Sunday, April 26, 2009

74. சித்தார்த் நடித்த முதல் படம் எது? (பாய்ஸ் இல்லை)

எல்லாரும் சொல்றாங்க சித்தார்த்துடைய முதல் பாடம் பாய்ஸ் என்று.. இல்லை.. அவர் அதுக்கு முன்னாடியே படத்தில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ் படம். அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் திரைப்படத்தில்..

என்ன படம்ன்னு தெரியணுமா? இந்த காட்சியை பாருங்க..



இது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு காட்சி. பேருந்தில் மாதவன் பின்னால ஒரு அழகான பையன் பேக் மாட்டிக்கிட்டு சிரிச்சு பேசிட்டு இருக்காரே, அவர் யாருன்னு தெரியுதா?

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் சித்தார்த் நடிகனாவதற்க்கு முன் இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனரா இருந்தார். உதவி இயக்குனர்கள் தங்கள் குருவின் படங்களில் அப்பப்போ இந்த மாதிரி துக்கடா கேரக்டரில் நடித்திருப்பார்கள்.. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த் நடித்து கலக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சிதான் இது (அடிக்க வர்றீங்களா? வேணாம் விடுங்க..) :-P

10 Comments:

YUVA said...

good. information, whatsoever is helpful sometimes isnt?

ஆயில்யன் said...

அட இதை நான் கூட உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் பாஸ்!

உங்களுக்கு இப்பத்தான் தெரியுமாஆஆ!

ஹய்யோ ஹய்யோ :)))

gils said...

avvvvvvvvvvvvvvv...enna oru aaraichi...enna oru kandupudipu...chaanclea

சந்தனமுல்லை said...

ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா! முடியலை!
//அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த் நடித்து கலக்கிய// இது கொஞ்சம் ஓவரா தெரியலை! :-)

கானா பிரபா said...

ஆக்கா, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

FunScribbler said...

very nice post. very informative! :)

கோபிநாத் said...

ஆகா...என்ன ஒரு உழைப்பும்மா..கண்ணு எல்லாம் கலங்கிடுச்சி ;)

வால்பையன் said...

சித்தார்த் மணிரத்த்னத்தின் உதவி இயக்குனர்!

உதவி இயக்குனர்கள் ஆங்காங்கே தலை காட்டுவது இயல்பு தானே!

மாதவனே ஆரம்பத்தில் ஓரத்தில் தலைகாட்டியவர் தானாம்!

ஆர்வா said...

உங்களோட வீடியோ தொகுப்புகள் எல்லாமே அருமையா இருக்கு

kanagu said...

பகிர்வுக்கு நன்றிங்க..

ஏன் இப்ப எல்லாம் பதிவு போடுறது இல்ல???