Friday, June 13, 2008

20. இளைய சமூதாயத்தினரின் வாழ்க்கை நடைமுறை

இப்போதுள்ள இளையதலைமுறையினரில் எத்தனை பேர் தன்னுடைய ஒரிஜினாலிட்டியை பெருமையாக நினைக்கின்றனர்? கண்டிப்பாக இருக்கின்றனர். ஆனால், பலர் தன்னை US ரிட்டர்ன் மாதிரி பந்தா பண்ணிக்கிட்டு திரியிறாங்க. இத்தனைக்கும் பக்கத்து ஊருக்கு கூட போயிருக்க மாட்டாங்க. பேரை கூட மாத்தி வச்சிக்கிறாங்க.. கந்தசாமி இப்போ Ken... மாடசாமி இப்போ Mark.. முத்துசாமி இப்போ Sam.. ஒரு கூலிங் க்ளாஸ், ஃப்ரெஞ்சு பியர், ரெண்டு விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கி "Yo Yo"ன்னு என்னமோ புரியாத மொழியில ஆட்டிக்கிறாங்க.

இது நாம்தானா? நம் கலாச்சாரம் இதுதானா? சொந்த பெயரை கூட சொல்ல கூச்சமா?



இது 8-10 வருடத்துக்கு முன் தீபாவளி விளம்பரமாக பெட்ரோனஸ் வெளியிட்டது. ரொம்பவும் கருத்துள்ள விளம்பரங்களில் இதுவும் ஒன்று. பெரியவர்கள் மேல் மரியாதையும் பாசமும் நிறைய இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்க கூச்சப்படும் நம் இளைய சமூதாயத்தினர். தன்னுடைய ஒரிஜினாலிட்டியை மறைத்து யாரோ ஒருத்தருடைய நடைமுறை வாழ்க்கையை தன் வாழ்க்கை நடைமுறையாக மாற்ற நினைக்கும் நம் இளைஞன்.

பி.கு: நேற்று இறைவனடி சேர்ந்த என் சின்ன பாட்டி நினைவாக இதை பதிக்கிறேன்.

4 Comments:

said...

:((

ஆழ்ந்த அனுதாபங்கள் மை பிரண்ட்

said...
This comment has been removed by the author.
said...

லீனா அழகா இருக்கா இல்ல...

Anonymous said...

எனக்கு மிகவும் பிடித்த பெட்ரோனாஸ் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. முக்கியமா பெரியம்மா பாட்டி :)) இன்று அவர் இல்லையென்றாலும் அவருடைய புகழ் இவ்விளம்பரத்தின் வழி நிலைத்து நிற்கிறது. அப்புறம் வருடந்தோறும் கோடி கணக்கில் சம்பாதிக்கும் பெட்ரோனாசின் சமுதாய அக்கறையில் (CSR) இதுவும் ஒன்று.