Thursday, February 26, 2009

73. பிச்சைக்காரனாக அஜித்

ஆஹா.. கிளம்பிட்டாங்கையா....

விஜய் மக்கள் அஜித் மேலே கடுப்பாதான் இருப்பாங்க.. அதுக்குன்னு இப்படியா அஜித்தை பிச்சைக்காரனாக்குறது???

Wednesday, February 25, 2009

72. எல்லா புகழும் இறைவனுக்கே



ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி மட்டும் பெருமை சேர்க்கவில்லை. விருது வாங்கியதும் அவர் சொன்ன “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தை உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் நம் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

கொஞ்சம் ஆங்கிலம் தெரிஞ்சிட்டாலே தமிழில் பேசுவது என்னமோ உலக மாபெரும் குற்றம்போல் ஆங்கிலத்தில் பேசும் பலருக்கு இது கண்டிப்பாக ஒரு பாடமாக அமைய வேண்டும். சபாஷ் ரஹ்மான் சார்!

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் பார்த்தபோது ‘ம்ம்.. படம் நல்லாதான் இருக்கு!’ என்று தோன்றியது. பாடலும் எப்போதும் போல் ரஹ்மான் ஸ்டைல்.. திரும்ப கேட்கலாம் ரகமாகத்தான் இருந்தது. இதுக்கே ஆஸ்கார் விருதில் இரண்டை அப்படியே அள்ளிட்டு வந்துட்டாரு ரஹ்மான்..

ஆனால், அவர் முன்பு போட்ட ரோஜா, புதிய முகம், பாம்பே படம் பாடல்களுக்கு எல்லாம் எப்போதோ எத்தனையோ ஆஸ்கார் விருது வாங்கியிருக்க வேண்டும். (ஆஸ்கார் கொடுக்கலைன்னா என்ன.. நம்ம மனசால அவருக்கு எத்தனையோ விருது வழங்கியாச்சு ;-)) இந்த ஜைஹோ பாடலை விட அவர் 90-க்களில் போட்ட பல பாடல்கள் சூப்பர் ரகம்!

பரவால்ல.. கிடைச்சிடுச்சு.. கொஞ்சம் லேட்டா ஆனாலும் இசையில் ஒரு புயல் என்றால் அவர் கண்டிப்பா நம்ம ரஹ்மான் தான்! எத்தனை சிகரத்தை தொட்டாலும் அவர் எப்போதும் இப்போது இருப்பதுப்போல் அடக்கமாக இருப்பார். இதுவும் அவரது சீக்ரட் ஆஃப் சக்ஸஸ் (அட.. இதுவும் இவரோட பாடல்தான்!)