்கு இந்த மாதிரி அடுக்கு மொழி அலேக்கா வருதுன்னு தெரியல. பல வருடங்கள் ஃபெயிலாகி ஃபெயிலாகி LKG-ல படிச்சிருப்பாரோ?

"வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி
உன் உடம்பை பிச்சு
போட்டுடுவேன் பஜ்ஜி"