Thursday, June 5, 2008

12. சூர்யா vs. மாதவன்

மணிரத்னம். பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல. இவரோட படத்துல வசனங்கள் மிகக் குறைவா இருக்கும். வர்ற கொஞ்ச நஞ்ச வசனங்களும் மிக அழுத்தமானதா இருக்கும். ஒரு சில காட்சிகளில் வசனமே தேவை இல்லைங்க. இவர் படங்களிலேயே எனக்கு பிடிச்ச ஒரு படம், ஒரு காட்சின்னு கேட்டால், நான் சொல்றது அஞ்சலி படம். அதுல ரேவதி அஞ்சலி பாப்பா கிட்ட "நான் உன் அம்மாடா.. என் கிட்ட பேச மாட்டியா?"ன்னு கெஞ்சுவாங்க. அந்த கட்டத்துல பேபி ஷாமிலி.. இல்ல இல்ல.. அஞ்சலின்னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு தத்ரூபமா இருக்கும் அவரோட நடிப்பு. அம்மா பிள்ளை பாசத்துக்கு ஏங்குற நடிப்பை ரேவதி அசத்தி காட்டியிருப்பாங்க. ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட 2-3 வயது குழந்தை அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணும்ங்கிறதுல ஷாமிலி கலக்கியிருப்பாங்க. போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க. அந்த ஒரு காட்சி போதும் மணிரத்னத்தின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இப்போ இன்று பார்க்க போகிற காட்சி ஆயுத் எழுத்திலிருந்து. இந்த படத்துல பார்த்தீங்கன்னா 3 மலை 3 துருவங்களா நடிச்சிருப்பாங்க. சரி.. முறைக்காதீங்க. 2 மலை 1 குன்றுன்னு வச்சிக்கலாமா? சித்தார்த்துக்கு இரண்டாவது படம். மாதவன், சூர்யாவ காம்பேர் பண்ணால் சின்ன பையந்தான் சித்தார்த். படமும் முக்கால்வாசி மாதவன், சூர்யாவை சுற்றிதான் நடக்கும். இதுல ரசித்த காட்சின்னு சொல்றதுன்னா பல தொகுத்து வழங்கலாம். அதுல மாதவன் சூர்யாவை போய் பார்த்து அரசியலில் நீ தலையிடாதேன்னு சொல்லுவார் பாருங்க. ஒரு சண்டை காட்சி கூட இருக்கும். அது சூப்பரா அமைஞ்சிருக்கும்.

மாதவன் லவ்வர் பாயாக அறீமுகப்படுத்தியதே மணிரத்னம்தான். அடுத்த படத்துல அப்பா. மூன்றாவது படத்துல வில்லன். ஆனா, ஒரு வில்லனாகிற முகபாவம் மாதவனுக்கு இல்லையே. என்னத்தான் சீரியஸா லூக் வச்சிக்கிட்டாலும் ஒரே ஒரு சிரிப்பு போதும். திரும்ப லவ்வர் பாயாக மாற்றிவிடும். அதனால், மாதவன் எடுத்துக்கிட்ட முதல் படி, தலைமுடியை ஒட்ட வெட்டிட்டு வந்ததுதான். அது ஒரு வகையில் ப்ளஸாக அமைந்தது. அடியாளாக வருவார்.

சூர்யா. படத்தின் ஹீரோ. புத்திசாலி. மாணவர் தலைவன். தன்னுடைய நம்பிக்கையே தன்னுடைய பலம் என்று நம்பும் ஒரு கேரக்டர். இந்த இரண்டு பேரையும் மோத விட்டால் எப்படி இருக்கும். ஹீரோவா? வில்லனா? எவன் எவனை அடிப்பான்? எவன் வெற்றி பெறுவான்னு நம்மளி சீட் நுனிக்கு கொண்டு வரும் ஒரு காட்சி.



எப்போதும் ஹீரோ அடிச்சு வில்லன் சுருண்டு தூர விழுற மாதிரி, முகத்தில் ரத்தம்ன்னுதான் பார்த்திருப்போம். ஆனால், இதுல ரெண்டு பேருமே இப்படி அடிவாங்குறாங்களே. அதுவும் கொஞ்சம் வித்தியாசம்தான்.

11 Comments:

said...

மீ த பர்ஸ்ட்டு :)

said...

//மீ த பர்ஸ்ட்டு//

ரிப்பீட்டே :))

said...

அஙக மணிரத்னம், ரேவதியோட திறமையை விட சாமிலியோட திறமைதான் பெஸ்ட்டு...

said...

/
3 மலை 3 துருவங்களா நடிச்சிருப்பாங்க. சரி.. முறைக்காதீங்க. 2 மலை 1 குன்றுன்னு வச்சிக்கலாமா?
/

இதுவுமே ரொம்பா ரொம்பா ஓவரு
:(((

said...

மீ தெ 5

said...

தலைப்பு ஜூப்பரு

said...

சென்ஷி நீங்கதானுங்க பர்ச்ஸ்டு

said...

2ம் நீங்கதான்

said...

தமிழன் ரேவதினா யாரு????

said...

~ 10 ~

said...

வெள்ளிக்கிழமை போஸ்ட் இதுவரைக்கும் பப்ளிஷ் ஆகல :((

நான் எங்க போய் கமெண்ட் போடுறது..