Saturday, May 31, 2008

7. காக்க காக்க டப்பிங்

பசங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. எவ்வளவு பெருசா நாம் கதவை திறந்து கொடுக்கிறோமோ அவ்வளவு பெருசா யோசிப்பாங்க. செய்வாங்க.

இங்கே இந்த ரெண்டு பசங்களோட கிரியேட்டிவிட்டியை பாருங்க. காக்க காக்க படத்துல ரெண்டு வில்லன்கள் எவ்வளவு சீரியஸா பேசுற காட்சியை எப்படி 2 பன்னுக்காக ஏங்குற மாதிரி டப்பிங் பேசியிருக்காங்கன்னு பார்த்து ரசிங்க.

Friday, May 30, 2008

6. ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!

"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."

இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)

இப்படி உங்களுக்கு இதுக்கு முன்னே தோன்றிருக்கா? நடந்திருக்கா? எனக்கு இதுவரை தோணியது இல்ல. ஆனால், இப்படி தோன்றீனால் அதுதான் உண்மையான காதலாமே. இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)

Thursday, May 29, 2008

5. மின்னல் அழகே மின்னும் அழகே

தமிழ் காட்சிகள் மட்டும்தான் 24/7 ஃப்ரேம்ல வருமா? இல்லை இல்லை இல்லை. எல்லா மொழிகளிலும் கலக்கும் இந்த 24/7 ஃப்ரேம்ஸ்.

இன்று வருவது ஒரு மலையாள பாடல். முதல் தடவை கேட்கும்போது இது மலையாள பாடல்ன்னு நம்பவே மாட்டீங்க. இதுவரை மலையாள இசையில் இப்படிப்பட்ட பாடலை நான் கேட்டதே இல்லை. பாடலை கேட்கும்போது ஏதோ ஆல்பத்தில் வெளியாகிய தமிழ் பாடலோ என்று தோணும். அந்தளவுக்கு மலையாளி (அவங்க குழு பெயர்) கலக்கியிருக்காங்க. காட்சியமைப்பும் அழகாய் உள்ளது. கடைசியா பிருத்திவிராஜ் வேற வந்து அட்டெண்டன்ஸ் போடுறார். இந்த பாடலை உதய் எனக்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கேன்.

நீங்களும் பாருங்க. வரிகளும் நமக்கு புரியும் படியேதான் இருக்கு. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் எப்படி?

Wednesday, May 28, 2008

4. நாக்க மூக்க

விஜய் ஆண்டனி சுக்ரன்ல அறிமுகமாகும்போதே சப்போஸ் உன்னை காதலிச்சேன், உச்சி முதல் பாதம் வரைன்னு சில ஹிட்டோடத்தான் உள்ளே வந்தாரு. அடுத்து டிஷூம்ல ஆடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறவங்களையும் ஆட தூண்டுற மாதிரி டைலாமோ டைலாமோ டியூன் போட்டாரு. அதுக்கப்புறம் அவர் படத்துல ஏதாவது ஒரு பாடலாவது இந்த மாதிரி சுறுசுறுப்பா எழுந்திருச்சு ஆடுற மாதிரி ஒரு குத்து பாடல் இருக்கும்.

இப்போ காதலில் விழுந்தேன் படத்துல நாக்க மூக்க பாட்டுதான் டால்க் ஆஃப் தி டவுன். ஆண் குரலில் வரும் பாடலை இவரே பாடிட்டார். பெண் குரலில் வரும் பாடலை சின்னபொண்ணு பாடியிருக்காங்க. பாடலை கேட்கும்போதே அப்படியே நரம்பெல்லாம் முறுக்கேறி ஒரு குத்து குத்தி ஆடணும்போல இருக்கு. இந்த பாடலின் காட்சியை நேத்துதான் பார்த்தேன்.

நாகுல் (தேவையானியின் தம்பி) பாய்ஸ் படத்துல ஜூஜூவா அறிமுகமாகினார். இந்த ப்டத்துக்காக 20 கிலோ இறங்கினதும் பார்க்க சூப்பரா இருக்கார். ஏற்கனவே ஹர்ரீஸ் இசையில் சில பாடல்களை பாடிய இவர் நடிப்பில் ஹீரோவா சாதிப்பாரா? அவர் நடிப்பை படம் வெளியானதும் பார்த்துப்போம். இப்போ எலலாரும் எழுந்திருச்சி நாற்காலியை சைட்ல தள்ளி வச்சிட்டு ஆட ஆரம்பிங்க. இந்தா இந்தா அ இந்தா....இது பருத்திவீரன் நாக்க மூக்க:இது திருப்பாச்சி நாக்க மூக்க:

Tuesday, May 27, 2008

3. பசுமை நிறைந்த நினைவுகளே

சீரியல்ன்னாலே அழுகாச்சின்னு நாமெல்லாம் ஒதுக்கி தள்ளும் காலம் இது. ஆனாலும் பலர் பைத்தியமாய் திரியும் ஒரு சீரியல் கனா காணும் காலங்கள். அப்படியே நம் பள்ளி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியதுபோல இருந்தததுதான் அதற்கு காரணம். காமேடி, கடி ஜோக்ஸ், நட்புன்னு பசங்க கலக்கியிருப்பாங்க. 300 எபிசோட் வரை வந்துடுச்சு. இப்போ கொஞ்சம் சீரியல்தனமா இழுத்தடிக்கிறாங்க. நடிக்கிற பசங்க ஒரு படி முன்னேறி இப்போ வெள்ளித்திரைக்கும் வர ஆரம்பிச்சுட்டாங்க.

பட்டாளம்ன்னு ஒரு படம். லிங்குசாமி தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. நதியாதான் படத்தின் ஹீரோயின். பள்ளி கரஸ்பாண்டனா வர்ராங்க. அதுல பத்து பசங்க. சுட்டி பசங்க. அதுல ஒருவனா வினித்தா நடிக்கிற இர்ஃபான் தேர்வாயிருக்கார். மீதி பசங்க யார் யாருன்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்.

சொல்ல வந்த மேட்டரை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கேன் பாருங்க. கனா காணும் காலங்கள்ல ஒரு farewell party. அதுல பல பாடல்கள் கலவையில ஒரு ரீமிக்ஸ். வினித் அண்ட் கோ பாடுற மாதிரி. நீங்களும் பாருங்களேன்.

Monday, May 26, 2008

2. என்னை கொல்லாதே பெண்ணே

"கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னை கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்து உன்னை நாடினும்
ம்ம்ம்ம்ம்ம்..."

நம்ம தமிழ் பாடல்களில் முக்கால்வாசி பாடல்கள் காதல் பாடல்கள். அதுலேயும் காதலியை தேவதை, நிலவு, பூன்னு ஓவரா வர்ணிப்பாங்க. சில நேரங்களில் எனக்கே "இது கொஞ்சம் டூ மச்சா தெரியுதே!!"ன்னு தோணும். ஒரு படத்தை பார்த்தோம்ன்னா (ஒரு சாதாரண காதல் படம்ன்னு வச்சிக்குவோமே) ஒரே கதைதான் ஓடும். அதாவது ஹீரோ ஹீரோயினை பார்ப்பாரு. கண்டதும் காதல். அதுக்கு ஒரு டூயட். அப்புறம் கொஞ்சம் மோதல். அதுக்கு பிறக்கு காதல். அதுக்கும் ஒரு டூயட். அதுக்குள்ள காதலியோட அப்பா இல்லைன்னா வேற யாராவது வில்லன். ஹீரோ எப்படியாவது கஷ்டப்பட்டு க்ளைமேக்ஸில் சண்டை போட்டு காதலியோட சேர்ந்திடுவாரு.

ஆனால், இந்த பாடல் சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் காதலை ஒரு விளையாட்டாய் பயன்படுத்தி ஒரு ஆணின் மனதை நோகடிக்கிறாள். அவனும் (முட்டாளாக) தற்கொலை முயற்சி எடுக்கிறான். அடுத்து அவள் காதலிப்பது அவனின் நண்பனை. அவனுக்கு என்ன கதி? இப்படி மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இந்த பெண்ணின் கதிதான் என்ன? எல்லா பெண்ணும் இப்படியில்லை. ஆனால் இப்படிப்பட்ட பெண்களும் உண்டு என்று நமக்கெல்லாம் தெரியும். இந்த பாடல் அவர்களை மாற்றுமா?

மலேசியா உள்ளூர் கலைஞர்களின் தொகுப்பில் உருவானது இந்த பாடல். ஒரே பாடலில் ரசிக்கும் படியான காட்சியமைப்புடன் வசந்த் மற்றும் கண்ணாவின் குரலில்:

Sunday, May 25, 2008

1. ஒரு Farewell காட்சியுடன் Welcome பதிவு

எல்லாரும் முதல் பதிவுல வணக்கம் வந்தனம் என்று சொல்லி ஆரம்பிப்பாங்க. ஆனால் இந்த வலைப்பூவில் நான் ஒரு அழுகாச்சி காட்சியுடன் வணக்கம் சொல்லலாம்ன்னு இருக்கேன்..

24/7 ஃப்ரேம்ஸ் - நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ காட்சிகளை பார்க்கிறோம். அதில் சில நம் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்டு இருக்கும். சில முதல் தடவையிலேயே கண்ணில் நீர் கோர்த்து விடும். சில திரும்ப திரும்ப பார்க்க வேண்டும்ன்னு தோண வைக்கும். இப்படிப் பட்ட காட்சிகளை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோணும். அப்படி எனக்கு தோன்றியதால்தான் 24/7 ஃப்ரேம்ஸ் உதயமானது. (தலைப்பு தேர்ந்தெடுத்து கொடுத்த சென்ஷி அண்ணாவுக்கு நன்றி).

சரி. இன்றைய காட்சிக்கு வருவோம். உள்ளம் கேட்குமே படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். அதில் நட்பின் ஆழத்தை அழகாய் சொன்ன ஜீவாவின் ஸ்டைலுக்கு ஒரு சல்யூட். ஒரு காட்சியில் ஷாம் பேசும் வசனம் இது:

"தெரிஞ்சோ தெரியாமலோ உங்க கண்ணாடி மனசுல கல் வீசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. நம்ம காலேஜ் சில்லபஸ்ல சொல்லிக் கொடுத்தது கொஞ்சம். ரொம்ப கொஞ்சம். சில்லபஸ்க்கு வெளியில நாம கத்துக்கிட்டதுதான் அதிகம். ரொம்ப அதிகம். காலேஜுக்குள்ள நுழையும்போது விரும்பினது எல்லாம் அமையும் அதுதான் வாழ்க்கைன்னு நென்ச்சேன். இப்போ அமைஞ்சதை விரும்பு. அதுதான் வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டேன். காலேஜுல சேர்ந்தபோது நம்ம மனசு எழுதாத வெள்ளை தாள் போல சுத்தமா இருந்தது. இப்போ காலம் என்கிற பேனா ஒவ்வொரு மனசுலயும் ஏதோ ஒன்னு எழுதியிருக்கு. ஒரு மனசுல காதல். ஒரு மனசுல கண்ணீர். ஒரு சில மனசுல அவமானங்கள். கனவுகளுக்கு பின்னால் போகுறதை விட, காலத்துக்கு பின்னால் போறதுதான் எதார்த்தம். வெற்றி.. வெற்றி மட்டும்தான் வாழ்க்கையா இருந்தா மனுஷன் தலை வெடிச்சு செத்தே போயிருப்பான். சின்ன சின்ன தோல்வி வேணும். தோல்வியை ரசிக்க முடியலைன்னா கூட மதிக்கனும். என்னைக்காவது ஒரு நாள் கடவுள் என் முன்னாடி வந்து உன் ஆசை என்னான்னு கேட்டால், நான் கேட்பேன். மீண்டும் அந்தா காலேஜ் லைவ் வேணும். மீண்டும் அந்த சுகம் வேணும். அந்த வலி வேணும். செத்து செத்து பொழைக்கிற அந்த ஆனந்த அவஸ்தை வேணும்.. அப்போவாவது நம்ம கனவுகள் நனவாகணும். கடைசியா கேட்கிறேன். தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க. உலகம் ரொம்ப சின்னது. எங்கேயோ எப்படியோ நாம சந்திச்சுதான் ஆகணும். அப்போ வார்த்தைகள் ஊமையான இடத்துல கண்ணீர் பேச ஆரம்பிக்கும். அந்த நாளை நினைக்கும்போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வந்ந்தால் தள்ளி நின்னு அழுது பார்ப்போம்."வாவ்.. என்ன ஒரு அருமையான வரிகள். ஒவ்வொரு தடவை இந்த படம் பார்க்கும்போதும், முக்கியமாக இந்த காட்சியை பார்க்கும்போது என்னையும் அறியாமல் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது வந்துவிடும். உருக்கமான காட்சியும் கூட. அட, நம்ம அசின், லைலா, பூஜா, ஆர்யா கண்களில் கூட கண்ணீர் (அது க்ளீசரின் வேலையா கூட இருக்கலாம்). பார்த்தீங்களா?