Thursday, January 22, 2009

71. காதலிச்சா தலைக்கு மேலே பல்ப் எறியுமா? மணி அடிக்குமா?

தலைப்பை பார்த்ததுமே என்ன கதைன்னு தெரிஞ்சிருக்கும். அட ஆமாங்க.. சக்கை போடு போட்ட மொழி படத்துலதான் இந்த தத்துவத்தை(!!) சொன்னாங்க.. ”சரி சரி.. இப்போ என்ன.. ஒரு ஊமை பெண்ணுக்கும் இசையமைப்பாளனுக்கும் நடுவில் நடக்கும் காதல் கதையை பற்றிதானே பேசப்போற?”ன்னு சொல்றீங்களா?

இல்லைங்க.. ப்ரித்விராஜ், ஜோதிகா காதல் பற்றி படம் வெளிவந்த புதுசுல பலரும் அலசி ஆராய்ஞ்சிருப்பீங்க. அந்த காட்சிகளில் சில மனதை வருடும் காவியம்மும் இருக்கு, நல்ல கருத்தும் இருக்கு, நகைச்சுவையும் கலந்திருக்கு, வேதனைகளும் படத்தை பார்த்த நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கு.

இங்கே இன்னைக்கு ப்ரகாஷ்ராஜ், சுவர்ண்மால்யா காட்சி பார்க்கலாம். ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி கலந்திருக்கும்.. ஜுஸ்ட் ஒரு 5 நிமிடத்துலேயே நட்பு காதலாகி, வீட்டில் அனுமதி பெற்று திருமணம் வரை சென்றிருக்கும். பிரகாஷ்ராஜ் இந்த கட்டத்துல பேசுற ஒவ்வொரு வசனமும் ஷாக்கிங்காகவும், காமெடியாகவும் இருக்கும்..

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். யாரையாவது நீங்கள் தேவாலயத்திலோ கோவிலிலோ பார்க்குறீங்கன்னு வச்சுக்கோங்க..அவங்க கிட்ட இப்படி கேட்பீங்களா?

“இன்னைக்கு ரெக்கார்டிங் இல்ல; போரடிச்சது. சரி உங்களை நேருல பார்த்து நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்தேன்..”

இதை யாரிடமாவது சொல்லிப்பாருங்களேன். அவங்களுக்கு ஹர்ட் அட்டாக்கே வந்திருக்கும். ;-)

சரி, நீங்கள் காட்சியை பார்த்து ரசிங்க:

4 Comments:

said...

ஹைய்யா எனக்குப் பிடிச்ச காமெடி :))

said...

me the first ah:))

said...

//காதலிச்சா தலைக்கு மேலே பல்ப் எறியுமா?

இங்கு பெரும்பாலூம் பவர்கட்டு இதுல எங்க பல்ப எறியிரது

//மணி அடிக்குமா? //
மணி அடிக்காது சனி தான் பிடிக்கும்

said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்